என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இந்தியாவில் அனைத்து அரசு சேவைகளையும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் பெற பிரதமர் மோடி உமாங் (UMANG) எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    உலகளாவிய சைபர் ஸ்பேஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உமாங் (உமாங் (UMANG)) எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளார். புதிய தலைமுறை ஆட்சிக்கான ஒருங்கிணைந்த மொபைல் செயலியை உமாங் (UMANG) என்ற பெயரில் இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய செயலியின் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு அனைவரும் அரசு சேவைகளை ஒரே தளத்தில் மிக எளிமையாக பயன்படுத்த முடியும். ஆதார், டிஜிலாக்கர், ரேபிட் அக்செஸ்மென்ட் சிஸ்டம் மற்றும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.  

    மேலும் இந்த செயலியின் மூலம் 43 அரசு துறைகளில் 150க்கும் அதிகமான சேவைகள் மற்றும் 200க்கும் அதிகமான துறைகளை இயக்கும் வசதியும் 1200க்கும் சேவைகளை டிசம்பர் 2019-க்குள் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்ட அறிமுகத்தின் போது இந்த செயலிக்கான அறிவிப்பு வெளியானது.



    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பிரச்சனைகளின் போது தகவல்களை அறிந்து கொள்ள பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளது. இத்துடன் வாடிக்கையாளர் சமீபத்தில் பயன்படுத்திய சேவைகள், ஷார்ட்கட் மற்றும் மொழிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமின்றி 12 பிராந்திய மொழிகளில் செயலியை இயக்கும் வசதியும் மத்திய, மாநில மற்றும் அரசு துறை நிறவனங்களின் சேவைகளை இயக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் EPFO, PAN, NPS, CBSE, பாரத் கியாஸ், பாஸ்போர்ட், ஜி.எஸ்.டி., எச்.பி., பாரத் மற்றும் இன்டேன் கியாஸ், இபாத்ஷாலா, வருமான வரி, டிஜி சேவக், கார்ப் இன்சூரன்ஸ் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்க முடியும்.

    செயலியுடன் ஆதார் எண்ணை இணைத்து கொண்டால் வருமான வரி செலுத்துவது, புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் மற்றும் பழைய பாஸ்போர்ட் புதுப்பிப்பு, கியாஸ் முன்பதிவு, பயிர் காப்பீடு, வங்கி கணக்குகளை இயக்குவது, இ-புத்தகங்களை இயக்குவது மற்றும் சி.பி.எஸ்.இ. பாட திட்ட தேர்வு முடிவுகளை பார்க்க முடியும்.

    உமாங் செயலியை ஸ்மார்ட்போனில் பெற 97813-97813 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தோ அல்லது ஒவ்வொரு இயங்குதள பதிப்புக்கான பிளே ஸ்டோர்களில் தரவிறக்கம் செய்ய முடியும்.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi 7  என்றும் இதன் சிறப்பம்சங்களும் சீன வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

    அதன்படி புதிய Mi 7 ஸ்மார்ட்போனில் 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் இது 2018-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. Mi 6 மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக உருவாகும் Mi 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 6.0.1 இன்ச் பெசல்-லெஸ், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 3D தொழில்நுட்பத்தில் முக அங்கீகார வசதியை வழங்கும் என கூறப்படுகிறது. நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் முன் இந்த தொழில்நுட்பம் முழுமையாக மேம்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை Mi 7 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர் பின்புறம் வழங்கப்படும் என்று்ம இதன் விலை CNY 2.699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,448 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவிலேயே வழங்கப்படும் என கூறப்பட்டது.

    இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ள சியோமி ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைன் முறையில் ஸ்மார்டபோன்களை விற்பனை செய்ய திட்டமிட்டு நாடு முழுக்க வெவ்வேறு நகரங்களில் Mi ஹோம் ஸ்டோர்களை துவங்கி வருகிறது. இத்துடன் பல்வேறு இதர விற்பனையாளர்களுடன் இணைந்து சியோமி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

    சமீபத்தில் சியோமி நிறுவனம் Mi எக்சேஞ்ச் எனும் புதிய திட்டத்தை துவங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் Mi ஹோம் ஸ்டோர் சென்று தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை வழங்கி புதிய ஸ்மார்ட்போனினை வாங்க முடியும். கேஷிஃபை குழுவினர் நீங்கள் வழங்கும் ஸ்மார்ட்போனின் தரத்தை கணக்கிடுவர், பின் இந்த தொகை வாடிக்கையாளர் வாங்கும் ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து குறைக்கப்படும்.
    சியோமியின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சீன வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 5 புகைப்படம் சீன வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்த சியோமி சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் ரெட்மி நோட் 5 சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முன்னதாக ரெட்மி நோட் 5 புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில், இம்முறை வெளியாகியுள்ள புகைப்படத்தின் படி இந்த ஸ்மார்ட்போன் பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

    சியோமி ரெட்மி நோட் 5 லைவ் புகைப்படங்களுடன், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் இணையத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியான தகவல்களும் ஒன்றாகவே உள்ளது.



    தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி சியோமி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹார்டுவேர் அம்சங்களை பொருத்த வரை ரெட்மி நோட் 4 உடன் ஒப்பிடும் போது புதிய நோட் 5 ஸ்மார்ட்போனில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது. எனினும் நோட் 5 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே முற்றிலும் புதியதாக இருக்கும்.

    இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் நோட் 5 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் நோட் 5 ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும், மெமரியை நீட்டிப்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.  

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்றும் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படுவதால் புதிய ஸ்மார்ட்போனில் ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 போன்றே புதிய நோட் 5 ஸ்மார்ட்போனிலும் பெரிய பேட்டரி வழங்கப்படலாம், அந்த வகையில் புதிய நோட் 5 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. 
    சியோமி நிறுவனத்தின் சியோமி Mi A1 ஆண்ட்ராய்டு ஓன் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி Mi A1 முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் Mi A1 ஆண்ட்ராய்டு ஒன் போன் செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளாக், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் அறிமுகமான சியோமி Mi A1 இதுவரை பிளாக் மற்றும் கோல்டு நிறங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

    அந்த வகையில் ரோல்ஸ் கோல்டு நிற மாடல் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. நிறத்தை தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 5.5 இன்ச் 1080 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் மற்றும் 3080 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - Mi Ui சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3080 எம்ஏஎச் பேட்டரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கைரேகை ஸ்கேனர்

    புதிய Mi A1 ஸ்மார்ட்போனில் ஆயிரக்கணக்கான தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

    சியோமி Mi A1 ரோஸ் கோல்டு நிற மாடல் Mi.com, பிளிப்கார்ட், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் சில விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
    சாம்சங் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அந்தவகையில் இம்முறை வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சாம்சங் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. அடுத்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    அதன்படி பென்ச்மார்க்கிங் தளத்தில் SM-G960F சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி S9 என்பதை குறிப்பிடவில்லை என்றாலும், இதன் சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது இது சாம்சங் கேலக்ஸி S9 என்பதையே வெளிப்படுத்துகிறது.

    கீக்பென்ச் தளத்தின் படி புதிய ஸ்மார்ட்போனில் சிங்கிள்-கோர் 2680 மற்றும் மல்டி-கோர் 7787 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் இதுவரை கிடைப்பதில் சக்திவாயந்த ஸ்மார்ட்போனாக இருக்கும். இத்துடன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.



    மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 ஆக்டாகோர் பிராசஸரும், மற்ற சந்தைகளில் புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் ஸ்னார்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கீக்பென்ச் தளத்தில் அட்டகாசமான புள்ளிகளை பெற்றிருந்தாலும், இது ஐபோன் X அல்லது ஐபோன் 8 சீரிஸ் மாடல்களுக்கு நிகரானதாக இல்லை.

