என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒப்போ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதள பக்கங்களில் வெளியானது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் இரு தளங்களிலும் விற்பனை செய்யப்படும் என உறுதியாகி இருக்கிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் டீசரில் புதிய ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 44 எம்.பி. டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்பது உறுதியாகி இருக்கிறது.
ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒ.எஸ். 7 வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. சென்சார், 8 எம்.பி. மற்றும் 2 எம்.பி. சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 16 ஜி.பி. ரேம், 108 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.97 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷனுடன் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 / எக்சைனோஸ் 990 பிராசஸர் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் X55 / எக்சைனோஸ் மோடெம் 5123 வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா மாடலில் அதிகபட்சமாக 16 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0, பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே வசதி வழங்கப்பட்டுள்ளன.
புகைப்படங்களை எடுக்க புதிய கேலக்ஸி எஸ்20 அலட்ரா ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 48 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS, 40 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் 8K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
IP68 தரச்சான்று பெற்று இருக்கும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங், புதிய வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா சிறப்பம்சங்கள்:
- 6.9 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200x1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
- ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ARM மாலி-G77MP11 GPU
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- 16 ஜி.பி. LPDDR5 ரேம், 512 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF
- 48 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS 24° FoV, f/3.5, PDAF
- 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, டெப்த் விஷன் கேமரா
- 40 எம்.பி. செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. 3.1
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் பவர் ஷேர்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிளவுட் கிரே மற்றும் காஸ்மிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 6.4 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஜி ஸ்டைலஸ் கொண்டு புகைப்படங்களை எடிட் செய்வது, குறிப்பு எழுதுவது, வரைபடம் உருவாக்குவது என பல்வேறு அம்சங்களை இயக்க முடியும். ஸ்டைலஸ் சாதனம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே ஸ்டைலசை எடுத்து குறிப்புகளை எழுத முடியும்.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2300x1080 பிக்சல் FHD+ IPS LCD மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- 48 எம்.பி. f/1.7, 1.6μm பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம்
- 16 எம்.பி. ஆக்ஷன் கேமரா, f/2.2, 2.0μm 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.2, 1.75μm, லேசர் ஆட்டோஃபோகஸ் (TOF)
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1μm
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

மோட்டோ ஜி பவர் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2300x1080 பிக்சல் FHD+ IPS LCD மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- 16 எம்.பி. f/1.7, 1.12μm பிரைமரி கேமரா
- 8 எம்.பி. கேமரா, f/2.2, 1.2μm 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.2, 1.75μm
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1μm
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டிக் இன்டிகோ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 299.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் ஸ்மோக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 249.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 17,870) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ஜி8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அமேசான் லண்டன் வலைதளம் மூலம் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மோட்டோ ஜி8 பவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2300x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.2
- 8 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
- 8 எம்.பி. சென்சார், f/2.4
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோ ஜி8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 1560x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 2 / 3 / 4 ஜி.பி. ரேம்
- 32 / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.2
- 8 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

மோட்டோ ஜி ஸ்டைலஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.36 இன்ச் 2300x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- ஆண்ட்ராய்டு 10
- 4 ஜி.பி. ரேம்
- 64 / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.2
- 16 எம்.பி. வைடு ஆங்கிள் ஆக்ஷன் கேமரா, f/2.2
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
புகைப்படம் நன்றி: @evleaks
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ரியல்மி யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் கொண்டிருக்கும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி3 சிறப்பம்சங்கள்:
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
- ARM மாலி-G52 2EEMC2 GPU
- 3 ஜி.பி. LPDDR4x ரேம், 32 ஜி.பி. eMMC 5.1 மெமரி
- 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிளேசிங் ரெட் மற்றும் ஃபுரோசென் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 14-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.
போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மர்ட்போன் சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும்.
புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:
- 6.67- இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm
- பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ-வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐகூ பிராண்டின் 5ஜி ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஐகூ பிராண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க இருப்பதை சமீபத்தில் அறிவித்தது. விவோ நிறுவனத்தின் தனி பிராண்டாக ஐகூ சீனாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறங்க இருக்கும் ஐகூ இங்கு தனது முதல் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டீசருடன் புதிய ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்பதையும் தெரிவித்து இருக்கிறது. புதிய டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய ஐகூ ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளம் மட்டுமின்றி ஐகூ பிராண்டு தனியே வலைதளம் ஒன்றை துவங்கி புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை அதில் பதிவேற்றம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கான நோக்கியா சிறப்பு நிகழ்வு பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
சிறப்பு நிகழ்வில் புதிய நோக்கியா பிராண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 8.2 5ஜி, நோக்கியா 5.2, நோக்கியா 1.3 மற்றும் புதிய நோக்கியா ‘ஒரிஜினல்’ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனில் pOLED அல்லது LCD பேனல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இதன் விலை 169 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 13,300) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி, பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ட்ரி லெவல் மாடலாக அறிமுகமாக இருக்கும் நோக்கியா 1.3 விலை 79 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 6,200) என நிர்ணயம் செய்யப்படலாம்.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் 16 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.
சியோமி நிறுவனத்தின் Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி Mi 10 ப்ரோ வலைதள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய சியோமி ஸ்மார்ட்போன் 16 ஜி.பி. ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.


மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மொத்தம் நான்கு சென்சார்கள் வழங்கப்படுகிறது. இதே சென்சார் Mi நோட் 10 மற்றும் Mi நோட் 10 ப்ரோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு ஸ்மார்ட்போன்களை வித்தியாசப்படுத்த Mi 10 சீரிஸ் மாடல்களில் இரவு நேர புகைப்படங்களை அதிக துல்லியமாக வழங்க செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்தனை அம்சங்களை சக்தியூட்ட 5250 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். இதனால் புதிய ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 35 நிமிடங்களே போதுமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய சவுண்ட் பார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
உங்களுடைய பொழுதுப்போக்கு அனுபவத்தை திரையரங்கு ஒலி அனுபவமாக மேம்படுத்தும் நோக்கில் ஜெப்ரானிக்ஸ் ஜூக் பார் 9000 ப்ரோ சவுண்ட் பார் சாதனத்தை ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
குறுகிய இடத்தில் அடங்கும் வகையிலும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள ஜூக் பார் 9000 ப்ரோ திரைப்படங்கள், இசை அல்லது எவ்விதமான பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்தாலும் நம்பகத்தன்மை வாய்ந்த 120 RMS அவுட்புட் திறனுடன் திரையரங்கம் போன்ற ஒலிசூழ் அனுபவத்தை வீட்டிலேயே வழங்கும்.
புதிய சவுண்ட் பார் டால்பி டிஜிட்டல் பிளஸ் சான்றிதழ் கொண்டிருப்பதால் ஒலியின் துல்லியம் ஒவ்வொரு காட்சியையும் உயிர்ப்புடன் மாற்றும். இதன் சுவரில் மாட்ட இயலும் வடிவமைப்பு அதிநவீன ஒலி நுட்பத்துடன் பொழுதுபோக்கை இனிமையாக்கும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த சவுண்ட்பாரில் HDMI(ARC) மற்றும் ஆப்டிகல் உள்ளீட்டு வசதி மற்றும் வயர்லெஸ் BT, USB/AUX/ HDMI போன்றவை உள்ளன. சத்தம் மற்றும் மீடியா கட்டுப்பாட்டு இயக்கிகளைக் கொண்ட LED திரையும் ரிமோட் வசதியும் இதன் ஸ்பீக்கர்களில் உள்ளது.
இதைத் தவிர, வயர்லெஸ் சப்-வூஃபர்கள் கொண்ட 80W RMS அவுட்புட் திறன் வழங்கும் ஜெப் ஜூக் பார் 4000, 120W RMS அவுட்புட் திறன் கொண்ட ஜெப் ஜூக் பார் 5000 ப்ரோ மற்றும் 160W RMS அவுட்புட் திறன் கொண்ட ஜெப் ஜூக் பார் 6000 DWS PRO போன்ற சவுண்ட்பார் மாடல்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
புதிய ஜெப் ஜூக் பார் 9000 ப்ரோ விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சவுண்ட் பார் இந்தியாவின் அனைத்து முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் சி2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், புதிய ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதன்படி இந்தியாவில் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட டீசரில் ரியல்மி பிராண்டு சர்வதேச சந்தையில் மொத்தம் 1.02 கோடி சி சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசருடன், புதிய ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி1 மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்களை போன்றே என்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

சமீபத்தில் RMX1941 எனும் மாடல் நம்பர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகின. தற்சமயம் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி சி3 மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ரிய்லமி சி3 ஸ்மார்ட்போனுடன் ரியல்மி சி3எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த இயங்குதளம், 4ஜி வசதி, வைபை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இது பிப்ரவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படும் என்றும் இதில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை மோட்டோரோலா அனுப்பி வருகிறது. அழைப்பிதழில் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் எட்ஜ் என்ற வார்த்தையை குறிப்பிடும் வாசகம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போன் இதர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.






