என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் 48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளன.



    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. குவாட் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இதே ஸ்மார்ட்போன் RMX2040 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. மேலும் இதில் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர 18 வாட் சார்ஜர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    ரியல்மி 6ஐ டீசர்

    இத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், டூயல் சிம் வசதி, வைபை, ப்ளூடூத் 5.0 போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதற்கட்டமாக மியான்மரில் அறிமுகம் செய்யப்படும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமராவும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறம் 16 எம்.பி. கேமராவும், நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன. 

     ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ்

    ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89 (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79 (ரெட்மி நோட் 9 ப்ரோ)
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா (ரெட்மி நோட் 9 ப்ரோ)
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் (ரெட்மி நோட் 9 ப்ரோ)
    - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)

    ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெல்லார் பிளாக், அரோரா புளூ மற்றும் கிளேசியர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 17-ம் தேதி துவங்குகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை மார்ச் 25-ம் தேதி துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்நிறுவன ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.

    2016 ஆம் ஆண்டிலேயே 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வு பணிகளை ஒன்பிளஸ் துவங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 5ஜி ஸ்மார்ட்போன்களை வணிக மயமாக்கல் மற்றும் பெருமளவு உற்பத்தியை மேற்கொள்வதில் அதிக அனுபவம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை ஒன்பிளஸ் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஒன்பிளஸ் 5ஜி

    முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை காட்சிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பின் ஒன்பிளஸ் 7டி ப்ரோ 5ஜி மெக்லாரென் எடிஷன் மாடலை அக்டோபர் மாதத்தில் வெளியிட்டது.

    புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் குவாட் ஹெச்.டி. பிளஸ் OLED ஃபுளூயிட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என அந்நிறுவனம் உறுதி செய்து விட்டது. ஒன்பிளஸ் 8 சீரிஸ் வெளியீட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
    வீட்டு பாதுகாப்பிற்கு உறுதி செய்யும் வகையில் புதிய சாதனத்தை ஜெப்ரானிக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் வீட்டு பாதுகாப்பிற்கு உறுதி செய்யும் புதிய ஹோம் ஆட்டோமேஷன் கேமராவினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வைஃபை, பான், சுழற்வசதி, டிஜிட்டல் ஜூம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்ட செயலி இணைக்கப்பட்ட நுண்ணுனர் கேமரா உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    குழந்தைகள் மற்றும் முதியவர்களின்  பாதுகாப்பிற்கு ஹோம் ஆட்டோமேஷன் கேமரா ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது, பயனர்கள் அலுவலகம் அல்லது ஏதேனும் விடுமுறையில் எங்கே இருந்தாலும், அவர்களது வீட்டில் நடப்பவற்றை  உடனுக்குடன் கண்காணிக்க முடியும். 

    ஹோம் ஆட்டோமேஷன் கேமரா விவரங்களை ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன்களாக பெறலாம். மேலும் வீட்டில் உள்ள நபர்களுடன், கேமரா வழியாகத் தொடர்புக்கொள்ளவும் இயலும். பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் கிடைக்கும் MIPC செயலியை பதிவிறக்கம் செய்துக் கொண்டு ஹோம் ஆட்டோமேஷன் கேமராவை எளிதாகப் பொருத்திக், கட்டமைக்கலாம். 

    ஜெப்ரானிக்ஸ் ஹோம் ஆட்டோமேஷன் கேமரா

    மேலும் கேமரா கோணங்களை மாற்றுதல், அலாரம் அமைப்பை இயக்குதல், நகர்வைப் பதிவு செய்தல் மேலும் புதிய வசதிகளுடன் இந்தச் செயலி கிடைக்கிறது. இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமராவில், மோஷன் டிடக்‌ஷன் என்னும் தனித்துவமான சிறப்பு அம்சம் உள்ளது. இதன்படி  கேமரா ஏதேனும் ஒரு அசைவை உணருமானால், உடனடியாக அலாரம் எழுப்பி, மொபைலுக்கு ஒரு செய்தியை அனுப்பும். இதனால் உடனடியாக வீட்டை கண்காணிக்க இயலும்.

