என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைசிறந்த அம்சங்கள் நிறைந்த பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    தலைசிறந்த அம்சங்கள் நிறைந்த பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிளிப்கார்ட் நிறுவனத்தின் பில்லின் பிரான்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட பில்லியன் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் பில்லியன் கேப்சர் பிளஸ் என அழைக்கப்படுகிறது.

    டூயல் பிரைமரி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் அன்லிமிட்டெட் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்கள் பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

    பிளிப்கார்ட் தளத்தில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் IPS 2.5D டிஸ்ப்ளே, டிராகன்டிரெயில் கிளாஸ்
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட், ஓரியோ அப்டேட்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3,500 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜ்



    பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.10,999, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக் மற்றும் டெசர்ட் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் பிளிப்கார்ட் பில்லியன் கேப்சர் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×