என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் முழு தகவல்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. ஜியோணி M7 பவர் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஜியோணி M7 ஸ்மார்ட்போனுடன் M7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ஃபுல் ஸ்கிரீன், 18:9 டிஸ்ப்ளே கொண்ட ஜியோணி M7 பவர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 



    ஜியோணி M7 பவர் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 720x1440 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 5000 எம்ஏஎச் பேட்டரி

    அமிகோ ஓ.எஸ். 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஜியோணி M7 பவர் ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் கைரேகை ஸ்கேனர் மூலம் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்ய வேண்டும். இந்தியாவில் ஒப்போ F5 மற்றும் விவோ வி7 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோணி M7 பவர் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் கேலக்ஸி S8 மாடல்களை போன்றே கேலக்ஸி A (2018) ஸ்மார்ட்போன்களிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான கேலக்ஸி A (2018) ஸ்மார்ட்போன்களுக்கு 18:9 இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி A (2018) ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டாலும், இது வளைந்திருக்காது என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் டிஸ்ப்ளே பார்க்க கேலக்ஸி S8 ஆக்டிவ் போன்று இருக்கும் என சாம் மொபைல் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முந்தைய கேலக்ஸி A ஸ்மார்ட்போன்களில் 16:9 டிஸ்ப்ளே வழங்கப்பட்டு வந்த நிலையில், 2018 மாடல்களில் மிகப்பெரும் அப்கிரேடு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட மற்றும் அகலமான டிஸ்ப்ளே வழங்கும் வழக்கத்தை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிலும் இதே அளவு ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. கேலக்ஸி A (2018) ஸ்மார்ட்போன் தற்சமயம் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்துடன் சோதனை செய்யப்படுகிறது என சாம் மொபைல் தெரிவித்துள்ளது.

    புதிய கேலக்ஸி A ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ச்போன் கீக்பென்ச் தளத்தில் கசிந்தது. இதில் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான தகவல்கள் தெரியவந்துள்ளது.



    அதன்படி சாம்சங் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி + இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், 2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர், 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை IP68 சான்று பெற்ற கைரேகை ஸ்கேனர், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிளிப்கார்ட் நிறுவனத்தின் பில்லின் பிரான்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட பில்லியன் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் பில்லியன் கேப்சர் பிளஸ் என அழைக்கப்படுகிறது.

    டூயல் பிரைமரி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் அன்லிமிட்டெட் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்கள் பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

    பிளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் IPS 2.5D டிஸ்ப்ளே, டிராகன்டிரெயில் கிளாஸ்
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட், ஓரியோ அப்டேட்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3,500 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ்



    பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.10,999, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக் மற்றும் டெசர்ட் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் பானாசோனிக் நிறுவனத்தின் எலுகா I5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ, கைரேகை ஸ்கேனர் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பானாசோனிக் நிறுவனத்தின் எலுகா I5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 13 எம்பி பிரைமரி கேமரா, 4ஜி வோல்ட்இ, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களுடன் 5.0 இன்ச் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் அசாஹி டிராகன் டிரெயில் கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் பாடி வடிவமைப்பு, மீடியாடெக் பிராசஸர், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.



    பானாசோனிக் எலுகா I5 சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, அசாஹி டிராகன் டிரெயில் கிளாஸ்
    - 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2500 எம்ஏஎட் பேட்டரி

    கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் பானாசோனிக் எலுகா I5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய வி79 ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ வி79 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் தற்சமயம் சீனாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

    ஃபுல் வியூ டிஸ்ப்ளே கொண்டுள்ள புதிய விவோ வி79 ஸ்மார்ட்போனில் 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    விவோ வி79 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3225 எம்ஏஎச் பேட்டரி

    ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் விவோ வி79 ஸ்மார்ட்போன் 2498 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,470 விலையில் சீனாவில் கிடைக்கிறது. முன்னதாக விவோ நிறுவனத்தின் வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிட்டது.
    இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் மூன்று ஃபிட்னஸ் சாதனங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பேன்ட் 2, பேன்ட் 2 ப்ரோ மற்றும் ஃபிட் வாட்ச் என மூன்று சாதனங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹுவாய் நிறுவனம் பேன்ட் 2, பேன்ட் 2 ப்ரோ ஃபிட்னஸ் டிராக் மற்றும் ஹூவாய் ஃபிட்னஸ் வாட்ச் சாதனங்களை வெளியிட்டுள்ளது. பேன்ட் 2 சீரிஸ் சாதனங்களில் 24x7 இதயதுடிப்பு கண்கானிக்கும் வசதி, பேன்ட் 2 ப்ரோ சாதனத்தில் VO2 மேக்ஸ் பயனரின் உடலினுள் வந்து செல்லும் காற்றின் அளவை கணக்கிடும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் ஜிபிஎஸ் வசதி கொண்ட பேன்ட் சீரிஸ் 5ATM வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது 50 மீட்டர் ஆழமான நீரிலும் சாதனம் பாழாகாமல் பார்த்து கொள்ளும். ஹூவாய் ஃபிட்னஸ் வாட்ச் சாதனத்திலும் இதயதுடிப்பு சென்சார், ஆட்டோமேடிக் ஸ்லீப் கவுன்டிங், ஸ்லீப் டிராக்கிங் மற்றும் மல்டி-ஸ்போர்ட் ஆக்டிவிட்டிக்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.



