என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    விவோவின் ஐகூ பிராண்டு இந்தியாவில் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.



    விவோவின் ஐகூ பிராண்டு சீனாவில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பிராண்டு அறிமுகமானது முதல் சீனாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அங்கு வெளியிட்டுள்ளது. 

    சீனாவை தொடர்ந்து ஐகூ பிராண்டு இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் ஐகூ பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக ஐகூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர உயர் ரக சிறப்பம்சங்கள் நிறைந்த 4ஜி ஸ்மார்ட்போன்களை இங்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    விவோ ஐகூ ப்ரோ

    இந்தியாவில் ஐகூ பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் 5ஜி வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்ஜிங், கேமிங் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பான செயல்பாட்டை வழங்கும் என ஐகூ தெரிவித்துள்ளது.

    முதற்கட்டமாக ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு, எதிர்காலத்தில் ஆஃப்லைன் சந்தை மூலம் விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் புதிய ஸ்மார்ட்போன் பல்வேறு அம்சங்களை பெறும் முதல் மாடல் என்ற பெருமையை பெறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி இந்தியாவில் வெளியாகும் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை ஐகூ பிராண்டு வெளியிடும் என்றே தெரிகிறது.
    போகோ இந்தியா நிறுவனத்தின் புதிய விலை குறைந்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    இந்திய சந்தையில் போகோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் போகோ சியோமியில் இருந்து பிரிந்து தனி பிராண்டாக செயல்படும் என போகோ தெரிவித்தது.

    போகோ பிராண்டு இந்தியாவில் தொடர்ந்து குறைந்த விலையில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என போகோ இந்தியாவின் பொது மேலாளர் மன்மோகன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் புதிய போகோ ஸ்மார்ட்போனில் உயர் ரக பிராசஸர், அதிகளவு ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    போகோ பிராண்டு டீசர்

    புதிய போகோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என போகோ தெரிவித்துள்ளது. போகோ பிராண்டிங்கில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் போகோ தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களில் போகோ எக்ஸ்2 பெயரில் ஒரு மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போகோ பிராண்டு விற்பனை,  விளம்பரம் மற்றும் சேவை பிரிவுகள் தனித்தனி குழுக்களாக இயங்கும் என்றும் விநியோகம், விற்பனை மற்றும் சர்வீஸ் உள்ளிட்ட பணிகளை சியோமி குழுமம் கவனித்துக் கொள்ள இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனினை வெளியிட்டது. புதிய ஸ்மார்ட்போனி்ல் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சூப்பர் ஸ்டெடி ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், 12 எம்.பி. அல்ட்ரா வைடு மற்றும் 5 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முனபுறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி எஸ்10 லைட்

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.7-இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 8 ஜி.பி. LPDDR4x ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, சூப்பர் ஸ்டெடி OIS
    - 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.0
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ப்ரிஸம் வைட், ப்ரிஸம் பிளாக் மற்றும் ப்ரிஸம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகியுள்ளது.



    ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ்.எஸ். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் முந்தைய மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போன் TAH-AN00m எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. இதில் டூயல் பேண்ட் 5ஜி வசதி வழங்கப்படுகிறது. புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹூவாய் மேட் எக்ஸ்.

    ஹூவாயின் நுகர்வோர் குழும தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு, புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் கிரின் 990 சிப்செட் மூலம் இயங்கும் என்றும் இதில் கூகுள் சேவைகள் மற்றும் செயலிகள் இடம்பெற்று இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 3சி சான்று பெற்றது.

    அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 65 வாட் வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மேலும் புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனில் லெய்கா ஆப்டிக்ஸ் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. முந்தைய மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனிலும் லெய்கா ஆப்டிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹூவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் OLED ஃபுல்வியூ டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட்டிருந்தது. திறக்கப்பட்ட நிலையில் இதனை 8 இன்ச் அளவு கொண்ட டேப்லெட் சாதனமாக பயன்படுத்த முடியும்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 1080x2400 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமராவுடன், 12 எம்.பி. அல்ட்ரா வைடு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமரா சென்சார்களும், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏர் கமாண்ட் வசதி கொண்ட ப்ளூடூத் எஸ் பென் சாதனமும் வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்

    சாம்சங்  கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.7 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர்
    - மாலி G72MP18 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
    - 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
    - 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆரா குளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. விலை ரூ. 38,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 40,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சீன வலைதளம் ஒன்றில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்மார்ட்போன் ஒன்றில் 256 எம்.பி. கேமரா வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.



