என் மலர்
புதிய கேஜெட்டுகள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் சார்பில் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை சரி செய்வதற்கென புதிய சேவையை அறிவித்து இருக்கின்றன. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சத்தை போக்கும் நோக்கில் இருநிறுவனங்கள் சார்பில் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சேவையில் ஆரோக்கியம், பயண வரலாறு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, பயனரிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும். இதை கொண்டு மக்கள், கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்து கொள்ள முடியுமா, முடியாதா என்பதை அவர்களாகவே கண்டறிந்து கொள்ள முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ டூல் மைஜியோ செயலியில் கிடைக்கிறது. இதனை அதற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக வலைதளத்தில் இயக்க முடியும். இது பயனரின் வயது, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவருடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? ஆரோக்கியம் மற்றும் பயனர் மேற்கொண்ட பயண விவரங்களை கேட்கிறது.
பயனர் வழங்கும் விவரங்களின் அடிப்படையில், ஜியோ பயனருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு, சராசரி மற்றும் அதிகம் என மூன்று நிலைகளில் தெரிவிக்கும். மூன்று நிலைகளில் பயனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை ஜியோ வழங்கிகிறது.

இதுதவிர ஜியோ டூல் கொண்டு தேசிய மற்றும் மாநில அளவில் பயனர் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்களை வழங்குகிறது.
ஏர்டெல் டூல் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ 247 என அழைக்கப்படும் இந்த டூல் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல மையத்தின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜியோ போன்றே ஏர்டெல் சேவையிலும், பயனர் வயது, நோய் தொற்று அரிகுரி உள்ளிட்ட விவரங்களை வழங்க கோருகிறது. பின் பயனர் வழங்கும் விவரங்களின் அடிப்படையில்பரிந்துரிகைளை வழங்குகிறது. ஏர்டெல் சேவையில் ரிஸ்க் மீட்டர் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் நொய் தொற்று பற்றிய அடிப்படை விவரங்களை மட்டுமே வழங்குகிறது. இதை வைத்து ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதும் போது, உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ்2 ஸ்மார்ட்போன் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ்2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிய ரெனோ ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா செட்டப், வட்ட வடிவ கேமரா பம்ப்பில் பொருத்தப்படுகிறது.
இந்நிலையில், ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியான் ஷென் ரெனோ ஏஸ்2 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதற்கான டீசர்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து நிறுத்திவைக்கப்பட்டது. சீனாவில் இயல்பு நிலை திரும்பியதால், சியோமியின் ரெட்மி பிராண்டு கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் அங்கு வெளியிடப்பட்டது. ஒப்போ ரெனோ ஏஸ்2 வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெனோ ஏஸ்2 ஸ்மார்ட்போனில் வட்ட வடிவ கேமரா கட்-அவுட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க ஒன்பிளஸ் 7டி போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், இருபுறங்களிலும் ஸ்பீக்கர் கிரில் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் ரெனோ ஏஸ் 2 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி கே30 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலினை அறிமுகம் செய்துள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு சீன சந்தையில் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் இ3 சூப்பர் AMOLED ஸ்கிரீன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம் 5ஜி SA/NSA வசதியை வழங்குகிறது. மேலும், 3435mm² VC லிக்விட் கூல்டு ஹீட் சின்க், கேம் டர்போ 3.0, 4டி வைப்ரேஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 சார்ந்த MIUI 11 இயங்குதளம் கொண்டிருக்கும் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3டி கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி IMX686 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 13 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 12 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே30 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR5 ரேம்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.1 மெமரி
- டூயல் சிம்
- MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, , 0.8μm, f/1.69, 7P லென்ஸ்
- 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
- 13 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
- 2 எம்.பி. டெப்த் லென்ஸ், 1.75 μm
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை ரெஸ் ஆடியோ, 1216 ஸ்பீக்கர்
- 5ஜி SA/NSA டூயல் 4டி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, GPS
- யு.எஸ்.பி. டைப் சி
- 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் வைட், புளூ, கிரே மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6+128 ஜி.பி. மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 32,250) என துவங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
சம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 5ஜி வேரியண்ட் விரைவில் வெளியாக இருப்பதை புதிய விவரங்கள் தெரியப்படுத்தி இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளமான TENAA-வில் வெளியாகி இருக்கின்றன. இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. நான்கு பிரைமரி கேமரா, 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 8 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. SM-A7160 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் NSA மற்றும் SA பேண்ட்களை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.