    இந்த ஹோம் ஆட்டோமேஷன் கேமரா 350 டிகிரி சுழலும் வசதி மட்டும் இல்லாமல், விருப்பமானவர்களுடன் நேரடியாகத் தொடர்புக் கொள்ளும் இருவழித் தொடர்பு வசதியும் இதில் உள்ளது. வீட்டில் உள்ள முதியவர்களையோ குழந்தைகளையோ கண்காணிக்கிறீர்கள் எனில், இந்தக் கேமராவில், உட்பொருத்தப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக் உதவியுடன், கண்காணிப்பு மட்டுமின்றி அவர்களைத்தொடர்புக் கொள்ளவும் இயலும்.

    இந்தக் கேமரா LAN/WIFI/Hotspot இணைய இணைப்பு வசதி மற்றும் நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்கள்/தரவுகளை 512 ஜி.பி. சேமிப்பு வசதி வரை சேமிக்கும்படியாக மைக்ரோ எஸ்.டி. கார்டு சப்போர்ட் செய்யும் வசதியும் கொண்டது. இந்தக் கேமராவை சுவரில் பொருத்தலாம் அல்லது மேசைமீது வைத்தும் உபயோகப்படுத்தலாம்.
    சியோமி நிறுவனத்தின் Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது ஃபிளாக்‌ஷிப் Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளியீட்டு விவரங்களை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

    பெரும்பாலான நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதால், Mi 10 சீரிஸ் அறிமுக நிகழ்வு ஆன்லைன் நேரலையில் நிகழும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சில நிறுவனங்கள் தங்களது விழாக்களை ரத்து செய்து அவற்றை ஆன்லைனில் நடத்துவதாக அறிவித்து வருகின்றன.

    சியோமியின் Mi 10 சீரிஸ் டீசர்

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் சியோமி நிறுவனம் இரண்டு 5ஜி சாதனங்களை வெளியிடலாம் என கூறப்படுகிறது. இவற்றில் ஃபிளாக்‌ஷிப் தர ஹார்டுவேர் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புகைப்படங்களுக்கு சான்றளிக்கும் டி.எக்ஸ்.ஒ. பட்டியலில் சியோமி Mi 10 முன்னணி இடத்தை பிடித்ததாக முன்னதாக வெளியான தகவல்களில் கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலும் Mi 10 ப்ரோ மாடலுக்கு இணையான புள்ளிகளை பெற்றது. சியோமி நிறுவனம் Mi 10 சீரிஸ் மாடல்களை ட்விட்டர், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் நேரலை செய்ய இருக்கிறது. இந்திய நேரப்படி இந்த நிகழ்வு இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.
    இன்ஸ்டாகிராம் சேவையில் ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.



    ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சேவையில் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டாவில் ஏற்படும் குற்றங்களை குறைக்க முயற்சி செய்யப்படுவதாக தெரிகிறது. இதுபற்றிய முழு விவரங்களை வரும் நாட்களில் தெரிவிக்க இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புதிய அம்சங்கள் பற்றிய சோதனைகளில் ஈடுபடும் ஜேன் மன்சுன் வொங் எனும் ஆய்வாளர், பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை ஒரே சமயத்தில் பிளாக் செய்ய வலியுறுத்தும் வசதி சோதனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

    வொங் வெளியிட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்களில் பயனர்கள் பதிவிடும் கமெண்ட்களை தேர்வு செய்து அவற்றை ஆஃப், ரெஸ்ட்ரிக்ட் அல்லது பிளாக் செய்ய அனுமதிக்கும் அம்சம் காணப்படுகிறது. வொங் ட்விட்களுக்கு பதில் அளித்துள்ள இன்ஸ்டாகிராம், இது வெறும் சோதனை மட்டும் தான் இதுபற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஆன்லைன் துன்புறுத்தல்களை தடுக்க ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து புதிய அம்சங்களை சோதனை செய்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இன்ஸ்டாகிராம், ரெஸ்ட்ரிக்ட் எனும் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் பதிவுகளுக்கு வரும் கமெண்ட்களை மதிப்பிட முடியும். 