    தொழில்நுட்ப சந்தையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழக்கமான ஒன்றாக மாற துவங்கி இருக்கிறது. இந்நிலையில், சீன வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கும் தகவல்களில் 256 எம்.பி. கேமரா மோட் கொண்ட ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இதனுடன் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் கேமரா செயலியில் 256 எம்.பி. மோட் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்மார்ட்போன் பிராண்டு மற்றும் மாடல் பற்றி எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படத்தின் யூசர் இன்டர்ஃபேசை பார்க்கும் போது சியோமி, ஒப்போ மற்றும் ரியல்மி பிராண்டுகளில் ஒன்றாக இருக்கலாம் என தெரிகிறது.

    256 எம்.பி. மோட்

    தற்சமயம் வரை இது உறுதி செய்யப்படாத தகவலாக இருக்கும் நிலையில், 256 எம்.பி. கேமரா சொன்சாரை இயக்கும் திறன் கொண்ட சிப்செட் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தற்சமயம் வெளியாக இருக்கும் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரிலும் ஒற்றை லென்ஸ் 200 எம்.பி. கேமராவை இயக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    சியோமியின் Mi 10 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.

    சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 12-ம் தேதி தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருக்கிறது. சியோமி Mi 10 ஸ்மார்ட்போனிற்கு முன்பே கேலக்ஸி எஸ்11 அல்லது கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இவை இருக்கும்.

    புகைப்படம் நன்றி: 91mobiles
    ஹூவாய் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    ஹூவாய் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலான மேட் எக்ஸ்-ஐ விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனின் ஹின்ஜ் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டு, உறுதியான டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஹூவாய் மேட் எக்ஸ்

    மேட் எக்ஸ் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மேட் எக்ஸ்.எஸ். வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய மேட் எக்ஸ்.எஸ். முந்தைய ஸ்மார்ட்போனை விட அளவில் சிறியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டும் 2400 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,70,504) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை விட விலை அதிகம் ஆகும். 

    ஹூவாய் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனில் ஹின்ஜ் மேம்படுத்தப்பட்டு, முன்பை விட உறுதியாக ஸ்கிரீன் வழங்கப்படும் என ஹூவாய் நுகர்வோர் குழும நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு ஏற்கனவே தெரிவித்தார். மேட் எக்ஸ் போன்றே புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனும் கூகுள் சேவைகள் மற்றும் செயலிகள் இன்றி வெளியாகும்.
    ஹூவாய் நிறுவனத்தின் புதிய பி சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இதில் ஐந்து பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.



    ஹூவாய் நிறுவனத்தின் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அதன்படி புதிய ஹூவாய் பி40 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உருவாகி இருக்கும் பி40 ஸ்மார்ட்போனில் இரட்டை பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஐந்து பிரைமரி கேமரா, லெய்கா பிராண்டிங் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 52 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் அறிமுகமாக இருக்கும் பி40 ப்ரோ மாடலில் நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன்களில் யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்பீக்கர் கிரில், பிரைமரி மைக்ரோபோன் வழங்கப்படுகிறது.

    ஹுவாய் பி40 ப்ரோ ரென்டர்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால், இதில் AMOLED ஸ்கிரீன் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் வளைந்த OLED ஸ்கிரீன், கிரின் 990 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 சார்ந்த EMUI 10 இயங்குதளம் வழங்கப்படலாம். இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் அம்சம் வழங்கப்படலாம்.

