search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ்
    X
    சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ்

    அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடலில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை வழங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

    தற்சமயம் விற்பனை செய்து வரும் ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே பயன்படுத்தி வருகிறது. 2018 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் OLED நிகழ்வு ஒன்றில் OLED சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்தது. அதில் அன்டர் ஸ்கிரீன் சென்சார் தொழில்நுட்பமும் இடம்பெற்று இருக்கிறது.

    சாம்சங்

    இந்த தொழில்நுட்பம் முன்புற செல்ஃபி கேமராவினை டிஸ்ப்ளேவின் கீழ் மறைந்து இருக்க செய்கிறது. புதிய தொழில்நுட்பத்தை ப்ரோடோடைப்களில் வழங்கி சோதனை செய்து வருவதாக சாம்சங் தெரிவித்து இருந்தது. அந்த சமயத்தில் வெளியான தகவல்களில் புதிய தொழில்நுட்பம் 2020 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    எனினும், இது 2021 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் கொண்ட ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்தி இருக்கிறது. 

    இதேபோன்று ஒப்போ நிறுவனமும் ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கான அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் காட்சிப்படுத்தி இருந்தது.
    Next Story
    ×