    ஐபோன் X ஸ்மார்ட்போனில் சிங்கிள்-கோர் 4197 புள்ளிகளையும் மல்டி-கோர் 10,051 புள்ளிகளை பெற்றுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களை வைத்து கேலக்ஸி S9 சார்ந்து தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியாது. சமீபத்தில் வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் 3D சென்சிங் கேமரா, ஐபோன் X போன்ற முக அங்கீகார வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அடுத்த தலைமுறை கேலக்ஸி A 2018 ஸ்மார்ட்போன்களை சாம்சங் வெளியிட இருக்கும் நிலையில் இவற்றின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A 2018 ஸ்மார்ட்போன்கள் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், கேலக்ஸி A5 (2018) மற்றும் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போன்கள் வைபை மற்றும் FCC சான்று பெறும் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் முன்னதாக சான்றுகளை பெற்றது.

    வைபை அலையன்ஸ் வழங்கியுள்ள சான்றிதழ்களை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி A5 (2018) மற்றும் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்குவதை உறுதி செய்துள்ளது. இத்துடன் இவை 2.4 மற்றும் 5.0 ஜிகாஹெர்ட்ஸ் வைபை சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி A5 (2018) ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 1080x2160 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் எக்சைனோஸ் 7885 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போனில் 1.59 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7885 பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம், மெல்லிய பெசல்கள் மற்றும் பிரத்யேக பிக்ஸ்பி வாய்ஸ் பட்டன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி A5 (2018) மற்றும் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போன்களும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் வருடாந்திர ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வழக்கமாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி மாத வாக்கில் நடைபெறும். அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மாப்ட்போன்களும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாகின.

    சாம்சங் வழக்கப்படி இந்த ஆண்டும் தொடரும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 2018 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்மொபைல் வெளியிட்ட தகவல்களிலும் இதே தகவல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி 26-ம் தேதி துவங்கி, மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. முந்தைய கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் டூயல் பிரைமரி கேமரா, மற்றும் கேலக்ஸி S8 மாடலை விட மேம்படுத்தப்பட்ட செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் இரண்டு மாடல்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் பேஸ் மாடலில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், டாப் எண்ட் மாடலில் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இதுமட்டுமின்றி கேலக்ஸி S9 சீரிஸ் லிமிட்டெட் எடிஷன் கொண்ட மாடல் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹார்டுவேர் அம்சங்களை பொருத்த வரை புதிய S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5T ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகமானது. 6.01 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5T ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.01 இன்ச் ஃபுல் எச்டி + ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 80.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ கொண்டுள்ளது. முந்தைய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது.

    16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஒன்பிளஸ் 5T பேரலெல் ஆப்ஸ், கேலரி மேப் மற்றும் பல்வேறு கஸ்டமைசேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் போன்றே அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:

    - 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
    - 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்



    ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 499 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட டாப் என்ட் மாடல் 559 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. அமேசான், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒன்பிளஸ் விற்பனை மையத்திலும் நவம்பர் 21-ம் தேதி மாலை 4.30 மணிக்கு விற்பனை துவங்குகிறது.

    ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் தளம் மற்றும் ஒன்பிளஸ் விற்பனை மையங்களில் நவம்பர் 28-ம் தேதி முதல் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படாத நிலையில், இதன் டீசர் சீன வலைத்தளம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் முன் சீன வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    சீனாவின் பிரபல JD.com வர்த்தக தளத்தில் சியோமி ரெட்மி நோட் 5 பட்டியலிடப்பட்டது. இதன் விலை சீனாவில் ¥8,888 அதாவது இந்திய மதிப்பில் ரூ.87,509 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சீனா மட்டமின்றி இந்தியாவிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 5 இருக்கிறது. இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சியோமி நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.



    சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 2160x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாடல்களில் வழங்கப்பட்ட 5.5 இன்ச் திரைக்கு பதில் புதிய ஸ்மார்ட்போனில் 5.9 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் கேமரா செட்டப் (16 எம்பி + 5 எம்பி) மற்றும் சிறப்பான செல்ஃபி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் சியோமியின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இத்துடன் சமீபத்தில் ரெட்மி வை 1 மற்றும் வை 1 லைட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. 
    24 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட விவோ நிறுவனத்தின் வி7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விவோ வி7 அடுத்த வாரம் வெளியிடப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    விவோ நிறுவனத்தின் வி7 ஸ்மார்ட்போன் இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

    5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஃபுல் வியூ டிஸ்ப்ளே கொண்ட விவோ வி7 ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் மற்றும் போர்டிரெயிட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி7 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி

    மேட் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் விவோ வி7 ஸ்மார்ட்போனின் விலை 280 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,325 என நிர்ணயம் செய்யப்ப்டடுள்ளது. இந்தோனேஷியாவில் இன்று முன்பதிவு துவங்கி, நவம்பர் 18-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் விவோ வி7 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனை துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டூயல் பிரைமரி கேமரா மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹாங் காங்கை சேர்ந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் உயர் ரக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்ஃபினிக்ஸ் சீரோ 5 மற்றும் சீரோ 5 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன்களும் துபாயில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 5.98 இன்ச் 1080 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P25 ஆக்டாகோர் சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் இன்ஃபினிக்ஸ் சீரோ 5 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள இன்ஃபினிக்ஸ் சீரோ 5 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது.



    இன்ஃபினிக்ஸ் சீரோ 5 சிறப்பம்சங்கள்:

    - 5.98 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P25 16nm பிராசஸர்
    - மாலி-T880 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் XOS 3.0
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX386 சென்சார், f/2.0 அப்ரேச்சர், 1.25μm பிக்சல்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3 சென்சார், f/2.6 அப்ரேச்சர், 1.0μm பிக்சல்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4350 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    இன்ஃபினிக்ஸ் சீரோ 5 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் போர்டாக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் அறிமுகமான இன்ஃபினிக்ஸ் சீரோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளதோடு சான்ட்ஸ்டோன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இன்ஃபினிகிஸ் சீரோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இன்ஃபினிக்ஸ் சீரோ 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை நவம்பர் 22-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.

    இத்துடன் கொயட் 2 வையர்டு மற்றும் கொயட் X வயர்லெஸ் ஹெட்போன்களை முறையே ரூ.2,499 மற்றும் ரூ.6,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. எனினும் அறிமுக தினத்தில் இவை முறை ரூ.1,499 மற்றும் ரூ.4,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் மோட்டோ X4 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற IFA விழாவில் அறிமுகமான மோட்டோ X4 ஸ்மாகர்ட்போனில் 12 எம்பி + 8 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய புகைப்படங்களை எடுக்கும் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

    5.2 இன்ச் 1080பிக்சல் ஸ்கிரீன் கொண்டுள்ள மோட்டோ X4 ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டு மோட்டோ X4 உருவாக்கப்பட்டுள்ளது.



    மோட்டோ X4 சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் (1920x1080 பிக்சல்) ஃபுல் எச்டி LTPS IPS டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 14nm சிப்செட்
    - அட்ரினோ 508 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்பி + 8 எம்பி டூயல் பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் டர்போ சார்ஜிங்

    இந்தியாவில் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் சூப்பர் பிளாக் மற்றும் ஸ்டெர்லிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.20,999 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ X4 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.



    மோட்டோ X4 பிளிப்கார்ட் சலுகைகள்:

    புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனினை பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன் படி பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது ரூ.3000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி, உத்திரவாதம் அளிக்கப்பட்ட 50 சதவிகித பைபேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 340 ஜிபி அளவு கூடுதல் டேட்டா மற்றும் மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ×