என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி
    X
    ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி

    இந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

    ரியல்மி பிராண்டு இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரியல்மி பிராண்டு தனது முதல் ஃபிளாக்‌ஷிப் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளேவில் 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், விசி கூலிங் வேப்பர் சேம்பர் பிளஸ் மல்டி லேயர் சாலிட் கிராஃபைட், பில்ட் இன் 5ஜி (SA/NSA) கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, 4200 எம்.ஏ.ஹெச். டூயல்-செல் பேட்டரி, 65 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

     ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி

    ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:

    - 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி
    - 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ.
    - டூயல் சிம்
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், UIS
    - 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
    - 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் கேமரா, f/2.4
    - 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, f/2.5
    - 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.2
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி, டூயல் லினீயர் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 64 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - 18 வாட் QC/PD சார்ஜிங்
    - 30 வாட் VOOC 4.0 ஃபிளாஷ் சார்ஜ்

    ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மோஸ் கிரான் மற்றும் ரஸ்ட் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,999 என்றும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    Next Story
    ×