search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஹுவாய் பேன்ட் 2, பேன்ட் 2 ப்ரோ மற்றும் ஃபிட் வாட்ச் இந்தியாவில் வெளியானது
    X

    ஹுவாய் பேன்ட் 2, பேன்ட் 2 ப்ரோ மற்றும் ஃபிட் வாட்ச் இந்தியாவில் வெளியானது

    இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் மூன்று ஃபிட்னஸ் சாதனங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பேன்ட் 2, பேன்ட் 2 ப்ரோ மற்றும் ஃபிட் வாட்ச் என மூன்று சாதனங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹுவாய் நிறுவனம் பேன்ட் 2, பேன்ட் 2 ப்ரோ ஃபிட்னஸ் டிராக் மற்றும் ஹூவாய் ஃபிட்னஸ் வாட்ச் சாதனங்களை வெளியிட்டுள்ளது. பேன்ட் 2 சீரிஸ் சாதனங்களில் 24x7 இதயதுடிப்பு கண்கானிக்கும் வசதி, பேன்ட் 2 ப்ரோ சாதனத்தில் VO2 மேக்ஸ் பயனரின் உடலினுள் வந்து செல்லும் காற்றின் அளவை கணக்கிடும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் ஜிபிஎஸ் வசதி கொண்ட பேன்ட் சீரிஸ் 5ATM வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது 50 மீட்டர் ஆழமான நீரிலும் சாதனம் பாழாகாமல் பார்த்து கொள்ளும். ஹூவாய் ஃபிட்னஸ் வாட்ச் சாதனத்திலும் இதயதுடிப்பு சென்சார், ஆட்டோமேடிக் ஸ்லீப் கவுன்டிங், ஸ்லீப் டிராக்கிங் மற்றும் மல்டி-ஸ்போர்ட் ஆக்டிவிட்டிக்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.



    ஹூவாய் பேன்ட் 2 மற்றும் பேன்ட் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - POLED டிஸ்ப்ளே
    - தினசரி நடவடிக்கைகளை டிராக் மற்றும் கண்கானிக்கும் வசதி
    - ஓட்ட பயிற்சி, நீச்சல் மற்றும் மூச்சு பயிற்சி உள்ளிட்டவற்றை இயக்கும் வசதி
    - 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், டிடேட்ச்டு PPG கார்டியோடகோமீட்டர், இன்ஃப்ராரெட் வியர் சென்சார்
    - வாட்டர்ப்ரூஃப் (5ATM)
    - ஸ்லீப் ஸ்டேட்டஸ் மானிட்டரிங் மற்றும் ஸ்லீப் டேட்டா சேகரித்தல்
    - அலாரம் நோட்டிபிகேஷன் அம்சங்கள்
    - அழைப்புகள், எஸ்எம்எஸ், மின்னஞ்சல், மற்றும் இதர செயலிகளுக்கான நோட்டிபிகேஷன்கள்
    - இன்டிபென்டன்ட் GPS பொசிஷனிங்
    - இதயதுடிப்பை கண்கானிக்கும் ஃபர்ஸ்ட்பீட்
    - 100 எம்ஏஎச் பேட்டரி



    ஹூவாய் ஃபிட் சிறப்பம்சங்கள்:

    - 1.04 இன்ச் 208x208 பிக்சல், பிளாக் & வைட் ஆல்வேஸ் ஆன் டச் ஸ்கிரீன் எல்சிடி
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆண்ட்ராய்டு 4.4 அல்லசு ஐ.ஓ.எஸ். 8.0 சாதனங்களில் வேலை செய்யும்
    - 6-ஆக்சிஸ், CAP, இதயதுடிப்பு மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார்கள்
    - தினசரி நடவடிக்கைகளை டிராக் செய்யும் வசதி
    - அழைப்புகள் மற்றும் செயலிகளில் வரும் மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன்கள்
    - மென்மையான அலாரம் வைப்ரேஷன்
    - ப்ளூடூத் 4.2 LE
    - டஸ்ட்ப்ரூஃப் மற்றும் வாட்டர்ப்ரூஃப் (IP68), 5ATM வாட்டர்ப்ரூஃப்
    - 80 எம்ஏஎச் பேட்டரி

    பேன்ட் 2 மற்றும் பேன்ட் 2 ப்ரோ சாதனங்கள் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.4,599 மற்றும் 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் ஃபிட் சிறிய மற்றும் பெரிய அளவுகளில் கருப்பு, நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஃபிட் அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×