என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நோக்கியா 9 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் நோக்கியா 9 வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

    முன்னதாக வெளியான புகைப்படங்களை போன்று நோக்கியாவின் அல்டிமேட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவதாக இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது. நோக்கியா 9 சார்ந்த தகவல்களை ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 750 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.57,000 முதல் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    நோக்கியா 9 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் QHD OLED, 1440x2560 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 / 845 பிராசஸர்
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 22 எம்பி பிரைமரி கேமரா
    - 12 எம்பி அல்லது 13 எ்மபி + 13 எம்பி செல்ஃபி கேமரா
    - 3800 எம்ஏஎச் பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ



    முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருந்தது. நோக்கியா 9 சார்ந்து இணையத்தில் வெளியான புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட கான்செப்ட் வீடியோ யூடியூப் சேனலில் வெளியானது.

    நோக்கியா 9 மட்டுமின்றி நோக்கியா 2 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக உருவாகும் நோக்கியா 2 மாடலில் 5.0 இன்ச் 720x1280 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட், 1 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நோக்கியா 9 கான்செப்ட் வீடியோவினை கீழே காணலாம்..,


    எச்டிசி நிறுவனத்தின் யு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இரண்டு யு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    எச்டிசி நிறுவனம் யு சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 2-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தது. எச்டிசி யு 11 பிளஸ் மற்றும் எச்டிசி யு 11 லைஃப் ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் பதிப்பு கொண்ட முதல் புகைப்படம் இம்முறை கசிந்துள்ளது.

    எச்டிசி யு 11 பிளஸ் புகைப்படங்கள் சீனாவின் TENAA தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் இந்த ஸ்மார்ட்போன் 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிபருக்கும் என்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.



    எச்டிசி யு11 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6 இன்ச் 1440x2880 பிக்சல் குவாட் எச்டி+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜிபி  / 6 ஜிபி ரேம்
    - 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0



    எச்டிசி யு11 லைஃப் ஆண்ட்ராய்டு ஒன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
    - அட்ரினோ 508 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 16 எம்பி பிரைிமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 2600 எம்ஏஎச் பேட்டரி

    எச்டிசி யு11 லைஃப் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சஃபையர் புளூ மற்றும் ஐஸ் வைட் நிறங்களில் வெளியிடப்படலாம் என்றும் எச்டிசி யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் கருப்பு நிறம் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் சார்ந்த முழு விவரங்கள் அடுத்த மாதம் வாக்கில் தெரியவரும்.
    சியோமி நிறுவனம் 4K எச்.டி.ஆர். வசதி கொண்ட சியோமி Mi டிவி 4C சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வித அளவுகளில் வெளியிடப்பட்டுள்ள டிவி சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனம் Mi டிவி 4C தொலைகாட்சியை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 43 இன்ச் மற்றும் 55 இன்ச் என இரண்டு அளவுகளில் வெளியிடப்பட்டுள்ள புதிய டிவி 9 மில்லிமீட்டர் பெசல்களை கொண்டுள்ளது. புதிய டிவியில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் முன்னதாக சியோமி அறிமுகம் செய்த Mi டிவி 4A மாடலை போன்றே இருக்கிறது.

    FHD ரெசல்யூஷன் கொண்ட 4.3-இன்ச் ஸ்கிரீன் கொண்ட சியோமி Mi டிவி 4C மாடல் விலை 1849 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,000 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. 55-இன்ச் ஸ்கிரீன் கொண்ட மாடலில் 4K HDR ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 2649 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சியோமி Mi டிவி 4C மாடலின் 43-இன்ச் மாடலில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் 55-இன்ச் மாடலில் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புதிய Mi டிவி 4C 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T962 பிராசஸர், Mali 450 GPU வழங்கப்பட்டுள்ளது.



    இத்துடன் இரண்டு மாடல்களிலும் டூயல்-பேண்ட் வைபை மற்றும் ப்ளூடூத் 4.2 வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் டால்பி மற்றும் DTS திரைப்படங்களை பார்க்க எவ்வித கூடுதல் பிளேயரும் தேவைப்படாது. புதிய Mi டிவி 4C இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    சியோமி Mi டிவி 4 சீரிஸ் தொலைகாட்சி சீரிஸ் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற CES தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 49-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்கிரீன் அளவு கொண்ட தொலைகாட்சிகள் 4.9 மில்லிமீட்டர் அளவு மெல்லிய மெட்டல் பாடி வழங்கப்பட்டுள்ளது. இவை சில ஸ்மார்ட்போன்களை விட மெலிதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    நாடு முழுக்க சுமார் 7.5 லட்சம் பொது வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க மத்திய அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியா முழுக்க சுமார் 7.5 லட்சம் பொது வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஊரக பகுதிகளில் அதிவேக இண்டர்நெட் இணைப்பை வழங்கப்பட இருக்கிறது. இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல். வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    அரசு சேவைகளை இணையம் மூலம் பெறவும், டிஜிட்டல் வளர்ச்சியின் அங்கமாகவும் இந்த திட்டத்தின் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை அனைவரும் செலுத்தக் கூடிய விலையில் இந்த திட்டம் வழங்கும் என டெலிகாம் தலைவர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.



