search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி நோட் 10
    X
    கேலக்ஸி நோட் 10

    32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி நோட் 10 லைட்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது கேலக்ஸி நோட் 10 மாடலை விட விலை குறைவாக இருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 10

    இதே பிராசஸர் கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் 12 எம்.பி. வைடு ஆங்கிள் சென்சார் வழங்கப்படலாம். இதுதவிர மற்ற சென்சார்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 10 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் மேம்பட்ட செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×