    ஹூவாய் பேன்ட் 2 மற்றும் பேன்ட் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - POLED டிஸ்ப்ளே
    - தினசரி நடவடிக்கைகளை டிராக் மற்றும் கண்கானிக்கும் வசதி
    - ஓட்ட பயிற்சி, நீச்சல் மற்றும் மூச்சு பயிற்சி உள்ளிட்டவற்றை இயக்கும் வசதி
    - 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், டிடேட்ச்டு PPG கார்டியோடகோமீட்டர், இன்ஃப்ராரெட் வியர் சென்சார்
    - வாட்டர்ப்ரூஃப் (5ATM)
    - ஸ்லீப் ஸ்டேட்டஸ் மானிட்டரிங் மற்றும் ஸ்லீப் டேட்டா சேகரித்தல்
    - அலாரம் நோட்டிபிகேஷன் அம்சங்கள்
    - அழைப்புகள், எஸ்எம்எஸ், மின்னஞ்சல், மற்றும் இதர செயலிகளுக்கான நோட்டிபிகேஷன்கள்
    - இன்டிபென்டன்ட் GPS பொசிஷனிங்
    - இதயதுடிப்பை கண்கானிக்கும் ஃபர்ஸ்ட்பீட்
    - 100 எம்ஏஎச் பேட்டரி



    ஹூவாய் ஃபிட் சிறப்பம்சங்கள்:

    - 1.04 இன்ச் 208x208 பிக்சல், பிளாக் & வைட் ஆல்வேஸ் ஆன் டச் ஸ்கிரீன் எல்சிடி
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆண்ட்ராய்டு 4.4 அல்லசு ஐ.ஓ.எஸ். 8.0 சாதனங்களில் வேலை செய்யும்
    - 6-ஆக்சிஸ், CAP, இதயதுடிப்பு மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார்கள்
    - தினசரி நடவடிக்கைகளை டிராக் செய்யும் வசதி
    - அழைப்புகள் மற்றும் செயலிகளில் வரும் மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன்கள்
    - மென்மையான அலாரம் வைப்ரேஷன்
    - ப்ளூடூத் 4.2 LE
    - டஸ்ட்ப்ரூஃப் மற்றும் வாட்டர்ப்ரூஃப் (IP68), 5ATM வாட்டர்ப்ரூஃப்
    - 80 எம்ஏஎச் பேட்டரி

    பேன்ட் 2 மற்றும் பேன்ட் 2 ப்ரோ சாதனங்கள் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.4,599 மற்றும் 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் ஃபிட் சிறிய மற்றும் பெரிய அளவுகளில் கருப்பு, நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஃபிட் அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
    ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஹானர் 7X ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனத்தன் ஹானர் பிரான்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7X ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. முன்னதாக வெளியான ஹானர் 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் ஹானர் 7X ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மினிமல் பெசல், ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர், 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹானர் 7X ஸ்மார்ட்போனின் விலை 1299 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12,885 என்ற விலையில் வெளியிடப்பட்டது.



    ஹானர் 7X சிறப்பம்சங்கள்:

    - 5.93 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.0 (நௌக்கட்) மற்றும் EMUI 5.1
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3340 எம்ஏஎச் / 3240 எம்ஏஎச் பேட்டரி

    இந்தியாவில் ஹானர் 7X ஸ்மார்ட்போன் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களை விட குறைவான விலையில் வெளியிடப்படும் என்றும் டிசம்பர் மாத வாக்கில் வெளியிடப்படும் என ஹானர் பிரான்டு சர்வதேச தலைவர் ஜார்ஜ் சௌ தெரிவித்தார். மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இதன் விலை இருக்கும் என்றும் அவர் தெரிவி்த்தார்.
    எச்எம்டி குளோபல் நிறுவனம் 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    நோக்கியா 2 ஸ்மார்ட்போனினை வெளியிட்டதை தொடர்ந்து எச்எம்டி குபளோபல் நிறுவனம் நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

    ஆகஸ்டு மாதம் அறிமுகமான நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்டது. ரூ.12,499 என்ற விலையில் அறிமுகமான நோக்கியா 5 பல நோக்கியா பிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியதை தொடர்ந்து 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க முந்தைய நோக்கியா 5 போன்றே காட்சியளிக்கிறது.

