search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ
    X
    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ விலை குறைந்த வேரியண்ட்

    ரியல்மி பிராண்டின் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை குறைந்த வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம் மற்றும் இருவித மெமரி ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வேரியண்ட் தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட மெமரி குறைவு என்பதால் விலையும் குறைவாகவே இருக்கும் என தெரிகிறது.

    ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் வெளியாக இருப்பதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27,999 விலையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 29,999 விலையிலும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடல் ரூ. 33,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, HDR 10 பிளஸ், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ சான்று, 4D கேம் அதிர்வுகள், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×