என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடலில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை வழங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்து வரும் ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே பயன்படுத்தி வருகிறது. 2018 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் OLED நிகழ்வு ஒன்றில் OLED சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்தது. அதில் அன்டர் ஸ்கிரீன் சென்சார் தொழில்நுட்பமும் இடம்பெற்று இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் முன்புற செல்ஃபி கேமராவினை டிஸ்ப்ளேவின் கீழ் மறைந்து இருக்க செய்கிறது. புதிய தொழில்நுட்பத்தை ப்ரோடோடைப்களில் வழங்கி சோதனை செய்து வருவதாக சாம்சங் தெரிவித்து இருந்தது. அந்த சமயத்தில் வெளியான தகவல்களில் புதிய தொழில்நுட்பம் 2020 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
எனினும், இது 2021 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் கொண்ட ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்தி இருக்கிறது.
இதேபோன்று ஒப்போ நிறுவனமும் ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கான அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் காட்சிப்படுத்தி இருந்தது.
ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் புதிதாக பச்சை நிறத்தில் உருவாகி வருவது சமீபத்திய டீசரில் தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் டீசரை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்டிருக்கிறார்.
டீசர்களின் படி ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ அல்லது இரு மாடல்களும் பச்சை நிறத்தில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். முந்தைய ஒன்பிளஸ் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட்டெட் சில்வர் மற்றும் கிளேசியர் புளூ நிறங்களில் வெளியிடப்பட்டது.

பீட் லௌ வெளியிட்ட டீசரில் ஸ்மார்ட்போனின் பின்புறம் பச்சை நிறத்தில் ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பொருத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. இதில் ஒன்பிளஸ் லோகோ கீழ்புறமாக காணப்படுகிறது. டீசரில் இருப்பது ஒன்பிளஸ் 8 அல்லது ஒன்பிளஸ் 8 ப்ரோ என்பதை பீட் லௌ குறிப்பிடவில்லை.
கடந்த வாரம் பீட் லௌ ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். புகைப்படங்கள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு இருந்ததோடு, கேமராவின் அல்ட்ரா வைடு ஆங்கில் அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.
ஏற்கனவே ஒன்பிளஸ் வெளியிட்ட தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ராப் சார்ஜ் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. விலையை பொருத்தவரை ஒன்பிளஸ் 8 ப்ரோ 919 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 76,900 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வடிவமைப்பு, ரெயின்டிராப் ரக கேமரா உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
எல்ஜி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலின் வரைபடங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. வரைபடங்களின் படி புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள் மிக எளிமையான வடிவமைப்பு, முன் மற்றும் பின்புறங்களில் சிமெட்ரிக்கல் வளைவுகள் மற்றும் ரெயின்டிராப் கேமரா உள்ளிட்டவற்றை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
புதிய வடிவமைப்பு ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக இருக்கும் என எல்ஜி தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பின்புறத்தின் மேல் இடதுபுறத்தில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் அளவுகள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை பார்க்க ரெயின் டிராப் போன்று காட்சியளிக்கின்றன.

இதுபோன்ற கேமரா அமைப்பை வழங்கும் போது, குறைவான இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனின் பின்புறம் அழகாகவும், ஒட்டுமொத்தமாக மெல்லிய தோற்றத்தையும் வழங்கும் என எல்ஜி தெரிவித்துள்ளது.
எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன் 3டி ஆர்க் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே ஓரங்களில் வளைக்கப்பட்டு இருக்கின்றன. இவை முந்தைய எல்ஜி ஸ்மார்ட்போன்களை விட மிக தத்ரூபமான அனுபவத்தை வழங்குகின்றன. மேலும் இது ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அனுபவத்தை மென்மையானதாகவும் மாற்றும்.
ஸ்மார்ட்போனின் இதர விவரங்களை எல்ஜி வழங்கவில்லை. எனினும், எல்ஜி புதிதாக பிரீமியம் சாதனம் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது ஃபிளாக்ஷிப் ரக சிறப்பம்சங்கள் மற்றும் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய வி சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் வி19 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் மார்ச் 26 ஆம் தேதி அறிமுகமாக இருந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் தாமதமானது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை வரை விவோ வி19 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. விவோ வி19 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 48 எம்பி பிரைமரி கேமரா சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
புதிய விவோ வி19 ஸ்மார்ட்போனில் ஃபன்டச் ஒஎஸ் 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விவோ வி19 சிறப்பம்சங்கள்:
- 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2400x1080 பிக்சல் ரெசல்யூஷன்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
- 8 ஜிபி ரேம்
- 128ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 32 எம்பி செல்ஃபி கேமரா
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய விவோ வி19 ஸ்மார்ட்போன் ஸ்லீக் சில்வர் மற்றும் கிளீம் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விவோ வி19 ஸ்மார்ட்போனின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் ஒவ்வொரு சந்தைக்கான விலை மற்றும் விற்பனை விவரங்களை விவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமான சாம்சங் பல்வேறு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ்களில் உருவாகி வருகிறது. அந்த வகையில் சாம்சங் உருவாக்கி வரும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ21எஸ் மாடலில் இதுவரை வெளியிடப்படாத எக்சைனோஸ் 850 பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதில் 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ ஸ்கின் வழங்கப்படுகிறது.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A217F எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இதில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிரைமரி கேமராவுடன் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஒன்றும் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், வைட் மற்றும் புளூ என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் கீக்பென் சோதனையில் கேலக்ஸி ஏ221எஸ் சிங்கிள் கோரில் 183 புள்ளிகளை, மல்டி கோரில் 1075 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ரென்டர்களின்படி இதில் ஆல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டாட் நாட்ச் டிசைன் மற்றும் கீழ்புறத்தில் தடிமனான பெசல் காணப்படுகிறது. மேலும் புகைப்படங்களை எடுக்க குவாட் கேமரா செட்டப், எல்இடி ஃபிளாஷ் யூனிட் மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அமேசான் நிறுவனம் கேம் ஸ்டிரீமிங் சேவையினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேமிங் துறை கடந்த சில ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. தற்சமயம் அமேசான் நிறுவனமும் கேமிங் துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளது. அமேசான் கேம் ஸ்டிரீமிங் சேவையின் முதல் கேம் அறிவியல் புனைகதை சார்ந்து உருவாகி இருக்கிறது. இந்த கேம் குரூசிபில் என அழைக்கப்படுகிறது.
குரூசிபில் மட்டுமின்றி நியூ வொர்ல்டு பெயரில் மல்டி பிளேயர் கேம் ஒன்றை வெளியிடவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. குரூசிபில் கேமினை ரெலென்ட்லெஸ் எனும் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் உருவாக்கி வருகிறது. அமேசான் நீண்ட கால முதலீடு காரணமாக இது சாத்தியமாகி இருக்கிறது.

நியூ வொர்ல்டு கேமினை ஐர்வைன் எனும் கேம் ஸ்டூடியோ உருவாக்கியுள்ளது. வீடியோ கேமிங் துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களை கொண்டு வர அமேசான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அமேசான் புதிய திட்டம் மூலம் கூகுள் ஸ்டேடியா சேவைக்கு போட்டியாக அமைகிறது.
இதற்கென பிராஜக்ட் டெம்போ எனும் சேவையினை உருவாக்கி வருகிறது. இத்துடன் கேம் பிராசஸிங் என்ஜின் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. லம்பர்யார்டு என அழைக்கப்படும் இந்த என்ஜின் அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் பவர் மூலம் இயங்குகிறது.
இத்துடன் இன்டராக்டிவ் கேம்களில் பயனர் மற்ற கேமர்களுடன் உரையாட ட்விட்ச் எனும் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனம் 144 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பல்வேறு புதிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் புதிய ஸ்மார்ட்போன்கள், அக்சஸரீக்கள், ஃபிட்னஸ் பேண்ட் உள்ளிட்டவை சியோமி, ரெட்மி மற்றும் எம்ஐ பிராண்டிங்கில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு சாதனங்களின் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இதுதவிர ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்களின் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. எதுவாயினும், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில் சியோமி உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மர்மமாக உருவாகி வரும் சியமி சாதனம் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் 144 எம்.பி. பிரைமரி கேமரா என தகவல் வெளியாகி இருக்கிறது.

சியோமி நிறுவனம் விரைவில் எம்.ஐ.10எஸ் ப்ரோ அல்லது எம்.ஐ. சிசி9 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 144 எம்.பி. சியோமி ஸ்மார்ட்போன் 108 எம்.பி. சென்சார் கொண்டிருக்கும் தற்போதைய சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் சியோமி எம்.ஐ. நோட் 10 சீரிஸ், எம்.ஐ. 10 5ஜி, எம்.ஐ. ஆல்ஃபா, எம்.ஐ. சிசி9 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. புதிய 144 எம்.பி. சென்சார் உருவாக்க சியோமி நிறுவனம் சாம்சங்குடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. மேலும் இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் மற்றும் இதர கேமரா சென்சார் பற்றிய விவரங்களும் ரகசியமாகவே இருக்கிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஃபிட்பிட் நிறுவனத்தின் புதிய ஃபிட்பிட் சார்ஜ் 4 ஃபிட்னஸ் பேண்ட் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபிட்பிட் நிறுவனத்தின் சார்ஜ் 4 ஃபிட்னஸ் டிராக்கர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிட்பிட் சார்ஜ் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய ஃபிட்பிட் சார்ஜ் 4 மாடலில் பில்ட் இன் ஜிபிஎஸ், ஸ்பாடிஃபை போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்விம் ப்ரூஃப் வடிவமைப்பு, இன்டக்டிவ் பட்டன், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் ஸ்கிரீன், பிரைட், கிரிஸ்ப் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள டிஸ்ப்ளே இயற்கை வெளிச்சமுள்ள சூழலிலும் எளிமையாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஃபிட்பிட் பர்ஸ்பல்ஸ் 24/7 இதய துடிப்பு டிராக்கிங் வசதி, உடற்பயிற்சி, பவர் யோகா, நடைபயிற்சி என பல்வேறு உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.
இதுதவிர முன்னதாக ஃபிட்பிட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த பல்வேறு அம்சங்கள் புதிய ஃபிட்னஸ் சாதனத்தில் ஃபிட்பிட் வழங்கி உள்ளது.
புதிய ஃபிட்பிட் சார்ஜ் 4 பிளாக், ரோஸ்வுட் மற்றும் ஸ்டாம் புளு/பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிரானைட் ரிஃப்ளெக்டிவ் / பிளாக் வோவென் பேண்ட் மற்றும் கிளாசிக் பிளாக் பேண்ட் கொண்ட ஃபிட்பிட் சார்ஜ் 4 ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.2 மாடல் இந்த தேதியில் தான் வெளியாகும் என புதிய தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஐபோன் 9 என்கிற ஐபோன் எஸ்.இ.2 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இந்த ஆண்டு துவக்கம் முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ.2 மாடலை ஏப்ரல் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஐபோன் எஸ்.இ.2 மாடலுக்கான கேஸ் புகைப்படங்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 2016 ஐபோன் எஸ்.இ. போன்றே புதிய ஐபோன் 9 மாடலின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் கேஸ் புகைப்படத்தில் அர்பன் ஆர்மர் கியர் பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.

சிவப்பு நிற கேஸ் மெட்டல் எக்சோ-ஸ்கெலிட்டன் அல்லது லெதர் கேசுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஃபிரேம் போன்று இருக்கும் என கூறப்படுகிறது. கேஸ் வலது புற ஓரத்தில் கேமரா கட்-அவுட் காணப்படுகிறது. இதன் பேக்கேஜிங்கில் புதிய ஐபோன் 4.7 இன்ச், 2020 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதன் ஸ்கிரீன் அளவை வைத்தே இது ஐபோன் 9 என்கிற ஐபோன் எஸ்.இ.2 என கூறப்படுகிறது. ஐபோன் கேஸ் புகைப்படத்தில் மிலிட்டரி ஸ்டாண்டர்டு பிராண்டிங் கொண்டிருக்கிறது. பெஸ்ட் பை மற்றும் இதர முன்னணி விற்பனையாளர்களுக்கு புதிய கேஸ் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களுக்கு ஐபோன் 9 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 30,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
ரெட்மி பிராண்டின் கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான தகவல்களில் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், போக்கோ எஃப்2 ரெட்மி கே30 ப்ரோ மாடலை விட வித்தியாசமானது என போக்கோ பிராண்டு பொது மேலாளர் சி மன்மோகன் தெரிவித்து இருக்கிறார்...
மேலும் போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக 2018 ஆண்டு வெளியிடப்பட்ட போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், லிக்விட் கூலிங் வசதியுடன் ரூ. 20,999 விலையில் வெளியிடப்பட்டது.
கடந்த வாரம் போக்கோ பொது மேலாளர் மன்மோகன் தனது ட்விட்டரில், மக்கள் போக்கோ பிராண்டிங்கின் கீழ் எதிர்பார்க்கும் சாதனங்களை தேர்வு செய்ய கோரினார். அதில் பெரும்பாலானோர் TWS ரக இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என பதில் அளித்து இருந்தனர்.
அந்த வகையில் வாடிக்கையாளர்கள் விருப்பப்படி போக்கோ பிராண்டு TWS இயர்பட்ஸ் உருவாக்கி வருவதாக மன்மோகன் தெரிவித்து இருக்கிறார். விரைவில் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சியோமி நிறுவனம் TWS இயர்பட்ஸ் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இவை எதுவும் இந்திய சந்தைக்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை. அந்த வகையில் போக்கோவின் TWS இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாதனமாக இருக்கிறது.
டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவையில் விரைவில் இலவச லேண்ட்லைன் சேவை மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் லேண்ட்லைன் சேவை வழங்கப்பட இருக்கிறது. இதனை டாடா ஸ்கை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதை கொண்டு ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் உடனான போட்டியை பலப்படுத்த முடியும்.
அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டாடா ஸ்கை நிறுவனம் அன்லிமிட்டெட்ட வாய்ஸ் காலிங் சேவையினை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அன்லிமிட்டெட் அதிவேக டேட்டா வழங்கும் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சலுகைகளின் விலை மாதம் ரூ. 900 முதல் துவங்குகிறது.
இலவச லேண்ட்லைன் சேவை எவ்வித தகவல்களும் இன்றி டீசர் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கென டாடா ஸ்கை வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில், ‘ஸ்டிரீம் அன்லிமிட்டெட். கால் அன்லிமிட்டெட்’ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை வைத்து அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவை மற்றும் புதிய லேண்ட்லைன் சேவை வழங்கப்பட இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் புதிய சேவை விரைவில் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி இதுவரை குறிப்பிடவில்லை. டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவையில் மொத்தம் மூன்று அன்லிமிட்டெட் சலுகைகள் மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
இவற்றின் விலை மாதம் ரூ. 900 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் அதிகபட்சம் நொடிக்கு 100 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. மாதாந்திர சலுகை மட்டுமின்றி, 3, 6 மற்றும் 12 மாதங்களுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே ஏர்டெல், ஜியோ ஃபைபர் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் பிராட்பேண்ட் சேவையுடன் லேண்ட்லைன் சேவையையும் வழங்கி வருகின்றன.
ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஹூவாய் பி40, பி40 ப்ரோ மற்றும் பி40 ப்ரோ பிளஸ் என மூன்று ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
இவற்றில் ஹூவாய் பி40 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் HD+ பிளெக்ஸ் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. ஹூவாய் பி40 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் 6.58 இன்ச் FHD+ பிளெக்ஸ் OLED குவாட் கர்வ் ஓவர்புளோ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் கிரின் 990 மற்றும் கிரின் 990 5ஜி 7 நானோமீட்டர் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக என்.பி.யு.க்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0 இயங்குதளம் கொண்டிருக்கும் ஹூவாய் பி40 சீரிஸ் மாடல்களில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கைரேகை சென்சார்கள் முந்தைய மாடல்களில் உள்ளதை விட 30 சதவீதம் வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹூவாய் பி40 சிறப்பம்சங்கள்:
- 6.1 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 990 5G பிராசஸர்
- ARM மாலி-G76MP16 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP53)
- யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை Wi-Fi 802.11 ax, ப்ளூடூத் 5.1 LE, ஜி.பி.எஸ்., NavIC, NFC
- யு.எஸ்.பி. 3.1 டைப்-சி
- 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 22.5 வாட் சூப்பர் சார்ஜ்

ஹூவாய் பி40 ப்ரோ மற்றும் பி40 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 6.58 இன்ச் 2640x1200 பிக்சல் பிளெக்ஸ் OLED டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 990 5G பிராசஸர்
- ARM மாலி-G76MP16 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 256 / 512 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.1
- டூயல் சிம் ஸ்லாட்
- ஹூவாய் பி40 ப்ரோ - 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9, OIS
- 40 எம்.பி. அல்ட்ரா வைடு சினி கேமரா, f/1.8
- 12 எம்.பி. RYYB பெரிஸ்கோப் கேமரா, f/3.4
- ToF கேமரா
- ஹூவாய் பி40 ப்ரோ பிளஸ் - 50 எம்.பி. RYYB அல்ட்ரா விஷன் கேமரா, f/1.9, OIS
- 40 எம்.பி. அல்ட்ரா வைடு சினி கேமரா, f/1.8
- 8 எம்.பி. பெரிஸ்கோப் கேமரா, f/4.4, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
- ToF கேமரா
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP53)
- யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை Wi-Fi 802.11 ax, ப்ளூடூத் 5.1 LE, ஜி.பி.எஸ்., NavIC, NFC
- யு.எஸ்.பி. 3.1 டைப்-சி
- 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 40 வாட் சூப்பர்சார்ஜ்
- 27 வாட் / 40 வாட் (ப்ரோ பிளஸ்) வயர்லெஸ் ஹூவாய் சூப்பர் சார்ஜ்
ஹூவாய் பி40 மற்றும் ஹூவாய் பி40 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் பிளாக், டீப் சீ புளூ , ஐஸ் வைட், சில்வர் பிராஸ்ட் மற்றும் பிளஷ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஹூவாய் பி40 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் மற்றும் பி40 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே 799 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 67,120) மற்றும் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 82,125) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






