என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    மோட்டோ இந்தியா நிறுவனத்தின் மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ X4 வெளியீட்டிற்கான அழைப்பிதழ்களை மோட்டோ வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மோட்டோ இந்தியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் நவம்பர் 3-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், இதன் வெளியீடு தள்ளிப்போனது.

    இந்த ஆண்டு நடைபெற்ற IFA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போனில் 12 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா, பேக்கிரவுண்டு பிளர், போர்டிரெயிட், செலக்டிவ் பிளாக் மற்றும் வைட் மற்றும் டூயல் ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் வேகமாக ஃபோகஸ் செய்யும்.



    இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா, 4 எம்பி அடாப்டிவ் லோ-லைட் மோட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோ X4 IP64 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் கொண்டுள்ளது.

    மோட்டோ X4 சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி LTPS IPS டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 14nm பிராசஸர்
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
    - டூயல் சிம்
    - 12 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃHி கேமரா
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி, டர்போ சார்ஜிங்

    சூப்பர் பிளாக் மற்றும் ஸ்டெர்லிங் புளூ நிறங்களில் கிடைக்கும் மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரேசர் போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. அல்ட்ராமோஷன் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    லண்டன்:

    ரேசர் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரேசர் போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நெக்ஸ்பிட் நிறுவனத்தை கைப்பற்றிய சில மாதங்களில் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்மார்ட்போனில் 5.72 இன்ச் குவாட் எச்டி, 120 Hz அல்ட்ராமோஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளதால் கேமிங் செய்ய சீரான அனுபவத்தை வழங்கும்.

    இந்த ஸ்மார்ட்போனின் அல்ட்ரா மோஷன் அடாப்டிவ் ரீஃப்ரெஷ் தொழில்நுட்பமானது GPU மற்றும் டிஸ்ப்ளே கொண்டு அதிக திறனுள்ள பயன்பாடுகளின் போதும் ஸ்மார்ட்போனின் வேகம் குறையாமல் பார்த்து கொள்ளும் என ரேசர் தெரிவித்துள்ளது. ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.12 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
     
    டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. 8 மில்லிமீட்டர் அளவு மெல்லிய அலுமினியம் பாடி மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்டுவதோடு வேகமாக சார்ஜ் செய்ய குவால்காம் குவிக் சார்ஜ் 4+ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    ரேசர் போன் சிறப்பம்சங்கள்:

    - 5.72 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் எச்டி IGZO LCD அல்ட்ரா மோஷன் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீ்ட்டிக்கும் வசதி
    - ஆணட்ராய்டு 7.1.1 நௌக்கட், ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75 வைடு-ஆங்கிள் லென்ஸ்
    - 12 எம்பி இரண்டாவது கேமரா, f/2.6 சூம் லென்ஸ், PDAF, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செலஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 4+



    புதிய ரேசர் போன் விலை 699.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,160 / 749.99 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.56,350 / £699.99 அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரேசர் போன் விற்பனை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் நவம்பர் 17-ம் தேதி துவங்குகிறது.

    இத்துடன் 1337 ரேசர் போன் ஸ்பெஷல் எடிஷன் யுனிட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பச்சை நிறம் கொண்ட ரேசர் மூன்று தலை பாம்பு சின்னம் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான கார்பன் இந்தியாவில் K9 ஸ்மார்ட் செல்ஃபி எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 8 எம்பி செல்ஃபி கேமரா, நைட் மோட் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    5.0 இன்ச் FWVGA 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராசஸர் கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    கார்பன் K9 ஸ்மார்ட் செல்ஃபி சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 854x480 பிக்சல் FWVGA 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2300 எம்ஏஎச் பேட்டரி

    இந்தியாவில் கார்பன் K9 ஸ்மார்ட் செல்ஃபி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைப்பதோடு இந்தியாவில் ரூ.4,890 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டெலீட் ஆப்ஷன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த டெலீட் (Delete for Everyone) அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் புதிய அப்டேட் மூலம் தாங்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க முடியும். இந்த அம்சம் உங்களது போன் மட்டுமின்றி நீங்கள் அனுப்பியவரின் போனிலும் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை திரும்ப பெற குறிப்பிட்ட குறுந்தகவலை தேர்வு செய்து டிராஷ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.



