என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்டிசி யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
    X

    எச்டிசி யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

    எச்டிசி நிறுவனத்தின் யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்டிசியின் சென்ஸ் மென்பொருள் வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    எச்டிசி நிறுவனம் வட அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற விழாவில் எச்டிசி யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எச்டிசியின் சென்ஸ் மென்பொருள் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னெல் மெமரி என இரண்டு மாடல்களில் அறிமுகமாகியுள்ளது. எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போனில் சென்ஸ் UI சாக்ந்த ஆண்ட்ரய்டு 7.1 நௌக்கட், அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    எச்டிசி யு11 லைஃப் சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ஃபுல் எச்டி சூப்பர் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
    - அட்ரினோ 510 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி  / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீ்ட்டிக்கும் வசதி
    - எச்டிசி சென்ஸ் U.I சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2600 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0

    எச்டிசி யு11 லைஃப் ஸ்மார்ட்போன் சஃபையர் புளூ மற்றும் பிரிலியன்ட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் சென்ஸ் UI பதிப்பு 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் 349 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.22,560 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஒன் மாடலின் விலை 462 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,880 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    எச்டிசி யு11+ சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் எச்டி+ சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் எச்டிசி சென்ஸ் U.I
    - 12 எம்பி அல்ட்ராபிக்சல் 3 பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3930 எம்ஏஎச் பேட்டரி, குவிக்சார்ஜ் 3.0

    எச்டிசி யு11+ ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் அமேசிங் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் கொண்ட எச்டிசி யு11+ விலை 925 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,860 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×