முன்புறம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா, ஹோல்-பன்ச் நாட்ச், 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் எக்சைனோஸ் 980 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. இதில் 5ஜி மோடெம் இன்டகிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 162.6x75.5x8.1 அளவீடுகளில் 185 கிராம் எடை கொண்டிருக்கும் என TENAA வலைதள விவரங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய வி19 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
விவோ நிறுவனம் தனது வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 3-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்வதாக விவோ பதிவிட்ட ட்வீட் தற்சமயம் அழிக்கப்பட்டு இருக்கிறது.
வெளியீட்டிற்கு முன் விவோ வி19 ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்களை அந்நிறுவனம் அம்பலப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் விவோ வி19 ஸ்மார்ட்போனில் மொத்தம் ஆறு கேமராக்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் பின்புறம் நான்கு கேமரா சென்சார்களும், முன்புறம் இரு கேமரா சென்சார் பொருத்தப்படுகிறது.
முன்புறம் 32 எம்.பி. மற்றும் 8 எம்.பி. சென்சார் பயன்படுத்தப்பட இருப்பதாக விவோ தெரிவித்துள்ளது. இதுவரை விவோ பதிவிட்ட விளம்பர படங்களின்படி விவோ வி19 ஸ்மார்ட்போன் சூப்பர் நைட் செல்ஃபி, ஆரா ஸ்கிரீன் லைட் மற்றும் சூப்பர் வைடு ஆங்கில் புகைப்படங்களை எடுக்கும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. அந்த வகையில் இதில் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் எதிர்பார்க்க முடியும்.
புதிய விவோ வி19 ஸ்மார்ட்போனில் AMOLED ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இதனால் இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள பிரைமரி கேமரா சென்சார்கள் L வடிவத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இதற்கான ஃபிளாஷ் மாட்யூல் கேமரா சென்சாரின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விவோ வி19 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது 5ஜி ஐபோன் மாடல்களை இந்த ஆண்டு நிச்சயம் அறிமுகம் செய்யும் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 5ஜி ஐபோன் மாடல்களின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், 5ஜி ஐபோன் மாடலின் உற்பத்தி பணிகள் மே மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் 5ஜி ஐபோன் மாடல்கள் வெளியீட்டில் எவ்வித தாமதமும் இருக்காது என தெரிகிறது. ஆப்பிள் வெளியிட இருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்பட இருக்கிறது.

கடந்த மாதம் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் மூடப்பட்டு இருந்ததில் 80 சதவீத ஸ்டோர்கள் திறக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ஐபோன்களின் உற்பத்தி பணிகள் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேக் சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விநியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், இவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு விநியோகம் மே மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் 720x1600 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 20:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 2 எம்.பி. மேக்ரோ சென்சார்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் சியான், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 189 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 15,079) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 6.81 இன்ச் FHD+ பன்ச் ஹோல் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 5ஜி வசதி, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு சென்சார், 2.8μm சூப்பர் பிக்சல்கள், வீடியோ ஹெச்.டி.ஆர்., 4கே அல்ட்ரா ஹெச்.டி. வசதி, டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.81 இன்ச் 1080x2400 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
- அட்ரினோ 620 GPU
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- சிங்கிள் / டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 2 எம்.பி. மேக்ரோ சென்சார்
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்
நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம் விலை 599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 47,865) என்றும் 8 ஜி.பி. ரேம் விலை 649 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 51,835) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஏ12இசட் பயோனிக் பிராசஸர், வைடு ஆங்கில் கேமரா கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புத்தம் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய மாடல்களில் ஏ12இசட் பயோனிக் பிராசஸர், அல்ட்ரா வைடு கேமரா, 5 ஸ்டூடியோ தர மைக்குகள், LiDAR ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபேட் ஒ.எஸ். 13.4 பதிப்பில் டிராக்பேட் பயன்படுத்துவதற்கான வசதியை ஆப்பிள் வழங்குகிறது.