    இவ்வாறு கிளிக் செய்ததும் குறுந்தகவல் உங்களுக்கு மட்டும் அழிக்கப்பட வேண்டுமா அல்லது அனைவருக்கும் அழிக்கப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் பாப் அப் மூலம் திரையில் தோன்றும். இதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் அனுப்பியவருக்கும் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டதை தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

    எனினும் இந்த அம்சம் குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் செயல்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நிமிடங்களுக்கு பின் அனுப்பிய குறுந்தகவலை அழிக்க முடியாது. மேலும் நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை நீங்கள் அனுப்பியவர் பார்த்துவிட்டால் இந்த அம்சம் வேலை செய்யாது. இத்துடன் நீங்கள் அழிக்க முயன்ற குறுந்தகவல் அழிக்கப்படாத பட்சத்தில் அதற்கான நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும்.

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் புதிய விண்டோஸ் போன்கள் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
    எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.



    நோக்கியா 2 சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி LTPS  LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட்
    - அட்ரினோ 304 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4100 எம்ஏஎச் பேட்டரி

    புதிய நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் பாலிகார்பனைட் பேக் கொண்டிருக்கிறது. IP 52 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. நவம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு வரயிருக்கும் நோக்கியா 2 விலை 99 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.7465 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர்போனின் முதற்கட்ட விற்பனை நடைபெற்றுள்ள நிலையில், அதன் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர்போன் இந்தியாவில் ஆகஸ்டு மாத வாக்கில் விற்பனை செய்யப்பட்டது. Kai இயங்குதளம் கொண்டு இயங்கும் ஜியோபோன் தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியாகியிள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ சார்பில் புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பதாகவும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. தற்போதைய ஜியோபோன் Kai இயங்குதளறம் கொண்டிருக்கிறது. இது ஃபயர்ஃபாக்ஸ் இயங்குதளத்தின் ஒரு பதிப்பு என்றும் முதற்கட்ட ஜியோபோன் விற்பனையில் சுமார் 60 லட்சம் யுனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    அந்தவகையில் ஜியோ பீச்சர்போனிற்கென பிரத்தியேக திட்டத்தை ஜியோ வகுத்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் கார்பன் மற்றும் செல்கான் நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

    பாரதி ஏர்டெல் போன்றே வோடபோன் நிறுவனமும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பாரத் 2 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. ஜியோவுடன் நெருக்கமான நபர் வழங்கியுள்ள தகவல்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஜியோபோன் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஜியோபோனில் இயங்கும் Kai இயங்குதளத்தில் பிரபல செயலிகளை இயக்கும் வசதி கிடையாது.



    இதனால் ஜியோ சார்பில் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் மற்றும் யூடியூப் போன்ற சேவைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் கூகுள், மற்றும் பேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஜியோபோனின் விலை சார்ந்த தகவல்கல் அறியப்படவில்லை, மேலும் இந்த சாதனத்துடன் வழங்கப்பட இருக்கும் ஜியோ திட்டங்களும் வித்தியாசமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பென்ச்மார்க்கிங் தளத்தில் கசிந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் GFXBench பென்ச்மார்க்கிங் தளத்தில் வெளியாகியுள்ளது. சாம்சங் SM-A730F என்ற குறியீட்டு பெயருடன் வெளியாகியுள்ள தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 7885 14nm பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 6 இன்ச் FHD+18:9 இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் 16 எம்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், முன்பக்கம் மினிமல் பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி A7 (2018) எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்டல் ஃபுல் எச்டி+இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - 2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7885 14nm பிராசஸர், Mali-G71 GPU
    - 6 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 (நௌக்கட்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

    முழுமையான மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் என கூறப்படும் சாம்சங் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஐபோன் X வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஐபோன் X வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 70 சதவிகித பைபேக் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் X முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.1,999 மட்டும் செலுத்த வேண்டும். ஐபோன் X வாங்கும் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ரீடெயில், ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம், மை ஜியோ செயலி அல்லது அமேசான் வலைத்தளங்களில் முன்பதிவு செய்ய முடியும்.