    சர்வதேச சந்தையில ஹூவாய் பி40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவனம் பி30 சீரிஸ் மாடல்களை இதே தேதியில் அறிமுகம் செய்திருந்தது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய எஃப்15 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எஃப்15 ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய எஃப்15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா, 2 எம்.பி. மோனோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ எஃப்15 போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ஒப்போ எஃப்15

    ஒப்போ எஃப்15 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர்
    - 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
    - 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
    - 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4,1.75μm பிக்சல்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன் லைட்டெனிங் பிளாக் மற்றும் யுனிகான் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆப்பிள் பென்சில் சாதனத்தில் ஸ்மார்ட்போன் அம்சம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை பென்சில் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தில் இது தெரியவந்துள்ளது.

    மூன்றாம் தலைமுறை ஆப்பிள் பென்சிலில் மேம்பட்ட ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பயனர் பென்சிலை பிடித்திருக்கும் விதத்தை கொண்டு அம்சங்களை இயக்க வழி செய்யும் என தெரிகிறது.

    ஸ்டைலசில் வளையும் தன்மையில் டச் சென்சிட்டிவ் பகுதி இருப்பாக காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனரின் விரல் நுனி அப்பகுதியில் பதியும் தன்மைக்கு ஏற்ப பல்வேறு ஜெஸ்ட்யூர்களை புரிந்து கொள்ளும். மேலும் ஆப்பிள் பென்சிலில் கேமரா ஒன்றும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தும் போது வெவ்வேறு பகுதிகளை ஐபேட் திரையில் ஒளிபரப்பும் பணியை செய்யும்.

    ஆப்பிள் பென்சில்

    இத்துடன் ஆப்பிள் பென்சிலில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது சாதனத்தை அன்லாக் செய்வதில் துவங்கி ஆப்பிள் பே சேவைக்கு பயோமெட்ரிக் விவரங்களை உறுதிப்படுத்தும். முன்னதாக 2018-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது பென்சில் 2 சாதனத்தை அப்டேட் செய்தது.

    மற்ற ஸ்டைலஸ் சாதனங்களை போன்று ஆப்பிள் பென்சில் 2 கொண்டு வாடிக்கையாளர்கள் குறிப்புகளை எடுத்தல், திரையில் எழுதுவது, யூசர் இன்டர்ஃபேசில் நேவிகேட் செய்யலாம். 
    ஒப்போ நிறுவனத்தின் எஃப்15 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    ஒப்போ நிறுவனம் தனது எஃப்15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும் வெளியீட்டிற்கான டீசர்களையும் அந்நிறுவனம் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் வெளியிட்டு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஒப்போ ஏ91 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய டீசர்களில் ஒப்போ எஃப்15 பார்க்க ஏ91 போன்றே காட்சியளிக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 2 எம்.பி. கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ எஃப்15 டீசர்

    ஒப்போ ஏ91 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர்
    - 900MHz ARM மாலி-G72 MP3 GPU
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25, 1.12μm பிக்சல்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4,1.75μm பிக்சல்
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4,1.75μm பிக்சல்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
    டெக்னோ நிறுவனத்தின் ஸ்பார்க் கோ பிளஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    இந்திய சந்தையில் டெக்னோ நிறுவனம் புதிதாக ஸ்பார்க் கோ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் டாட் நாட்ச் ரக டிஸ்ப்ளே, 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் ஹை ஒ.எஸ். 5 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, டூயல் ஃபிளாஷ்லைட், முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, முன்புற ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ் அன்லாக் வசதி, கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஏ.ஐ. சேவிங் மற்றும் சேஃப் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி, எல்.டி.இ., வைபை, டூயல் வோல்ட்இ, ஜி.பி.எஸ்., ஆம்பியன்ட் லைட் சென்சார், பிராக்சிமிட்டி சென்சார், ஜி சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 


    டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ்

    டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.52 இன்ச் டாட் நாட்ச் ரக டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹை ஒ.எஸ். 5 சார்ந்த ஆண்ட்ராய்டு பை
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, டூயல் ஃபிளாஷ்லைட்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, முன்புற ஃபிளாஷ்
    - ஃபேஸ் அன்லாக் வசதி, கைரேகை சென்சார்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 4ஜி, எல்.டி.இ., வைபை, டூயல் வோல்ட்இ, ஜி.பி.எஸ்.
    ×