என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
டிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்3 Dec 2019 7:59 AM GMT (Updated: 3 Dec 2019 7:59 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
சாம்சங் வியட்நாம் புதிய கேலக்ஸி ஏ 2020 சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான வீடியோ டீசரை வெளியிட்டுள்ளது. வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும், கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் வியட்நாம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் கடந்த ஆண்டுகளில் கேலக்ஸி ஜெ மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கேமராக்களில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல்கள் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
டீசர் வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி நோட் 10 சீரிசில் உள்ளதை போன்றே ஸ்மார்ட்போனின் நடுவில் பன்ச் ஹோல் இடம்பெற்றுள்ளது. புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் பற்றி பல்வேறு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
பெரும்பாலான கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் குறைந்தபட்சம் எட்டு கேலக்ஸி ஏ 2020 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இவற்றில் முதல் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ51 அறிமுகமாகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Next Story
×