என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமியின் ரெட்மி பிராண்டு கே30 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 5ஜி வசதி கொண்ட ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி IMX686 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் பன்ச் ஹோல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதன் இருபுறங்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. 12 ஆன்டெனா டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் டூயல் ஃபிரீக்வன்சி ஜி.பி.எஸ். வசதியும் இருக்கிறது. 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி கே30

    ரெட்மி கே30 சிறப்பம்சங்கள்:

    - 6.67 இன்ச் 1080x2400 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர்
    - ஆண்ட்ராய்டு 10 சார்ந்த MIUI 11
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. கேமரா
    - 5 எம்.பி. கேமரா
    - 8 எம்.பி. கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    -30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சீனாவில் ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 20,140) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 2299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 23,160) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 26,189) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன் செவ்வக கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஸ்மார்ட்போன்கள் ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ பெயரில் சமீபத்தில் அறிமுகமாகி விற்பனை செய்யப்படுகின்றன. 

    இந்நிலையில், ஒன்பிளஸ் 8 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. ஏற்கனவே ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    புதிய ரென்டர்களின் படி ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் ஃபிளாட் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை போன்று இவற்றில் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படாது என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் 8 லைட் ரென்டர்

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவு மற்றும் ரெசல்யூஷன் பற்றிய விவரங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போனின் அலெர்ட் ஸ்லைடர், பவர் பட்டன் போன்றவை வலதுபுறத்திலும், வால்யூம் ராக்கர்கள் இடதுபுறத்தல் பொருத்தப்படுகிறது. 

    இவற்றுடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் வழங்கப்படுகின்றன. புகைப்படங்களை எடுக்க இரட்டை கேமரா அமைப்பு செவ்வக மாட்யூலில் பொருத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் லேசர் ஆட்டோ ஃபோகஸ், டைம் ஆஃப் ஃபிளைட் சென்சார்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    எனினும், கேமரா சென்சார் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் போன்று புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் மத்தியில் இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    புகைப்படம் நன்றி: Onleaks x @91mobiles
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இரு ஸ்மார்டபோன்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் இவற்றின் ரென்டர்கள் வெளியாகியுள்ளன.

    புதிய ரென்டர்களின் படி கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் நடுவே இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க கேலக்ஸி நோட் 10 சீரிஸ் போன்ற தோற்றம் பெற்று இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 லைட் மாடலில் 6.69 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. + 5 எம்.பி. கேமரா சென்சார்களும், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 45 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்

    கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க எஸ்10 லைட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் இயர்பீஸ் மாற்றப்பட்டு மெல்லிய பெசல்கள் புதிதாக இருக்கின்றன. புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா, சதுரங்க கேமரா பம்ப்பில் வழங்கப்படலாம்.

    இவை தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட், கேலக்ஸி நோட் 10 லைட் மற்றும் கேலக்ஸி ஏ51 போன்ற ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
    ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 20-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

    முன்னதாக ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வில் ரிய்லமி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரம் இணையத்தில் கசிந்துள்ளது.

    ஏற்கனவே ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்ட் ரியல்மி சரியான தேதியை மட்டும் அறிவிக்காமல் இருந்தது. இந்தியாவில் புதிய ரியல்மி எக்ஸ்.டி. 730  ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,000 வரை நிர்ணம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ரியல்மி பிராண்டு இயர்பட்ஸ் ஒன்றையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ரியல்மியின் புதிய இயர்பட்ஸ் ரியல்மி ஏர்பாட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.   

    ரியல்மி எக்ஸ்.டி.730ஜி

    இதுதவிர ரியல்மி எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். 

    ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 4.0 வசதி வழங்கப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்மார்ட் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.



    லெனோவோ நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்மார்ட் கேமரா உள்ளிட்டவை ஸ்மார்ட் ஹோம் அக்சரீக்கள் பிரிவில் வெளியாகியுள்ளன. 

    லெனோவோவின் ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 7 இன்ச் டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் முன்னணி பிராண்டுகளின் 5000-க்கும் அதிகமான ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை குரல்வழியே இயக்க முடியும். மேலும் டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்ட கேமரா கொண்டு வீடியோ அழைப்புகளை ஏற்பது, வீட்டு வெளியே யார் இருப்பது என பார்க்க முடியும்.

    இத்துடன் டூயல் அரே மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் டிஸ்ப்ளே கொண்டு உரையாடல்களை சவுகரியமாக மேற்கொள்ளலாம்.

    லெனோவோ ஸ்மார்ட் பல்பு

    லெனோவோ ஸ்மார்ட் பல்பு 9 வாட் திறன் கொண்டிருக்கிறது. இதில் 800 லூமென்கள் இருப்பதால் வாழ்நாள் முழுக்க 15,000 மணி நேரத்திற்கு இதனை பயன்படுத்த முடியும். 19 கிராம் எடை கொண்டிருக்கும் லெனோவோ ஸ்மார்ட் பல்பு 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைபை மூலம் இணைந்து கொள்கிறது. 

    பிளக் மற்றும் பிளே சாதனமான லெனோவோ ஸ்மார்ட் பல்பினை லெனோவோ லின்க் செயலி அல்லது குரல் மூலம் இயக்க முடியும். லெனோவோ ஸ்மார்ட் பல்பு கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா தளங்களில் இயங்குகிறது. 

    லெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளே 7 இன்ச் விலை இந்தியாவில் ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை லெனோவோ அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட், லெனோவோ பிரத்யேக விற்பனை மையம் மற்றும் க்ரோமா விற்பனையகங்களில் நடைபெறுகிறது. லெனோவோ ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்மார்ட் கேமரா விலை விரைவில் அறிவிக்கப்படுகிறது.
    நோக்கியா நிறுவனம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அறிவித்துள்ளது.



    சியோமியை தொடர்ந்து நோக்கியா மொபைல் நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. 

    நோக்கியாவின் 5ஜி ஸ்மார்டபோன் பியூர்டிஸ்ப்ளே, செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 4K UHD அல்ட்ரா வைடு வீடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய டீசரின் படி இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர்

    ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படும். மேலும் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதும் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    சாம்சங் வியட்நாம் புதிய கேலக்ஸி ஏ 2020 சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான வீடியோ டீசரை வெளியிட்டுள்ளது. வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் வியட்நாம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் கடந்த ஆண்டுகளில் கேலக்ஸி ஜெ மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கேமராக்களில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல்கள் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

    கேலக்ஸி ஏ டீசர் ஸ்கிரீன்ஷாட்

    டீசர் வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி நோட் 10 சீரிசில் உள்ளதை போன்றே ஸ்மார்ட்போனின் நடுவில் பன்ச் ஹோல் இடம்பெற்றுள்ளது. புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் பற்றி பல்வேறு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    பெரும்பாலான கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் குறைந்தபட்சம் எட்டு கேலக்ஸி ஏ 2020 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இவற்றில் முதல் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ51 அறிமுகமாகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது கேலக்ஸி நோட் 10 மாடலை விட விலை குறைவாக இருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 10

    இதே பிராசஸர் கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் 12 எம்.பி. வைடு ஆங்கிள் சென்சார் வழங்கப்படலாம். இதுதவிர மற்ற சென்சார்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 10 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் மேம்பட்ட செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒப்போ நிறுவனம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ9 2020 ஸ்மார்ட்போனின் வெனிலா மின்ட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கிரேடியன்ட் வைட் டியல் நிற ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி எனும் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

    புதிய வென்னிலா மின்ட் எடிஷன் பற்றி ஒப்போ இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. புதிய நிறம் தவிர மரைன் கிரீன்,  ஸ்பேஸ் பர்ப்பிள் மற்றும் வைட் டியல் நிறங்களில் கிடைக்கிறது. புதிய தோற்றம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    ஒப்போ ஏ9 2020

    சமீபத்தில் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டது. இதன் பேஸ் மாடல் 4 ஜி.பி. வேரியண்ட் ரூ. 15,990 விலையிலும், 8 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு உலகின் அதிக ரெசல்யூஷன் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி கே30 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி முதற்கட்டமாக ரெட்மி கே30 ஸ்டான்டர்டு வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.

    ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி கே30 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அதிக ரெசல்யூஷன் கொண்ட கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ரெட்மி கே30 டீசர்

    அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகலாம். ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனத்தின் முதல் டூயல் மோட் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்.

    ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் சோனி IMX686 சென்சார், 60 எம்.பி. ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் வடிவமைப்பில் இரட்டை செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது.

    இதுதவிர 6.66 இன்ச் டிஸ்ப்ளே FHD பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் 7 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அட்ரினோ 618 GPU, AMOLED பேனல் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கலாம்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் பாப் அப் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என்ற பெயரில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பாப் அப் செல்ஃபி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை டீசர் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விவோ வி15 ப்ரோ, ரியல்மி எக்ஸ், ரெட்மி கே20 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைத்தளத்தில் XT2027-1 எனும் மாடல் நம்பருடன் காணப்பட்டது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 6.69 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் என்.எஃப்.சி. வசதி கொண்டிருக்காது என கூறப்பட்டிருந்தது.

    மோட்டோரோலா டீசர்

    மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க பின்புறம் 64 எம்.பி. பிரைமரி சென்சாருடன், 8 எம்.பி. இண்டாவது சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, F/2.0 லென்ஸ் வழங்கப்படலாம். மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் பிராண்டிங் கொண்டிருக்கும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு 10 வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படலாம்.

    டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 6.35 இன்ச் டிஸ்ப்ளே, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் டெக்னோவின் ஹை ஒ.எஸ். 5.5 இயங்குதளம் கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா: 13 எம்.பி. கேமரா, f/2.0, 8 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லெனஅஸ், குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ் மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. 

    முன்புறம் 13 எம்.பி. கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதியும் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

    டெக்னோ ஸ்பார்க் பவர்

    டெக்னோ ஸ்பார்க் பவர் சிறப்பம்சங்கள்:

    - 6.35 இன்ச் 720x1548 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்
    - 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் டெக்னோவின் ஹை ஒ.எஸ். 5.5
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. கேமரா, f/2.0
    - 8 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்.பி. மேக்ரோ லெனஅஸ், குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் ஸ்மார்ட்போன் டான் புளூ மற்றும் ஆல்ஃபென் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை டிசம்பர் 1 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
    ×