    ஜியோ அறிவித்துள்ள பைபேக் சலுகை செப்டம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை பெற முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஐபோன் X வாங்கி 12 மாதங்களில் திரும்ப வழங்கும் போது 70 சதவிகித பைபேக் பெற முடியும்.

    இந்த சலுகை மாதம் ரூ.799 மற்றும் அதற்கும் அதிக விலையில் ஜியோ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ பைபேக் சலுகை ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சாதனங்களை வாங்குவோருக்கும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெறவும் வாடிக்கையாளர்கள் அதே தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.



    ஐபோன் X வாங்கும் போது மை ஜியோ செயலியை டவுன்லோடு செய்து பைபேக் சலுகைக்கு பதிவு செய்ய வேண்டும். ஐபோன் X சாதனம் முழுமையாக வேலை செய்யும் நிலையில், ஐபோன் வாங்கும் போது வழங்கப்பட்ட அனைத்து சாதனங்களுடன் திரும்ப வழங்கப்பட வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

    ஆப்பிள் சார்பில் பைபேக் சலுகையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்கப்பட்ட ஐபோன்களின் IMEI எண் கொண்டு உறுதி செய்யப்படும். ரிலையன்ஸ் ஜியோ விதிமுறைகளில் ஐகிளவுட் லாக்டு ஐபோன், ஐபோனில் சேதம் அல்லது சீராக வேலை செய்யாத ஐபோன்களின் பைபேக் விவகராங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் எவ்விதங்களிலும் பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளது.  



    ரிலையன்ஸ் ஜியோ 70 சதவிகித பேபைக் விதிமுறைகள்:


    - பைபேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ஒவ்வொகு மாதமும் ரூ.799க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பிரீபெயிட் பயனர்களுக்கு வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    - ரிலையன்ஸ் ஜியோ ரூ.799 திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி அளவு 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    - ஐபோன் X சாதனத்தின் விலையில் 70 சதகவிகித தொகை திரும்ப வழங்குவதாக ரிலையனஸ் ஜியோ தெரிவித்துள்ளது. ஐபோன் X (64 ஜிபி) மாடல் இந்தியாவில் ரூ.89,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 70 சதவிகிதம் 62,300 ஆகும். இதனால் ஒரு ஆண்டிற்கு பின் பயனர்கள் ரூ.71,400 பெற முடியும்.

    - இந்த திட்டத்தின் படி பயனர்கள் புதிய ஐபோன் வாங்கும் போது ரூ.10,000 வரை ரீசார்ஜ் வடிவில் கூடுதலாக செலுத்துவர். கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது கூடுதலாக ரூ.10,000 வரை கேஷ்பேக் பெற முடியும்.

    இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் X முன்பதிவுகள் அக்டோபர் 27-ம் தேதி மதியம் 12.31 மணிக்கு துவங்கியது. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு துவங்கிய அரை மணி நேரத்திலேயே விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது.



    ஐபோன் X சிறப்பம்சங்கள்:

    ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டாஸ்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது.

    முக அங்கீகாரம் (face recognition) வழங்க டூயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் X 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள புதிய ஐபோன் 12 எம்பி பிரைமரி டூயலே கேமரா அமைப்பு செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.

