search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங்
    X
    சாம்சங்

    கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இரு ஸ்மார்டபோன்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் இவற்றின் ரென்டர்கள் வெளியாகியுள்ளன.

    புதிய ரென்டர்களின் படி கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் நடுவே இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க கேலக்ஸி நோட் 10 சீரிஸ் போன்ற தோற்றம் பெற்று இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 லைட் மாடலில் 6.69 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. + 5 எம்.பி. கேமரா சென்சார்களும், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 45 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்

    கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க எஸ்10 லைட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் இயர்பீஸ் மாற்றப்பட்டு மெல்லிய பெசல்கள் புதிதாக இருக்கின்றன. புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா, சதுரங்க கேமரா பம்ப்பில் வழங்கப்படலாம்.

    இவை தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட், கேலக்ஸி நோட் 10 லைட் மற்றும் கேலக்ஸி ஏ51 போன்ற ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×