    உலகின் பல்வேறு நாடுகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளில் வைபை பக்கபலமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் வைபை பயன்பாடு மந்தமான சூழலிலேயே இருந்து வருகிறது. 2016-ம் ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க வெறும் 31,000 ஹாட்ஸ்பாட்கள் மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.

    இதுவே பிரான்ஸ், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற நாடுகளில் முறையே 1.3 கோடி, 98 லட்சம் மற்றும் 56 லட்சம் ஹாட்ஸ்பாட்கள் இருக்கின்றன. ஆப்டிக் ஃபைபர் நெட்வௌர்க் மூலம் வைபை ஹாட்ஸ்பாட்களை அனைவருக்கும் பயன்தரும் வகையில் அமைக்க முடியும்.

    அந்த வகையில், கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் பொருத்தி சீரன வேகத்தில் இண்டர்நெட் வழங்கும் வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க முடியும் தற்சமயம் 75,000 GPs என்ற இலக்கு எட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 1 லட்சம் GPக்களை எட்டுவதை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சுந்தரராஜன் தெரிவித்தார்.



    மத்திய டெலிகாம் அமைச்சகம் சார்பில் மாபெரும் வைபை சேவை வழங்குவது குறித்த விவாதத்திற்கு வெவ்வேறு மாநில அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் டிஜிட்டல் சேவைகளை வழங்குவது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கி வந்தாலும், இவற்றில் பல சேவைகளும் ஊரக பகுதிகளில் வேகமாக இருப்பதில்லை. புதிய திட்டத்தின் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை வைபை மூலம் ஊரக பகுதிகளில் வழங்க முடியும். என்றும் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.
    எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போத்தி கேமரா அம்சம் கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    எச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று நோக்கியா 7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்கள் நிறைந்த நோக்கியா 7 ஸ்மார்ட்போன் 7000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுவதோடு 3D தெர்மோஃபார்மிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன்களில் போத்தி கேமரா மோட் கொண்ட F/1.8 அப்ரேச்சர் லென்ஸ் கொண்டுள்ளது. டூயல்-சைட் மோட் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் இந்த அம்சம் ஒரே சமயத்தில் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களை பயன்படுத்தும். இதன் பில்ட்-இன் கேமரா ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் லைவ்-ஸ்டிரீமிங் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.



    நோக்கியா 7 சிறப்பம்சங்கள்:


    - 5.2 இன்ச் IPS 2.5D, 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி
    - பின்புறம் கைரேகை ஸ்கேனர்

    முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 7 விற்பனை அக்டோபர் 24-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் CNY 2,499 அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,000 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் CNY 2,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளில் விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. புதிய நோக்கியா 7 ஸ்மார்ட்போன் நோக்கியா OZO ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் 360 கோணத்தில் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் 2017 பிக்சல் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விழாவில் பிக்சல் பட்ஸ் இயர்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. நிஜ நேரத்தில் மொழி பெயர்க்கும் வசதி கொண்ட பிக்சல் பட்ஸ் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 2017 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, பல்வேறு புதிய சாதனங்களையும் கூகுள் அறிமுகம் செய்திருந்தது. பிக்சல் 2, பிக்சல் 2 XL, டே டிரீம் வியூ விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர், கூகுள் பிக்சல் புக், கூகுள் கிளிப்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது.

    கூகுள் நிறுவனத்தின் புதிய இயர்போன்களை அந்நிறுவனம் கூகுள் பிக்சல் பட்ஸ் என அழைக்கிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக கூகுளின் வயர்லெஸ் ஹெட்போன்களாக பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் போன்று இல்லாமல் பிக்சல் பட்ஸ் முழுமையாக வயர்லெஸ் வசதி கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒற்றை வையர் கொண்டுள்ளது.

    Pic - Pixel Buds 1



    இயர்பீஸ் சாதனத்தை ஸ்வைப் செய்தே முழுமையாக இயக்கும்படி பிக்சல்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை இயக்குவது மிக எளிமையானதாக இருக்கிறது. இத்துடன் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதி கொண்டிருப்பதால் மொழி தெரியாதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி பேச முடியும். ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதை போன்றே நிஜ நேரத்தில் மொழி தெரியாதவர்களுடன் மொழி பெயர்ப்பு வசதி சீராக இயங்குகிறது.

    பிக்சல் பட்ஸ் வலது புறத்தில் தட்டினால் இசையை இயக்குவது மற்றும் நிறுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும். இதே போல் முன்புறம் மற்றும் பின்புறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் இசையின் சத்தத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும். இதேபோல் அழுத்தி பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் சேவை ஆன் செய்யப்படும்.

    Pic - Pixel Buds 2



    இந்த அம்சத்தை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவும், ஏற்கவும் முடியும். பிக்சல் பட்ஸ் உடன் வழங்கப்படும் கேஸ் இயர்போன்களை சார்ஜ் செய்யும் பணியை கவனித்து கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரம் பயன்படுத்த முடியும் என கூறப்படுவதோடு சாதனத்தை நான்கு முறை சார்ஜ் செய்யும் என்றும் கூறப்படுகிறது. கூகுள் பிக்சல்பட்ஸ் விலை 159 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படும் பிக்சல்பட்ஸ் இந்திய விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹெட்போன்களுடன் வழங்கப்படும் கேஸ் பேட்டரி பேக் போன்று செயல்படுவதோடு எவ்வித பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட ரெட்மி 4A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி  நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ரெட்மி 4A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ரெட்மி 5A ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டல் போன்ற மேட் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மெட்டல் வடிவமைப்பை விட எடை குறைவாக இருக்கிறது.

    137 கிராம் கொண்டிருக்கும் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் எட்டு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய MIUI-9 சார்ந்த ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய சாதனத்திலும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படவில்லை. எனினும் இதன் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் எச்டி, 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
    - 2.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி

    புதிய சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போனில் MIUI 9 சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் அசிஸ்டண்ட், ஸ்மார்ட் ஆப் லான்ச்சர், இமேஜ் சர்ச், குவிக் ரிப்ளை மற்றும் நோட்டிபிகேஷன் மேனேஜ்மென்ட், புதிய ஹோம் ஸ்கிரீன் மேம்பாடுகள் மற்றும் மல்டி டாஸ்கிங் அம்சஙகள் வழங்கப்படுகிறது.

    சீனாவில் ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் விலை CNY599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சீனாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெற இருக்கிறது.
    ஹூவாய் நிறுவனத்தின் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேட் 10 ப்ரோ சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனத்தின் மேட் 10 ஸ்மார்ட்போனுடன் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினையும் ஜெர்மனியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.0 இன்ச் FHD+ஃபுல் வியூ OLED 18:9 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட் கொண்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு 8.0 சார்ந்த எமோடிகான் UI 8.0 கொண்டுள்ளது.

    டூயல் லெய்கா லென்ஸ் 12 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா, மற்றும் அழகிய செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு வசதி கொண்டுள்ள ஹூவாய் மேட் 10 ப்ரோ நிஜ நேரத்தில் கேமராவிற்கு ஏற்ற செட்டிங்ஸ் தேர்வு செய்து கொள்ளும். இத்துடன் உடனுக்குடன் எழுத்து, குரல் மற்றும் உரையாடல்களை மொழிமாற்றம் செய்யும் வசதி கொண்டுள்ளது.  

    3D கிளாஸ் வடிவமைப்பு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் ஹூவாய் மேட் 10 பின்புறம் கைரேகை ஸ்கேனர், 4ஜி வோல்ட்இ, மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பம் சாதனத்தை அதிவேகமாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் மேட் 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 பிராசஸர்
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 8.0 சார்ந்த EMUI 8.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 20 எம்பி + 12 எம்பி டூயல் கேமரா மற்றும் லெய்கா லென்ஸ்
    - f/1.6 அப்ரேச்சர், டூயல்-டோன் LED flash, PDAF, CAF, Laser AF, OIS, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர், இன்ஃப்ராரெட் சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67) வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை 802.11ac, ப்ளூடூத் 4.2 LE, GPS, NFC
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்ஏஎ் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய ஹூவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் டைட்டானியம் கிரே, மிட்நைட் புளூ, மோகா பிரவுன் மற்றும் பின்க் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 940 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.61,077 என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நவம்பர் 20-ம் தேதி முதல் துவங்குகிறது. 
    மோட்டோரோலாவின் மோட்டோ G5S மிட்நைட் புளூ எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக மோட்டோ G5S ஸ்மார்ட்போன் ஃபைன் கோல்டு மற்றும் லூனார் கிரே நிறங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி:

    மோட்டோரோலா நிறுவனத்தின் மிட்நைட் புளூ மோட்டோ G5S ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ஃபைன் கோல்டு மற்றும் லூனார் கிரே நிறங்களில் வெளியிடப்பட்ட நிலையில் இனி மி்ட்நைட் புளூ நிறத்திலும் மோட்டோ G5S ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

    இந்தியாவில் மோட்டோ G5S மிட்நைட் புளூ விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.12,999 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மாத தவணை முறை வசதி அக்டோபர் 21-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மோட்டோ G5S ஸ்மார்ட்போன் அனைத்து விற்பனை மையங்கள் மற்றும் மோட்டோ ஹப்களில் கிடைக்கிறது.



