என் மலர்
புதிய கேஜெட்டுகள்
விவோ நிறுவனத்தின் அபெக்ஸ் 2020 சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் தனது புதிய கான்செப்ட் போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.45 இன்ச் 120° ஃபுல் வியூ ராப்-அரவுண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய மாடலிலும் எவ்வித போர்ட்களோ, பட்டன்களோ வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக பிரெஸ்-சென்சிட்டிவ் பட்டன்கள் இருபுறமும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் விவோவின் மூன்றாம் தலைமுறை ஸ்கிரீன் சவுண்ட் கேஸ்டிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அபெக்ஸ் 2020 போனில் இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது தேவையான சமயத்தில் மட்டும் டிஸ்ப்ளேவில் தோன்றும். இதன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா சூப்பர் பிச்சல் போட்டோசென்சிட்டிவ் சிப் கொண்டிருக்கிறது. இதனால் புகைப்படத்தின் தரம் பாதிக்கப்படாது.
இதன் பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா, கிம்பல் போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது சீரான ஆப்டிக்கல் ஸ்டேபிலைசேஷன் வழங்குகிறது. இது வழக்கமாக OIS கொண்ட ஸ்மார்ட்போன்களை விட 200 சதவீதம் வரை துல்லியமாக ஸ்டேபிலைஸ் செய்யும் என விவோ தெரிவித்துள்ளது. இத்துடன் பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்படுகிறது.

விவோ அபெக்ஸ் 2020 சிறப்பம்சங்கள்:
- 6.45 இன்ச் 2330x1080 பிக்சல் FHD+ 120° ஃபுல் வியூ எட்ஜ்லெஸ் டிஸ்ப்ளே
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 12 ஜி.பி. LPDDR5 ரேம்
- 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 16 எம்.பி. கேமரா, 5x-7.5x கன்டினுவஸ் ஆப்டிக்கல் சூம் பிளஸ் 48 எம்.பி. கிம்பல்
- 16 எம்.பி. இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா
- 5ஜி SA/NSA, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1, GPS/GLONASS
- 60 வாட் வயர்லெஸ் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்
விவோ அபெக்ஸ் 2020 ஸ்மார்ட்போன் வைட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இது வெறும் கான்செப்ட் என்பதால், இதிலுள்ள சில அம்சங்கள் அடுத்த தலைமுறை நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் முன்பதிவு துவங்கியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 44 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. மார்ச் 2-ம் தேதி அறிமுகமாக இருக்கும் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் டூயல் செல்ஃபி கேமரா வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதில் 44 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது.
பின்பறம் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் - அரோரா புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்கை வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் வெளியிட்ட மாடலை விட வித்தியாசமானதாக இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்தியாவில் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் மட்டும் இங்கு அறிமுகம் செய்யப்படலாம்.
சீன வேரியண்ட் சிறிய பன்ச் ஹோலில் ஒற்றை செல்ஃபி கேமராவும், பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கிறது. இந்தியாவில் டூயல் செல்ஃபி கேமரா, பின்புறம் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. மோனோகுரோம் லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
64 எம்.பி. குவாட் கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

புதிய ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் ஒற்றை பன்ச் ஹோல், ரியல்மி 6 ப்ரோ மாடலில் டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் ஒற்றை செல்ஃபி கேமராவுடன், கூடுதலாக வைடு ஆங்கில் லென்ஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. ரியல்மி 6 ப்ரோ மாடலில் 90 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் FHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க இரு ஸ்மார்ட்போன்களிலும் 64 எம்.பி. ஏ.ஐ. குவாட் கேமராக்கள், ரியல்மி 6 ப்ரோ மாடலில் அல்ட்ரா வைடு லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

