என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    டி.சி.எல். நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டி.சி.எல். 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

    அந்த வகையில் டி.சி.எல். நிறுவனம் டி.சி.எல். 10 ப்ரோ, டி.சி.எல். 10 5ஜி, டி.சி.எல். 10எல் பெயர்களில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இத்துடன் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களையும் டி.சி.எல். அறிவித்துள்ளது.

    சிலமாதங்ளுக்கு முன் டி.சி.எல். நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய திறன் கொண்டிருக்கும் என டி.சி.எல். தெரிவித்திருந்தது. 

    டி.சி.எல். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட பெசல்கள் காணப்படுகிறது. 

    மேலும் டி.சி.எல். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி மடித்தாலும் தாங்கும் உறுதித் தன்மை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை நான்கு பிரைமரி கேமராக்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கேமராக்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் பிரைமரி சென்சார், சூப்பர் வைடு ஆங்கில், மேக்ரோ லென்ஸ், லோ லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 5ஜி வசதி வழங்கப்படுவதால் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765 அல்லது ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் போன்களில் ஸ்னாப்டிராகன் 865 சிலிகான் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் அனைத்து பகுதிகளிலும் இம்முறை ஸ்னாப்டிராகன் பிராசஸர்களே வழங்கப்படும் என தெரிகிறது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 லீக்

    கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா கேலக்ஸி நோட் 10 மாடலில் உள்ள சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களில் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் போன்களுக்கான உற்பத்தி பணிகளை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவை கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 போன்களுடன் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 22,990 மற்றும் ரூ. 29,990 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    ஹானர் பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர் இந்திய சந்தையில் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலவையில், புதிய ஸ்மார்ட்போனுடன் ஹானர் பிராண்டு ஹானர் மேஜிக் வாட்ச் 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்துள்ளது.

    வெளியீட்டு தேதி பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. சர்வதேச சந்தையில் ஹானர் மேஜிக் வாட்ச் 2 ஹானர் வாட்ச் மேஜிக் மாடலின் மேம்பட்ட பதிப்பாகும்.

    ஹானர் இந்தியாவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் ஹானர் மேஜிக் வாட்ச் 2 டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஹானர் பிராண்டு தனது ஸ்மார்ட்வாட்ச் பெயரை ஹானர் வாட்ச் மேஜிக் 2 இல் இருந்து ஹானர் மேஜிக் வாட்ச் 2 ஆக மாற்றலாம் என தெரிகிறது. முன்னதாக ஹானர் வாட்ச் மேஜிக் மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

    ஹானர் மேஜிக் வாட்ச் 2

    சர்வதேச சந்தையில் ஹானர் வாட்ச் மேஜிக் 2 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 44 எம்.எம். மற்றும் 46 எம்.எம். என இருவித அளவுகளில் வெளியிடப்பட்டது. இதன் 44 எம்.எம். மாடல் விலை CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ. 11,300) என்றும் 46 எம்.எம்.ம வேரியண்ட் விலை CNY 1,199 (இந்திய மதிப்பில் ரூ. 12,300) என நிர்ணயிக்கப்பட்டது.

    ஹானர் மேஜிக் வாட்ச் 2 மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 42 எம்.எம். மாடலில் 1.2 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவும், 46 எம்எம். மாடலில் 1.39 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன் பெரிய மாடலில் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் 42 எம்.எமம். மெமரி மாடல் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குகிறது.
    சாம்சங் நிறுவனம் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சீரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.



    2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் புதிதாக சீரோவை அறிமுகம் செய்துள்ளது. இது 43 இன்ச் டி.வி. ஆகும். புதிய சாம்சங் டி.வி. அதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் போனில் இயங்கும் தரவுகளுக்கு ஏற்ப ஃபிரேம் தானாக மாற்றி கொள்ளும்.

    இந்த டி.வி. 4.2 சேனல் 60வாட் ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது டி.வி.யினை மொபைல் தரவுகளுக்கு ஏற்ப சுழல செய்யும். 

    சாம்சங் சீரோவில் ஆப்பிள் ஏர்பிளே 2 வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு ஐ.ஒ.எஸ். வாடிக்கையாளர்கள் வைபை மூலம் டி.வி.யில் தரவுகளை இயக்க முடியும். மற்றொரு அம்சமான சாம்சங் வால் கொண்டு டி.வி. பயன்படுத்தப்படாத போது சீரோவில் புகைப்படங்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஒளிபரப்ப முடியும்.

    சாம்சங் சீரோ

    புதிய சீரோ தவிர சாம்சங் நிறுவனம் 8K QLED டி.வி.யை Q950TS பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனை சாம்சங் இன்ஃபினிட்டி ஸ்கிரீன் என அழைக்கிறது. இந்த டி.வி.யின் பெசல் 2.3எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சந்தையில் கிடைக்கும் டி.வி.க்களில் மிகவும் சிறியதாகும்.
     
    இத்துடன் மேம்பட்ட லைட் சென்சார் கொண்ட தி ஃபிரேம் டி.வி.யை சாம்சங் அறிமுகம் செய்கிறது. புதிய சென்சார் டி.வி. பயன்படுத்தப்படாத நிலையில், பேனலை ஆஃப் செய்யும். தி ஃபிரேம் டி.வி. 32-இன்ச் மற்றும் 75-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. டி.வி.யுடன் நோ-கேப் வால் மவுண்ட் மற்றும் இன்விசிபிள் கனெக்ஷன் வழங்கப்படுகிறது. 

    மேலும் சாம்சங் மைக்ரோ எல்.இ.டி. ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனை சாம்சங் ஃப்ளிப் 2 என அழைக்கிறது. சாம்சங் மைக்ரோ எல்.இ.டி. மொத்தம் 83, 93, 110 மற்றும் 150 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. ஃபிளிப் 2 மாடலில் 43 இன்ச் அளவில் சுழலும் ஸ்டான்ட் கொண்டிருக்கிறது. 
    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் எஸ்1 ப்ரோ பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    விவோ நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.38 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    விவோ எஸ்1 ப்ரோ

    விவோ எஸ்1 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.38- இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம்
    - ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக், ஜாஸி புளூ மற்றும் டிரீமி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹானர் பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஹானர் 9எக்ஸ் என்ற பெயரில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் இந்த ஆண்டிற்கான தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹானர் இந்தியா தலைவர் சார்லெஸ் பெங் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.

    புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு ப்ளிப்கார்ட் தளத்தில் டீசர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதன் வெளியீடு தாமதமானது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசரில் ஹானர் 4எக்ஸ் முதல் 8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹானர் 9எக்ஸ் டீசர்

    ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பாப் அப் கேமரா போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் தவிர ஹானர் பிராண்டு ஹானர் மேஜிக் வாட்ச் 2 மற்று்ம மேஜிக் புக் லேப்டாப் போன்ற சாதனங்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீன சந்தையில் வெளியாகி இருக்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல் டிஸ்ப்ளே, கிரின் 810 ஆக்டா கோர் பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு பை சார்ந்த EMUI 9.1.1 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் 10 ஜி.பி. ரேம் உடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ரெட்மி பிராண்டின் கே30 5ஜி ஸ்மார்ட்போன் 10 ஜி.பி. ரேம் மாடல் விவரங்கள் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக ரெட்மி கே30 மற்றும் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

    அந்த வகையில் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனின் 10 ஜி.பி. விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம் விவரங்கள் இணையத்தில் வெளியாகின. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் 6 ஜி.பி., 8 ஜி.பி. மற்றும் 10 ஜி.பி. ஆப்ஷன்கள் லீக் ஆகி இருக்கின்றன. இவற்றுடன் முறையே 64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகின்றன.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் M2001G7AC எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதன் 10 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான 12 ஜி.பி. ரேம் மாடல் M2001G7AE எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.

    ரெட்மி கே30 5ஜி

    தற்சமயம் சியோமி நிறுவனம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலை டாப் எண்ட் வேரியண்ட்டாக சீனாவில் CNY 2899 (இந்திய மதிப்பில் ரூ. 29,100) விலையில் விற்பனை செய்து வருகிறது. புதிய 10 ஜி.பி. அல்லது 12 ஜி.பி. ரேம் மாடல் வெளியாகும் பட்சத்தில் இவற்றின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே தெரிகிறது.

    ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், ஹைப்ரிட் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமராவுடன், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 20 எம்.பி. மற்றும் 2 எம்.பி. என இரு செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 5ஜி, என்.எஃப்.சி. மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வசதி வழங்கப்படுகிறது.
    நான்கு கேமரா கொண்ட ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ரியல்மி பிராண்டின் ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனை மேம்பட்ட கேமரா சென்சார்களுடன் ரியல்மி அறிமுகம் செய்தது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் ரியல்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி 5ஐ என்ற பெயரில் ஜனவரி 6-ம் தேதி வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5எஸ் போன்று புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் க்ரிஸ்டல் வடிவமைப்பு காணப்படவில்லை. சிறப்பம்சங்கள் ரியல்மி 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. எனினும், இதன் முன்புற கேமராவில் மாற்றம் செய்யப்படுகிறது.

    ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 8 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது. ரியல்மி 5 மாடலில் 13 எம்.பி. சென்சார் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் புளூ மற்றும் கிரீன் நிறங்களில் வெளியாகும் என்றும் இதில் 4 ஜி.பி. + 64 ஜி.பி. ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிகிறது.

    ரியல்மி 5ஐ

    ரியல்மி 5ஐ சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm, f/2.25
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு ரேம் மற்றும் மெமரி மாடல்களில் கிடைக்கிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய வேரியண்ட் கூடுதல் மெமரியுடன் கிடைக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் ஹார்டுவேரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனினை 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி எனும் புதிய வேரியண்ட்டில் கிடைக்கிறது.

    அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரிக்களில் கிடைக்கிறது. விலையை பொருத்தவரை கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,999 விலையில் கிடைக்கிறது.

    கேலக்ஸி ஏ30எஸ்

    தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இதன் ஆன்லைன் விற்பனை துவங்கும் என தெரிகிறது. கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன்- கிரஷ் பிளாக், ப்ரிஸம் கிரஷ் வைட் மற்றும் ப்ரிஸம் கிரஷ் வைலட் நிறங்களில் கிடைக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 பிராசஸர், மாலி-ஜி71 ஜி.பி.யு., அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு பை ஒ.எஸ். சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED 720x1260 பிக்சல் டிஸ்ப்ளே, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 25 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
    விவோ நிறுவனத்தின் வி19 ப்ரோ மற்றும் வி19 ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    விவோ நிறுவனத்தின் விவோ வி19 ப்ரோ மற்றும் விவோ வி19 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்கும் முன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவோ வி19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விவோ வி17 சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய வி19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. விவோ நிறுவனம் விவோ வி17 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது.

    விவோ வி17

    சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி17 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இ3 AMOLED டிஸ்ப்ளே, இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் சிறிய பன்ச் ஹோல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனின் பெயர் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. கேலக்ஸி ஃபோல்டு 2 பார்க்க 2019 மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கிறது.

    கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கிறது. இது கேலக்ஸி எஸ்10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். மேலும் இது அடுத்த தலைமுறை நோட் சாதனங்கள் வெளியாகும் வரை சாம்சங்கின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாகவும் இருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்11  சீரிஸ் கேலக்ஸி எஸ்20 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்20 மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    கேலக்ஸி எஸ்11 லீக்

    மார்ச் 2010 இல் சாம்சங் தனது கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களை வெளியிட துவங்கியது. அந்த வகையில் புதிய தசாப்தத்தை துவங்க சாம்சங் எஸ் சீரிஸ் பெயரை 20 இல் இருந்து துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனுடன் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போன் பார்க்க 2019 மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கும் என புதிய புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலில் மிகவும் மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இது ஸ்மார்ட்போனினை மெல்லியதாக வைத்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் ஒன் யு.ஐ. 2.0 கொண்டிருக்கும் என தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. 

    புகைப்படம் நன்றி: OnLeaks | Weibo
    ரியல்மி பிராண்டு அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் சாதனங்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.



    ரியல்மி பிராண்டு அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுதவிர ரியல்மி பிராண்டு VOOC பவர் பேங்க் சாதனத்தையும் இந்தியாவில் அறிமுகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்திய சந்தையில் வாழ்வியல் சார்ந்த தொழில்நுட்ப பிராண்டாக ரியல்மியை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ

    புதிய சாதனங்கள் தவிர ரியல்மி 1, 2 யு1 மற்றும் சி1 ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 24 மாதங்களுக்கு தொடர் அப்டேட்கள் மற்றும் சில கலர் ஒ.எஸ். அப்டேட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 

    ஸ்கிரீன் ரெக்கார்டிங்கின் போது இன்டெர்னல் ஆடியோ ரெக்கார்டிங் வசதி கலர் ஒ.எஸ். 7 வெர்ஷனில் சேர்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். கலர் ஒ.எஸ். 7 அப்டேட் அடுத்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் ஹெட்போன், ரியல்மி எக்ஸ்.டி. மற்றும் இதர சாதனங்களுக்கு டால்பி அட்மோஸ் வசதி வசதி கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டில் வழங்கப்படுகிறது.

    ×