    இத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்து அந்நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்னப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
    சீயோல்:  

    ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் 2018-ம் ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு என சாம்சங் நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கொரிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் சாம்சங் சார்பில் பிதிவிடப்பட்டுள்ள வரைபடங்கள் LetsGoDigital மூலம் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சாம்சங் பதிவிட்டுள்ள வரைபடங்களின் தலைப்பில் மடிக்கக்கூடிய மின்சாதனம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்த வரைபடங்கள் மடிக்கக்கூடிய கிளாம்ஷெல் வடிவமைப்பு மற்றும் மிகப்பெரிய ஹின்ஜ் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.  மேலும் LetsGoDigital வெளியிட்டுள்ள தகவல்களில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

    இரண்டு டிஸ்ப்ளேக்களில் ஒன்று ஒருபுறத்தில் இருந்து மடிக்க முடியும், மற்றொரு திரையை வெளிப்புறமாக இருக்கிறது, பிளிப்போன் போன்று மடிக்கும் போது இந்த டிஸ்ப்ளே காட்சியளிக்கும்.



    வரைபடங்களில் காணப்படும் ஹின்ஜ் பார்க்க சர்ஃபேஸ் புக் போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்கிரீன் நடுப்புறத்தில் இருந்து மடிக்கும் போதும் சீராக வேலை செய்யும். தற்சமயம் வெளியாகியுள்ள வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புகளை கொண்டு பார்க்கும் போது ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பார்க்க பெரியதாக காட்சியளிக்கிறது.

    ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் மிக பெரியதாக இருப்பதால் பாக்கெட்டில் எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் சாம்சங் நிறுவனம் சீராக வேலை செய்யும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X விற்பனைக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. புதிய ஐபோன் X விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஐபோன் X ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியா உள்பட உலகின் 55 நாடுகளில் துவங்கியுள்ளது. முன்பதிவு இன்று (அக்டோபர் 27) துவங்கியதை தொடர்ந்து ஐபோன் X விற்பனை அடுத்த வாரம், நவம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் ஐபோன் X வாங்க விரும்புவோர் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் முன்பதிவு செய்ய முடியும். இந்த தளங்களில் முன்பதிவு மதியம் 12.31 மணிக்கு துவங்குகிறது. கலிபோர்னியாவில் வெள்ளி நள்ளிரவு 12.01 மணிக்கு துவங்குகிறது. வலைத்தளம் மட்டுமின்றி ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களிலும் ஐபோன் X முன்பதிவு செய்ய முடியும்.

    இந்தியா மட்டுமின்றி ஐபோன் X விற்பனை அதோதரா, ஆஸ்திரேலியா, ஆஸ்த்ரியா, பஹ்ரைன், பெல்ஜியம், பல்கேரியா, கனடா, சீனா, குரோடியா, சைப்ரிஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கிரீன்லாந்து, குர்ன்சே, ஹாங்காங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஐயர்லாந்து, ஐல் ஆஃப் மேன், இத்தாலி, ஜப்பான், ஜெர்சி, குவைத், லத்வியா, லைடென்சென், லித்திவேனியா, லக்சம்பெர்க், மால்டா, மெக்சிகோ, மொனாகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போலாந்து, போர்ச்சுகல், போர்டோ ரிகோ, ரோமானியா, ரஷ்யா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்லோவேகியா, சால்வேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா மற்றும் அமெரிக்க விர்ஜின் தீவுகளில் நடைபெற இருக்கிறது.



    ஐபோன் X இந்திய விலை:

    ஐபோன் X இந்திய விலை ரூ,.89,000 (64 ஜிபி) முதல் துவங்குகிறது. இதன் 256 ஜிபி மாடல் ரூ,1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் X ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் X சாதனத்திற்கான உபகரணங்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி சிலிகான் மற்றும் லெதர் கேஸ்களின் விலை ரூ.3,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான லெதர் ஃபோலியோ ரூ.8600 முதல் கிடைக்கிறது. மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்ட லைட்னிங் டாக் ரூ.4,700 முதல் துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும். இவற்றுக்கான முன்பதிவுகள் நேற்று துவங்கின. ஆப்பிளின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன, ஐபோன் 8 (64 ஜிபி) விலை ரூ.64,000 முதல் துவங்குகிறது, இதன் 256 ஜிபி விலை ரூ.77,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி ரூ.73,000 மற்றும் 256 ஜிபி ரூ.86,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    ஐபோன் X சிறப்பம்சங்கள்:


    ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது. முக அங்கீகாரம் (face recognition) வழங்க டூயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் X 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள புதிய ஐபோன் 12 எம்பி பிரைமரி டூயல் கேமரா அமைப்பு செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.