தற்சமயம் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 15-ம் தேதி துவங்குகிறது.
64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 5 எம்.பி. மேக்ரோ கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாடி மற்றும் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72MP3 GPU
- 6 ஜி.பி. LPDDR4x ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.2
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.ஆம். ஆடியோ ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 5-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி பிராண்டு தனது முதல் ஃபிளாக்ஷிப் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளேவில் 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், விசி கூலிங் வேப்பர் சேம்பர் பிளஸ் மல்டி லேயர் சாலிட் கிராஃபைட், பில்ட் இன் 5ஜி (SA/NSA) கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, 4200 எம்.ஏ.ஹெச். டூயல்-செல் பேட்டரி, 65 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
- 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ.
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், UIS
- 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5
- 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் கேமரா, f/2.4
- 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, f/2.5
- 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் லினீயர் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 64 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 18 வாட் QC/PD சார்ஜிங்
- 30 வாட் VOOC 4.0 ஃபிளாஷ் சார்ஜ்
ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மோஸ் கிரான் மற்றும் ரஸ்ட் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,999 என்றும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.
சியோமி நிறுவனத்தின் Mi சிசி10 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. புகைப்படங்களை பார்க்கும் போது இவை கான்செப்ட் ரென்டர் போன்று காட்சியளிக்கின்றன. ரென்டர்களில் Mi சிசி10 மற்றும் Mi சிசி10 லைட் பார்க்க ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் லைட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சில அம்சங்கள் மாற்றப்பட்டு இருக்கும்.
வடிவமைப்பு மற்றும் தரத்தின் அடிப்படையில் முந்தைய ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய Mi சிசி10 சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் Mi சிசி10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் Mi ஏ4 மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமியின் Mi ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. கான்செப்ட்களில் பார்க்க இவைமிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றே தெரிகிறது. Mi சிசி10 மாடலில் பெசல் லெஸ் வடிவமைப்பு, சிறிய பன்ச் ஹோல் கட்-அவுட் காணப்படுகிறது. இதன் பெசல்கள் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன.
அந்த வகையில் இதில் AMOLED பேனல் மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் பெரிய கேமரா மாட்யூல்கள் வழங்கப்படுகின்றன. கேமரா வடிவமைப்பு பார்க்க ஒன்பிளஸ் 7டி சீரிஸ் மாடல்களில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது.
தற்சமயம் கான்செப்ட் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், இதே வடிவமைப்பை சியோமி தனது Mi ஏ4 மாடலில் வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. முன்னதாக சியோமி வெளியிட்ட Mi ஏ3 ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போனாக விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஹெச்.டி. ஆடியோ வசதி கொண்ட டூயல் டிரைவர் இயர்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமி இந்தியா நிறுவனம் பிப்ரவரி 25-ம் தேதி இந்தியாவில் புதிய ஆடியோ சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக சியோமி Mi அவுட்டோர் ஸ்பீக்கர் மற்றும் Mi டூத்பிரஷ் உள்ளிட்ட சாசதனங்களை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில் சியோமி இந்தியா புதிய சாதனத்திற்கான டீசரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. டீசருடன் #HDAudio பிப்ரவரி 25 இல் அறிமுகம் எனும் தகவல் இடம்பெற்று இருக்கிறது. டீசர் வீடியோவில் புதிய இயர்போன் பிரெயிட் செய்யப்பட்ட கேபிள் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
Perfectly balanced sound with twice the drive.#HDAudio unveiling on 25th February. pic.twitter.com/bXDvofZLS9
— Mi India #108MP IS COMING! (@XiaomiIndia) February 21, 2020
அந்த வகையில் புதிய சியோமி சாதனம் வையர்டு இயர்போனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த இயர்போன் டூயல் டிரைவர்கள் மற்றும் ஹெச்.டி. ஆடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. சியோமியின் புதிய இயர்போன் தற்சமயம் சியோமி விற்பனை செய்து வரும் Mi இயர்போன்களுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய இயர்போன் ரியல்மி பட்ஸ் 2 சாதனத்திற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம். இதில் 11.2 எம்.எம். பூஸ்ட் டிரைவர், டூயல் டேங்கில் ஃபிரீ கேபிள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு 2020 விழாவில் அறிமுகம் செய்தது.
அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய விலையை சாம்சங் அறிவித்துள்ளது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃபிளிப் விலை ரூ. 1,09,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு பிப்ரவரி 21-ம் தேதி துவங்குகிறது. சாம்சங் இ ஸ்டோரில் வாங்குவோருக்கு பத்து நகரங்களில் பிரீமியம் வைட் குளோவ் டெலிவரி செய்யப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு விபத்து காப்பீடு, ஒரு முறை ஸ்கிரீன் பாதுகாப்பு, ஒரு வருடத்திற்கு சாம்சங் கேர் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் ஒருமுறை ஸ்கிரீன் பாதுகாப்பு சேவை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கப்படுகிறது.
இதுதவிர நான்கு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவைக்கான சந்தா மற்றும் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.
கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.
இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 64 எம்.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 64 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. மேக்ரோ மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ71 சிறப்பம்சங்கள்:
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 12 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- சாம்சங் பே
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் எஸ்.இ.2 ஸ்மார்ட்போனினை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாத வாக்கில் புதிய ஐபோன் 9 அல்லது ஐபோன் எஸ்.இ.2 மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மார்த் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்தது. இதே விழாவில் பல்வேறு ஐ.ஒ.எஸ். செயலிகள் மற்றும் சேவைகளை அறிவித்தது. அந்த வகையில் 2020 ஆண்டிற்கான விழா மார்ச் 31-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஐபோன்களின் விற்பனை ஏப்ரல் 3-ம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. ஐபோன் எஸ்.இ.2 ஸ்மார்ட்போன் 2016-இல் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் எஸ்.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகிறது. ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் ஐபோன் 5எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்.இ.2 ஐபோன் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இதில் டச்ஐடி சென்சார், 4.7 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஏ13 பயோனிக் சிப்செட், பின்புறம் ஒற்றை கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.
2020 ஐபோன் தவிர ஆப்பிள் நிறுவனம் 13-இன்ச் மேக்புக் ப்ரோ, ஐபேட் ப்ரோ சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் 5வாட் அவுட்புட், IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அழைப்புகளை ஏற்க மற்றும் நிராகரிக்க ஒற்றை பட்டன் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் அம்சங்கள்:
- 5வாட் அவுட்புட்
- சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும் கனடா ஃபைபர் ஃபிலிம்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ப்ளூடூத் 5
- அழைப்புகளை ஏற்க மற்றும் நிராகரிக்க ஒற்றை பட்டன்
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களுடன் இயங்கும்
- கையளவில் எடுத்து செல்லக்கூடிய வகையில் சிறிய வடிவமைப்பு
- ஆக்ஸ் போர்ட் வசதி
- 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
புதிய சியோமி Mi அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் பிளாக் நிறத்தில் கடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோவின் ஐகூ பிராண்டு இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் துணை பிராண்டு ஐகூ இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் பிப்ரவரி 25-ம் தேதி ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.
புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ஐகூ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன சந்தையில் ஐகூ பிராண்டு கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் வகையில் களமிறங்கியது. தற்சமயம் ஐகூ பிராண்டு சீனாவை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறங்க இருக்கிறது. சீன சந்தையில் ஐகூ பிராண்டு ஏற்கனவே அறிமுகம் செய்த மாடல்கள் இல்லாமல், இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

புதிய ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் இதுவரை 5ஜி நெட்வொர்க் வசதி இதுவரை துவங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி., 8 ஜி.பி. அல்லது 12 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படலாம். இத்துடன் இதில் UFS 3.1 வசதி கொம்ட 128 ஜி.பி. அல்லது 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன் 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