    பின் அவற்றை அழிக்கவோ, அனுமதிக்கவோ அல்லது நிராகரிக்கும் வசதியை இந்த அம்சம் வழங்குகிறது. ரெஸ்ட்ரிக்ட் அம்சத்தை தொடர்ந்து கேப்ஷன் வார்னிங் எனும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்தது. இந்த அம்சத்தில் பயனர்கள் புகைப்படம் அல்லது வீடியோக்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டால், இன்ஸ்டாகிராம் கருத்தினை மாற்றக் கோரும் தகவலை திரையில் காண்பிக்கும்.
    இன்ஃபினிக்ஸ் பிராண்டு இந்தியாவில் எஸ்5 ப்ரோ பெயரில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.53 இன்ச் எஃப்.ஹெச்.டி. பிளஸ் நோ நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 எக்ஸ் ஒ.எஸ். 6.0 டால்ஃபின் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. சென்சார் மற்றும் லோ லைட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியண்ட் பேக் கொண்டிருக்கும் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஃபின்க்ஸ் எஸ்5 ப்ரோ

    இன்ஃபின்க்ஸ் எஸ்5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.53 இன்ச் 2220x1080 பிக்சல் 19.5:9 FHD+ டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் 
    - 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 4 ஜி.பி. LPDDR4 ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ்.ஒ.எஸ். 6.0
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - வி.ஜி.ஏ. லோ லைட் சென்சார்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யு.எஸ்.பி. 
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மார்ச் 13-ம் தேதி துவங்குகிறது.
    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் செல்ஃபி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்.பி. சென்சார் மற்றும் 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் பக்காவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ரியல்மி 6 ப்ரோ மாடலில் கிரேடியன்ட் கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது. 

    ரியல்மி 6 ப்ரோ

    ரியல்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
    - 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார்
    - 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.1, சோனி IMX1471
    - 8 எம்.பி. இரண்டாவது 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்

    ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் லைட்னிங் புளூ, லைட்னிங் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 17,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 13-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டது. அந்த வரிசையில் சாம்சங் விரைவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

    முன்னதாக புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ப்ளூடூத் சான்று பெற்ற நிலையில், சமீபத்தில் இதே ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் கேலக்ஸி எம்30எஸ் மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    அந்த வகையில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, சாம்சங் எக்சைனோஸ் 9611 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்த்ன் புதிய எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 6-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    புதிய இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. பாப் அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு மற்றும் டெப்த் சென்சார்கள், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகின்றன.

    இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ

    இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ் ஒ.எஸ். 6.0 டால்ஃபின் சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்படுகிறது. இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் கிரீன், ரெட் என இரண்டு நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.

    இவைதவிர கூடுதலாக புளூ நிறத்திலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை மற்றும் மற்ற விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.
    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 44 எம்.பி. டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல்  ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல்- 44 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. மோனோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள், பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் கொண்டிருக்கிறது. 

    ஒப்போ ரெனோ 3 ப்ரோ

    ஒப்போ ரெனோ 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரிலலா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GM 9446 GPU
    - 8 ஜி.பி. LPPDDR4x ரேம் 
    - 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, EIS
    - 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
    - 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4, 1.75um
    - 44 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்

    ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அரோரல் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்கை வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29,990 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 32,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபேட் மாடலுடன் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை டேப்லெட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபேட் மாடல்களில் இருந்து புதிய மாற்றத்தை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய ஐபேட் சாதனத்திற்கென புதிய கீபோர்டினை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த கீபோர்டில் பில்ட் இன் டிராக்பேட் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடலுடன் இந்த சாதனத்தையும் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பில்ட் இன் டிராக்பேட் வழங்க இருக்கும் பட்சத்தில், ஐபேட் ஒ.எஸ். தளத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ஒ.எஸ். தளத்தில் மவுஸ் பயன்படுத்துவதற்கான வசதியினை சேர்க்கலாம் என கூறப்படுகிறது.

    ஐபேட்

    தற்போதைய ஐபேட் ஒ.எஸ். மவுஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. எனினும், இது அசிஸ்டிவ் டச் தொழில்நுட்பத்தின் நீட்சியாகவே உள்ளது. இந்த அம்சத்தினை செயல்படுத்த அக்சஸபிலிட்டி ஆப்ஷன் செல்ல வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினாலும், இது விண்டோஸ் அல்லது மேக் ஒ.எஸ்.இல் உள்ள வழக்கமான மவுஸ் பாயின்ட்டர் போன்று இருக்காது.

    புதிய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இதுவரை இல்லாத வகையில், புதிய ஐபேட் பயன்படுத்துவது வழக்கமான நோட்பேட் மற்றும் டேப்லெட் போன்று மாறும். இதோடு புதிய மென்பொருள் அப்டேட் தற்போதைய ஐபேட் சாதனங்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ×