என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4ஜி மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், இவற்றில் 4ஜி எல்.டி.இ. வசதி வழங்கப்படவில்லை. தற்சமயம் சாம்சங் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலின் 4ஜி வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், 1.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 360x360 பிக்சல், டூயல் கோர் பிராசஸர், 1.5 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 39 உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இ சிம் மூலம் 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் கொண்டே வாடிக்கையாளர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இ சிம் சேவையை தற்சமயம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

    கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி (44எம்.எம்.) சிறப்பம்சங்கள்:

    - 1.4 இன்ச் 360x360 பிக்சல் சூப்பர் AMOLED
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+
    - எக்சைனோஸ் 9110 டூயல் கோர் 1.15 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
    - 768 எம்.பி. ரேம்
    - 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - டைசன் சார்ந்த அணியக்கூடிய ஒ.எஸ். 
    - ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதன் பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும்
    - ஐபோன் 5 அல்லது ஐ.ஒ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும்
    - இதய துடிப்பு சென்சார், இ.சி.ஜி. அக்செல்லோமீட்டர்
    - கைரோஸ்கோப், பாரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார்
    - 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G சான்று
    - இ சிம், 4ஜி எல்.டி.இ.
    - ப்ளூடூத் 5.0, வைபை
    - 340 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி (44 எம்.எம்.) மாடலில் 44 எம்.எம். ஸ்டீல் டையல் சில்வர் , பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 35,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரியல்மி பிராண்டின் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை குறைந்த வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம் மற்றும் இருவித மெமரி ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வேரியண்ட் தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட மெமரி குறைவு என்பதால் விலையும் குறைவாகவே இருக்கும் என தெரிகிறது.

    ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் வெளியாக இருப்பதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27,999 விலையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 29,999 விலையிலும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடல் ரூ. 33,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, HDR 10 பிளஸ், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ சான்று, 4D கேம் அதிர்வுகள், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி பட்ஸ் பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் புதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

    மேலும் இதனை சாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பார்க்க கேலக்ஸி பட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    கேலக்ஸி பட்ஸ் பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரென்டர்கள்

    பட்ஸ் பிளஸ் இயர்போன் ப்ளூடூத் 5.0, அக்செல்லோமீட்டர், பிராக்சிமிட்டி மற்றும் ஹால் சென்சார்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் விவரங்கள் அடங்கிய ஏ.பி.கே. குறியீடுகளில் விரைவில் வெளியாக இருக்கும் சாம்சங் ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் பற்றிய விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

    அதன்படி 2020 ஆண்டில் புதிதாக ஏர் பியூரிஃபையர், குளிர்சாதன பெட்டி மற்றும் ஓவன் போன்றவற்றை சாம்சங் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த இயர்பட்ஸ் SM-R175 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இவைதவிர புதிய இயர்பட்ஸ் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை. புதிய சாம்சங் இயர்போன்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் எஸ் பென் வசதி கொண்ட புதிய கேலக்ஸி டேப்லெட் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி சீரிசில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு, பின் டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தை அறிமுகம் செய்தது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் 10-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய டேப்லெட்டை அறிமகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய தகவல்களின் படி சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் SM-P610 மற்றும் SM-P615 என இரு மாடல் நம்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் SM-P610 மாடல் நம்பர் கொண்ட சாதனம் சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி டேப் ஏ

    இதேபோன்று SM-P615 மாடல் நம்பர் கொண்ட சாதனம் எல்.டி.இ. வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய கேலக்ஸி டேப் எஸ் பென் வசதி கொண்டிருக்கும் என்றும் இதில் பல்வேறு வித்தியாசமான அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அந்தவகையில் எஸ் பென் சாதனத்தை ஸ்கிரீன் அருகே கொண்டு சென்று எஸ் பென் பட்டனை க்ளிக் செய்தால் ஏர் கமாண்ட் பேனல் திறக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஒரு பகுதியை ஸ்மார்ட் செலக்ட் செய்து, அதனை மற்றவர்களுடன் பகிர்வது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது போன்றவற்றை மேர்கொள்ள முடியும் என தெரிகிறது. 

    மேலும் எஸ் பென் சாதனத்தை ஏதேனும் எழுத்தின் மீது கொண்டு சென்றால், குறிப்பிட்ட வார்த்தையை மொழி பெயர்க்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், இந்த அம்சத்தை இயக்க வைபை இணைப்பில் இருக்க வேண்டும். 

    புதிய கேலக்ஸி டேப்லெட்டில் 10.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் அல்லது குவால்காம் சிப்செட், 64 ஜி.பி. அல்லது 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. இதுவரை வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் பன்ச் ஹோல் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க கிட்டத்தட்ட கேலக்ஸி எஸ்10இ போன்று காட்சியளிக்கிறது. மேலும், புது ஸ்மார்ட்போனில் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களை போன்று சதுரங்க கேமரா பம்ப் கொண்டிருக்கிறது.

    கேலக்ஸி நோட் 10 லைட் புதிய ரென்டர்கள்

    இதேபோன்ற வடிவமைப்பு அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இவற்றில் 3D கிளாஸ்டிக் ஃபினிஷ், மெட்டல் ஃபிரேம், பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

    புதிய ரென்டர்களில் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் ஆரா குளோ நிறங்களில் உருவாகி இருக்கிறது. புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனிலும் எஸ் பென் வசதி, ப்ளூடூத் 5.1 வசதி, லொகேஷன் டிராக்கிங் அம்சத்துடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்படலாம் என தெரிகிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை 650 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 51,420) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: winfuture
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனின் விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டூயல் சிம் ஸ்லாட், எஃப்.எம். ரேடியோ வழங்கப்பட்டுள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி ஏ01

    சாம்சங் கேலக்ஸி ஏ01 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் பிராசஸர்
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - எஃப்.எம். ரேடியோ
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    இந்திய சந்தையில் ரியல்மி பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.



    ரியல்மி பிராண்டின் ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி எக்ஸ்2

    ரியல்மி எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை
    - 64 எம்.பி., 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
    - 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், f/2.4,1.75μm பிக்சல்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட் VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பியல் வைட், பியல் புளூ மற்றும் பியல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 18,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் ரூ. 19,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    ஒப்போ நிறுவனம் தனது என்கோ ஃப்ரீ இயர்பட்ஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் டிசம்பர் 26 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருந்தது. 

    புதிய ஸ்மார்ட்போன்களுடன் என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தையும் டிசம்பர் 26 நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஒப்போ தெரிவி்த்துள்ளது. புதிய தகவல்களின் படி இயர்பட்ஸ் நீண்ட ஸ்டெம் மற்றும் சார்ஜிங் கேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    ஒப்போ என்கோ வயர்லெஸ் இயர்பட்ஸ்

    இதன் வடிவமைப்புகளில் புதிய இயர்பட்ஸ் பார்க்க ரியல்மி பட்ஸ் ஏர் போன்றே காட்சியளிக்கிறது. ரியல்மி தனது பட்ஸ் ஏர் இயர்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒப்போ இயர்பட்ஸ் வைட், பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் உருவாகி இருக்கிறது.

    புதிய இயர்பட்ஸ் இல் ஒப்போ பிராண்டிங் கொண்டிருக்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் ப்ளூடூத் 5.0 ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஒரு முறை க்ளிக் செய்தால் கூகுள் அசிஸ்டண்ட், மியூசிக், கால் கண்ட்ரோல் போன்ற வசதிகளை வழங்குகிறது.

    இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமான என்கோ கியூ1 நெக்பேண்ட் ஹெட்செட்டில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளத்தில் சான்று பெற்று இருக்கிறது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.

    அந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்ட மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளமான FCC-யின் சான்று பெற்று இருக்கிறது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் XT2041-1 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    மோட்டோ ஜி8 பவர் ஸ்கெட்ச்
    மோட்டோ ஜி8 பவர் அம்சங்கள்

    அமெரிக்க வலைத்தளத்தின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 26 வாட் டர்போ சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் பின்புற கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனினும், வெளியீட்டு தேதி பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 2.3

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி., 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் இதன் விலை 109 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இயர்டிரான் நிறுவனத்தின் புதிய ஏ.என்.சி. வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    இயர்டிரான் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இயர்டிரான்ஸ் ப்ரோ ஏ.என்.சி. என அழைக்கப்படும் புதிய ஹெட்போன் அழகிய தோற்றம் மற்றும் மென்மையான இயர் குஷன் கொண்டிருக்கிறது. இது காதுகளில் அணிந்திருக்கும் போது சவுகரிய அனுபவத்தை வழங்கும்.

    ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஹெட்போன் கொண்டு ஹேண்ட்ஸ்-ஃப்ரீ காலிங் செய்ய முடியும். இந்த ஹெட்போன்கள் ப்ளூடூத் 4.0 தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இது அதிகபட்சம் 10 மீட்டர் வரையிலான பகுதிகளில் சீராக இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    இயர்டிரான்ஸ் ப்ரோ ஏ.என்.சி. வயர்லெஸ் ஹெட்போன்

    புதிய இயர்டிரான்ஸ் ப்ரோ வயர்லெஸ் ஹெட்போனினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 22 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் இந்த ஹெட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சார்ஜ் தீர்ந்து போனால், ஆக்ஸ் (AUX) கேபிள் கொண்டும் பயன்படுத்த முடியும். 

    245 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த ஹெட்போன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதியை கொண்டிருக்கிறது. இந்தியாவில் இயர்டிரான்ஸ் ப்ரோ ஹெட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இயர்டிரான்ஸ் ப்ரோ ஏ.என்.சி. வயர்லெஸ் ஹெட்போன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சென்ஹெய்சர் நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    சென்ஹெய்சர் நிறுவனம் இந்தியாவில் மொமன்ட்டம் வையர்லெஸ் 3 ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போனில் மூன்று ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட்களும், டிரான்ஸ்பேரண்ட் ஹியரிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹெட்போனில் உள்ள ஸ்பீக்கர் சிஸ்டம் 42 எம்.எம். டிரான்ஸ்டூசர்களால் இயங்குகிறது. இது ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தும். இதில் ஆன், ஆஃப் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால், ஹெட்போனினை திறக்கும் போது அது தானாக ஆன் ஆகிவிடும். இதேபோன்று ஹெட்போனினை மடிக்கும் போது தானாக ஆஃப் ஆகிவிடும். மேலும் ஹெட்போனை காதில் இருந்து எடுத்ததும், பாடல் நிறுத்தப்பட்டு விடும், பின் காதில் வைத்ததும் பாட்டு இயங்க துவங்கும்.

    சென்ஹெய்சர் மொமண்டம் வயர்லெஸ் 3

    வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சத்தை இயக்க புதிய ஹெட்போனில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. சென்ஹெய்சர் மொமண்ட்டம் வயர்லெஸ் 3 ஹெட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய சென்ஹெய்சர் மொமண்ட்டம் 3 ஹெட்போனின் விலை ரூ. 34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக சென்ஹெய்சர் நிறுவனம் மொமண்ட்டம் வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொமண்ட்டம் ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்களை தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.
    ×