என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் சீரிஸ் ரேம் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன்கள் வெளியாகி சில மாதங்கள் நிறைவுற்று இருக்கும் நிலையில், 2020 ஐபோன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன.

    புதிய விவரங்களின் படி 2020 ஆண்டில் வெளியாக இருக்கும் ஐபோன் 12 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலிலும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 மாடலில் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம்.

    ஐபோன் 11

    இத்துடன் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பின்புறம் 3D சென்சிங் வசதி மற்றும் அதிவேக 5ஜி செயல்திறன் வழங்கும் எம்.எம். வேவ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக குவால்காம் வெளியிட்ட தகவல்களிலும் 2020 ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    ஃபிளாக்‌ஷிப் மாடல்களை தவிர ஆப்பிள் நிறுவனம் சற்றே குறைந்த விலையில், ஐபோன் எஸ்.இ. 2 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சியோமி நிறுவனத்தின் 108 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமி நிறுவனம் தனது Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் Mi நோட் 10 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம் சியோமி Mi நோட் 10 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்யும் வகையில் சியோமி இந்தியா தலைவர் மனு ஜெயின் தனது ட்விட்டரில் டீசரை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் Mi நோட் 10 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சீனாவில் சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 28,385) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 30,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம்.

    சியோமி டீசர்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை Mi நோட் 10 ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 3டி கிளாஸ் பேக், என்.எஃப்.சி., 1சிசி லவுட் ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 65 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.

    புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. சென்சாருடன் 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சாம்சங் SAK2L3 சென்சார், f/2.0, 2x சூம், 8 எம்.பி. 1/3.6-சென்சார், f/2.0, டெலிபோட்டோ லென்ஸ், OIS, 5X ஆப்டிக்கல், 10X ஹைப்ரிட் மற்றும் 50X டிஜிட்டல் சூம், 20 எம்.பி. 1/2.8 இன்ச் சென்சார், f/2.2, 117 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. f/2.4 அப்ரேச்சர், மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
    108 பிரைமரி கேமரா கொண்ட சியோமி நிறுவனத்தின் Mi நோட் 10 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சியோமி நிறுவனத்தின் 108 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட Mi நோட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் Mi சிசி9 ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் புகைப்படங்களை எடுக்க மொத்தம் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட்டன.

    சர்வதேச சந்தையில் Mi நோட் 10 பெயரில் வெளியான சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சியோமி நிறுவனம் போகோ எஃப்1 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்திருக்கிறது.

    அந்த வரிசையில் Mi நோட் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் இது ஒன்பிளஸ் 7டி மற்றும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும். Mi நோட் 10 முழுமையான ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இல்லை என்ற போதும், இதன் 108 எம்.பி. பிரைமரி கேமரா தனித்துவம் மிக்க அம்சமாக இருக்கிறது.

    சியோமி Mi நோட் 10

    சியோமி Mi நோட் 10 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள 108 எம்.பி. கேமரா, இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 108 எம்.பி. சென்சாருடன் 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சாம்சங் SAK2L3 சென்சார், f/2.0, 2x சூம், 8 எம்.பி. 1/3.6-சென்சார், f/2.0, டெலிபோட்டோ லென்ஸ், OIS, 5X ஆப்டிக்கல், 10X ஹைப்ரிட் மற்றும் 50X டிஜிட்டல் சூம், 20 எம்.பி. 1/2.8 இன்ச் சென்சார், f/2.2, 117 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. f/2.4 அப்ரேச்சர், மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை Mi நோட் 10 ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 3டி கிளாஸ் பேக், என்.எஃப்.சி., 1சிசி லவுட் ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 65 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.
    விவோ நிறுவனத்தின் யு20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    விவோ நிறுவனத்தின் யு20 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9.1 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமாரா, f/1.78, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ யு20 ஸ்மார்ட்போனில் வளைந்த பிளாஸ்டிக் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    விவோ யு20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ யு20

    விவோ யு20 சிறப்பம்சங்கள்:

