search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹூவாய் மேட் எக்ஸ்.
    X
    ஹூவாய் மேட் எக்ஸ்.

    டூயல் மோட் 5ஜி நெட்வொர்க் வசதியுடன் உருவாகும் ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகியுள்ளது.



    ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ்.எஸ். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் முந்தைய மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போன் TAH-AN00m எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. இதில் டூயல் பேண்ட் 5ஜி வசதி வழங்கப்படுகிறது. புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹூவாய் மேட் எக்ஸ்.

    ஹூவாயின் நுகர்வோர் குழும தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு, புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் கிரின் 990 சிப்செட் மூலம் இயங்கும் என்றும் இதில் கூகுள் சேவைகள் மற்றும் செயலிகள் இடம்பெற்று இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 3சி சான்று பெற்றது.

    அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 65 வாட் வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மேலும் புதிய மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனில் லெய்கா ஆப்டிக்ஸ் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. முந்தைய மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனிலும் லெய்கா ஆப்டிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹூவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் OLED ஃபுல்வியூ டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட்டிருந்தது. திறக்கப்பட்ட நிலையில் இதனை 8 இன்ச் அளவு கொண்ட டேப்லெட் சாதனமாக பயன்படுத்த முடியும்.
    Next Story
    ×