ஆப்பிள் ஐபேட் ப்ரோ 11 இன்ச் / 12.9 இன்ச் 2020 சிறப்பம்சங்கள்:
- 11 இன்ச் 2388x1668 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- 12.9 இன்ச் 2732x2048 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஏ12இசட் பயோனிக் பிராசஸர்,
- 8 கோர் ஜி.பி.யு. மற்றும் எம்12 மோஷன் பிராசஸர்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. / 512 ஜி.பி. / 1000 ஜி.பி. மெமரி
- ஐபேட் ஒ.எஸ். 13.4
- 12 எம்.பி. கேமரா, f/1.8
- 10 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5பி லென்ஸ், குவாட் எல்.இ.டி. ட்ரூ டோன் ஃபிளாஷ்
- 7 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- போர்டிரெயிட் லைட்டிங், ரெட்டினா ஃபிளாஷ், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர்.
- ஐந்து மைக்ரோபோன்கள்
- 4ஜி எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. சி
- 11 இன்ச் மாடலில் 28.65 வாட் பேட்டரி
- 12.9 இன்ச் மாடலில் 36.71 வாட் பேட்டரி
11 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் விலை ரூ. 71,900 என துவங்குகிறது. இதன் வைபை + செல்லுலார் மாடல் ரூ. 85,900 என்றும், 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் ரூ. 89,900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் ரூ. 1,03,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பாடி, பிர்தயேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்களை கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72MP3 GPU
- 4 ஜி.பி. LPDDR4x ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் ராவென் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 23-ம் தேதி அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய வி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனத்தின் வி19 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முன்னதாக விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ வி19 இந்திய வேரியண்ட் சற்றே வித்தியாசமானதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் விவோ வி19 ஸ்மார்ட்போன் டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

விவோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் தகவல்களில் விவோ வி19 ஸ்மார்ட்போனில் சூப்பர் நைட் செல்ஃபி, ஆரா ஸ்கிரீன் லைட் மற்றும் சூப்பர் வைடு ஆங்கில் போன்ற விசேஷ கேமரா அம்சங்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக இணையத்தில் லீக் ஆன தகவல்களில் விவோ வி19 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இத்துடன் AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர விவோ வி19 கேமரா மாட்யூல் L வடிவத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் முன்புறம் டூயல் பன்ச் ஹோல் வலதுபுறத்தில் காணப்படுகிறது. புதிய விவோ வி19 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.
மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் மடங்கக்கூடிய OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கிறது.
இதை கொண்டு நோட்டிஃபிகேஷன், மியூசிக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை வேகமாக இயக்க முடியும். புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பிரைமரி கேமரா போன்றும், மடிக்கப்பட்ட நிலையில் செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மோட்டோரோலா ரேசர் 2019 சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
– 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
– 6 ஜி.பி. பேம்
– 128 ஜி.பி. மெமரி
– 16 எம்.பி. f/1.7 கேமரா
– 5 எம்.பி. கேமரா
– ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
– 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
– இசிம் வசதி
– ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை
புதிய மோட்டோரோலா ரேசர் 2019 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை 1,24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நொய்ர் பிளாக் நிறத்தில் கிடைக்கும் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் Mi அவுட்-டோர் ஸ்பீக்கர், டூயல் டிரைவர் வையர்டு இயர்போன், Mi டூத்பிரஷ் என அக்சஸரீக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் சியோமியின் புதிய சாதனம் மார்ச் 16-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதற்கென அந்நிறுவனம் புதிய டீசர்களை வெளியிட்டுள்ளது. அதன்படி டீசர்களை பார்க்கும் போது சியோமி நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட பவர் பேங்க் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

சியோமி வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில், “One less wire to deal with. Mi fans, it’s time to #CutTheCord. All the power you need without any hassle. Guess what this is.” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதிலுள்ள ஹேஷ்டேக்கில் புதிய சாதனம் வயர்லெஸ் வசதி கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது. வீடியோவில் உள்ள விவரங்கள் சார்ஜிங் சார்ந்து இருக்கின்றது.
இதனால் சியோமி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சாதனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட பவர் பேங்க் தான் என கூறப்படுகிறது. சியோமி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் Mi 10 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளதால், புது சாதனம் வயர்லெஸ் சார்ஜிங் பவர் பேங்க் தான் என்றே கூறப்படுகிறது.