    மோட்டோ G5S சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
    - f/2.0 அப்ரேச்சர், 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி

    மோட்டோ G5S ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க டர்போ பவர் சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ளது.
    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 6சி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 6சி ப்ரோ ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட ஹானர் 6சி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஹானர் 6சி ப்ரோ ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த EMUI 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    பிளாக், கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள ஹானர் 6சி ப்ரோ EUR179 அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் ஹானர் 6சி ப்ரோ ஸ்மார்ட்போன் அதன் பின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஹானர் 6சி ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 3000 எம்ஏஎச் பேட்டரி

    இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 9i ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் ஹானர் 9i ஸ்மார்ட்போன் பைபேக் கியாரண்டியில் வழங்கப்படுகிறது. இதனால் ஹானர் 9i வாங்குவோர் ஒரு ஆண்டு பயன்படுத்தியதும் எக்சேஞ்ச் செய்தால் 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் பெற முடியும்.
    எச்எம்டி குளோபல் கடந்த மாதம் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது. புதிய நோக்கியா 8 விலை, மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    நோக்கியாவின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான நோக்கியா 8 விற்பனை இன்று (அக்டோபர்-14) துவங்கியுள்ளது. ஆன்லைனில் இன்று முதல் விற்பனைக்கு வரும் நோக்கியா 8, ஆஃப்லைன் சந்தைகளில் நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாட்டின் முன்னணி மொபைல் போன் விற்பனையாளர்களான க்ரோமா, சங்கீதா மொபைல்ஸ், பூர்விகா, ரிலையன்ஸ் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் நோக்கியா 8 விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டீல், டெம்பர்டு புளூ மற்றும் பாலிஷ்டு புளூ நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 8 சில வாரங்கள் கழித்து பாலிஷ்டு காப்பர் நிறத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் விற்பனையை பொருத்த வரை நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி அளவு இலவச 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.



    அதன்படி ரூ.309 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி அளவு கூடுதல் டேட்டா முதல் 10 ரீசார்ஜ்களுக்கு ஆகஸ்டு 31, 2018 வரை வழங்கப்படுகிறது. இத்துடன் நோக்கியா மொபைல் கேர் கான்சீர்ஜ் சேவை நாட்டின் 50 நகரங்களில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சேவைகளை வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

    நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் ஆடியோ அம்சம் இருக்கிறது. ஹூவாய் சமீபத்தில் வெளியிட்ட P10 ஸ்மார்ட்போன் போன்றே சரவுண்டு சவுண்டு அம்சம் மற்றும் நோக்கியாவின் சொந்த OZO விர்ச்சுவல் ரியாலிட்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 6000-சீரிஸ் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு IP54 சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது.



    5.3 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆணட்ராய்டு நௌக்கட் 7.1.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு விரைவில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3090 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0 RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரே சமயத்தில் முன்பக்க கேமரா மற்றும் பிரைமரி கேமராக்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    எச்எம்டி குளோபல் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் ரென்டர் வீடியோ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரியவந்துள்ள சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்து எச்எம்டி குளோபல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய ஸ்மாபர்ட்போனின் ரென்டர் வீடியோ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்தவகையில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிய கேப்சியூல் பிரைமரி கேமரா வடிவைப்பு, எல்இடி பிளாஷ் லைட் உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் பிரைமரி கேமராவின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டூயல் வளைந்த ஸ்கிரீன், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை காணப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 9 சாதனத்தில் 5.5 இன்ச் QHD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் வெளியீடு சார்ந்து எவ்வித தகவலும் வழங்கப்படாதவில்லை.

    சமீபத்தில் எச்எம்டி குளோபல் அறிமுகம் செய்த நோக்கியா 8 விற்பனை துவங்க இருக்கிறது. இந்தியாவில் நோக்கியா 8 விலை ரூ.35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் விற்பனைக்கு வரும் நோக்கியா 8 க்ரோமா, ரிலையன்ஸ், சங்கீதா மொபைல், பூர்விகா போன்ற ஆஃப்லைன் வர்த்தகர்களிடமும் விற்பனைக்கு வருகிறது.

    நோக்கியா 9 ரென்டர் வீடியோவினை கீழே காணலாம்..,


    ×