    இத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் நோட் 8 ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்நிறுவனத்தின் S9 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் நோட் 8 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், அவற்றில் கைரேகை ஸ்கேனர் பின்புறம் வழங்கப்பட்டதற்கு பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

    அந்த வகையில் வாடிக்கையாளர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக கைரேகை ஸ்கேனரை முன்பக்கம் வழங்குவதற்கான பணிகளை சாம்சங் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சாம்சங் நிறுவனம் தென்கொரிய டிரேட்மார்க் கூட்டமைப்பில் இதற்கென காப்புரிமையை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காப்புரிமை பத்திரங்களில் சிறிய ரக கைரேகை ஸ்கேனர் ஒன்றை வழங்குவதற்காக முன்பக்கம் இடம் ஒதுக்கப்படுவது சார்ந்த தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.



    எசென்ஷியல் போனின் முன்பக்க கேமரா மற்றும் ஐபோன் X மேல் பக்கத்தில் அதிகப்படியான சென்சார்கள் மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டதை தொடர்ந்து சாம்சங் சாதனத்திலும் சிறிய கைரேகை ஸ்கேனர் வழங்கப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் S9 ஸ்மார்ட்போனில் சிறிய இடம் ஒதுக்கப்படுவது மற்றும் இன்ஃபினிட்டி எட்ஜ் திரை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.



    கேலக்ஸி S9 சாதனத்தில் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இரண்டு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை குறிக்கும் வகையில், ஸ்பெயின் நாட்டு விமானம் ஒன்றில் பயணம் செய்ய இருந்த 200 பயணிகளுக்கு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி, 2018-ம் ஆண்டு வாக்கில் அவற்றை வெளியிட திட்டமிட்டுள்ளது.
    பீஜிங்:

    ஸ்மார்ட்போன் மற்றும் இதர தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்கும் பிரபல சீன நிறுவனமன ZTE மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்க துவங்கியுள்ளது. கடந்த வாரம் ஆக்சன் எம் ஸ்மார்ட்போன் மூலம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் வெளியிட்டது.

    இதேபோன்று சாம்சங் நிறுவனமும் 2018-ம் ஆண்டு வாக்கில் மடிக்க்ககூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியான, நிலையில் ஹூவாய் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2018-ம் ஆண்டு வாக்கில் வெளியிட இருப்பதாக ஹூவாய் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சார்டு யு தெரிவித்துள்ளார்.



    அதன்படி ஹூவாய் நிறுவனம் சீராக வேலை செய்யும் ஸ்மார்ட்போன் மாதிரியை தயாரித்திருந்தாலும், ஸ்மார்ட்போனை வெளியிடும் நிலையில் முழுமையாக தயாராகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சாதனம் மேலும் வளைக்கப்படுவதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதற்கு இன்னும் காலஅவகாசம் தேவைப்படும்.

    ஹூவாய் ஸ்மார்ட்போனில் இரண்டு திரை வழங்கப்படுகிறது, எனினும் இரண்டு திரைகளுக்கு நடுவே சிறிய இடைவெளி இருக்கும். இந்த வடிவமைப்பு பார்க்க அழகாக இருக்காது என்பதால் இந்த இடைவெளியை நீக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹூவாய் எதிர்காலத்தில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் எவராலும் எங்களை தடுக்க முடியாது என யு தெரிவித்தார்.

    ஹூவாய் நிறுவனத்தின் பெரும்பாலான விற்பனை மற்றும் வியாபாரம் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க சந்தையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை அமெரிக்காவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான யுனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
    ×