    சமீபத்தில் எச்எம்டி குளோபல் அறிமுகம் செய்த நோக்கியா 2 அந்நிறுவனத்தின் மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ரூ.6,999 விலையில் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 2 இந்தியாவில் சியோமி ரெட்மி 4A, ரெட்மி வை1 லைட், மோட்டோ சி பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும்.



    நோக்கியா 5 சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட், ஓரியோ அப்டேட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி

    நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேட் பிளாக் மற்றும் டெம்பர்டு புளூ நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 5 நவம்பர் 14-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீன வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இணையத்தில் ஏற்கனவே வெளியான பல்வேறு தகவல்கள் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் வெளியீட்டை கிட்டதட்ட உறுதி செய்துள்ள நிவையில், இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இம்முறை ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல் GFXBench தளத்தில் கசிந்துள்ளது. பென்ச்மார்க்கிங் தளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் நம்பகமானது என்றாலும் அதிகாரப்பூர்வ பட்டியல் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.

    அதன்படி ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD+18:9 பிக்சல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளம் கொண்டிருப்பதோடு ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



    புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தாலும், ஒன்பிளஸ் 5 போன்றே இதிலும் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 20 எம்பி செஸ்ஃபி கேமரா வழங்கப்படலாம், முந்தைய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பேட்டரி சார்ந்து எவ்வித தகவல்களும் GFXBench தளத்தில் இடம்பெறவில்லை என்றாலும், முன்னதாக வெளியான தகவல்களில் இந் ஸ்மார்ட்போனில் டேஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் நவம்பர் 16-ம் தேதி வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் வரும் நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒப்போ நிறுவனம் ஃபுல் ஸ்கிரீன் AMOLED டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தை போன்றே ஒப்போ R11s மற்றும் R11s பிளஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. ஃபுல் ஸ்கிரீன் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மற்றும் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 20 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான ஸ்மார்ட்போன்களை விட மிக அழகான செல்ஃபிக்களை எடுக்க முடியும். மேலும் 0.08 நொடிகளில் முகம் கொண்டே ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் என ஒப்போ தெரிவி்த்துள்ளது.



    ஒப்போ R11s சிறப்பம்சங்கள்:

    - 6.01 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் மற்றும் கலர் ஓ.எஸ்.3.2
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3205 எம்ஏஎச் / 3120 எம்ஏஎச் பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜிங்



    ஒப்போ R11s பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.43 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் மற்றும் கலர் ஓ.எஸ்.3.2
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஎச் / 3880 எம்ஏஎச் பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜிங்

    ஒப்போ R11s ஸ்மார்ட்போன் பிளாக், ஷேம்பெயின் கோல்டு மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 2999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,350 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் ரெட் நிற பதிப்பு 3199 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.31,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ R11s பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 3699 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.36,190 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    எச்டிசி நிறுவனத்தின் யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்டிசியின் சென்ஸ் மென்பொருள் வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    எச்டிசி நிறுவனம் வட அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற விழாவில் எச்டிசி யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எச்டிசியின் சென்ஸ் மென்பொருள் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னெல் மெமரி என இரண்டு மாடல்களில் அறிமுகமாகியுள்ளது. எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போனில் சென்ஸ் UI சாக்ந்த ஆண்ட்ரய்டு 7.1 நௌக்கட், அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    எச்டிசி யு11 லைஃப் சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ஃபுல் எச்டி சூப்பர் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
    - அட்ரினோ 510 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி  / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீ்ட்டிக்கும் வசதி
    - எச்டிசி சென்ஸ் U.I சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2600 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0

    எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போன் சஃபையர் புளூ மற்றும் பிரிலியன்ட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் சென்ஸ் UI பதிப்பு 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் 349 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.22,560 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஒன் மாடலின் விலை 462 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,880 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    எச்டிசி யு11+ சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் எச்டி+ சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் எச்டிசி சென்ஸ் U.I
    - 12 எம்பி அல்ட்ராபிக்சல் 3 பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3930 எம்ஏஎச் பேட்டரி, குவிக்சார்ஜ் 3.0

    எச்டிசி யு11+ ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் அமேசிங் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் கொண்ட எச்டிசி யு11+ விலை 925 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,860 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    இந்தியாவில் ஹானர் ஹல்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூவாய் ஹானர் ஹால்லி 4 ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஹானர் ஹால்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. சீனா மற்றும் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் கொண்டுள்ளது.

    மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ள ஹானர் ஹால்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 0.3 நொடிகளில் இயங்கும் அதிவேக கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் ஹால்லி 4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட், EMUI 5.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4100 எம்ஏஎச் / 4000 எம்ஏஎச் பேட்டரி

    கிரே, கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஹானர் ஹால்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    ×