    - 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்.பி. 4செ.மீ. மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ யு20 ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் விவோ வலைத்தளங்களில் நவம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.
    ரியல்மி பிராண்டு புதிய எக்ஸ்2 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்2 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, HDR 10 பிளஸ், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ சான்று, 4D கேம் அதிர்வுகள், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    – 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 ஃபிளூயிட் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
    – அட்ரினோ 640 GPU
    – 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
    – 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
    – ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
    – டூயல் சிம்
    – 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    – 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 1/3.4″, 1μm பிக்சல், f/2.5
    – 8 எம்.பி. 115° 1/3.13″ அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.4μm பிக்சல், f/2.2
    – 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
    – 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்
    – இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    – 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    – யு.எஸ்.பி. டைப்-சி
    – 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – 50 வாட் சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் லூனார் வைட், நெப்டியூன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 29,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் நவம்பர் 26 ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைத்தளங்களில் அழைப்பிதழ் முறையில் விற்பனை செய்யப்படும்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் W20 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனத்தின் W20 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய W20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புதிய W20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் நடுப்பகுதி சற்று கடினமாகவும், வெள்ளை நிற பேக் கவர் கொண்டிருக்கிறது. இத்துடன் இதன் பேட்டரி அளவிலும் மாற்றம் செய்யப்பட்டு 4235 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் W20 ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    இதனை மடிக்கும் போது 4.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 21:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 ஜி.பி. ரேம், இரட்டை முன்புற கேமரா, முன்புற கவரில் 10 எம்.பி. கேமரா, உள்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் W20

    சாம்சங் W20 சிறப்பம்சங்கள்:

    - 7.3 இன்ச் 2152x1536 பிக்சல் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 டிஸ்ப்ளே
    - 4.6 இன்ச் 720x1680 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்
    - 675MHz அட்ரினோ 640 GPU
    - 12 ஜி.பி. LPDDR4x ரேம்
    - 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4-f/1.5, OIS
    - 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 45° FoV, f/2.4
    - 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 10 எம்.பி. டூயல் பிக்சல் முன்புற கேமரா, f/1.9
    - 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 90° FoV
    - 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 5ஜி Sub6 / mmWave, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. 3.1
    - 4,235 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சாம்சங் W20 ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் டிசம்பர் மாத வாக்கில் துவங்குகிறது. இதன் விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுகிறது.
    லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபீச்சர் போன் இந்தியாவில் ரூ. 1399 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    லாவா மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. லாவா ஏ5 என அழைக்கப்படும் புதிய மொபைலில் 2.4 இன்ச் QVGA 240x320 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், வி.ஜி.ஏ. கேமரா, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் யு.எஸ்.பி., ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மல்டிமீடியா பிளேயர், ரெக்கார்டிங் வசதி கொண்ட வயர்லெஸ் எஃப்.எம். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் லாவா ஏ5 மொபைலில் 22 இந்திய மொழிகளுக்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    லாவா ஏ5

    லாவா ஏ5 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA 240x320 பிக்சல் டிஸ்ப்ளே
    - டூயல் சிம், GSM+GSM
    - வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - யு.எஸ்.பி., ப்ளூடூத்
    - மியூசிக் பிளேயர், வீடியோ பிளேயர்
    - ரெக்கார்டிங் வசதி கொண்ட வயர்லெஸ் எஃப்.எம்.
    - 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய லாவா ஏ5 மொபைல் போன் புளூ+சில்வர், ரோஸ் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நாடு முழுக்க ஆஃப்லைன் சந்தையில் நடைபெறுகிறது.

    விவோ நிறுவனத்தின் வை19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    விவோ நிறுவனத்தின் வை19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ வை19 ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய விவோ வை19 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ 2340×1080 பிக்சல் 19.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. ஏ.ஐ. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 2.0 யு.ஐ. கொண்டிருக்கும் விவோ வை19 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0, எஃப்.எம். ரேடியோ போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.

    விவோ வை19

    விவோ வை19 அம்சங்கள்:

    – 6.53 இன்ச் FHD+ 2340×1080 பிக்சல் 19.5:9 டிஸ்ப்ளே
    – மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா-கோர் பிராசஸர்
    – 4 ஜி.பி. ரேம்
    – 128 ஜி.பி. மெமரி
    – 16 எம்.பி. பிரைமரி கேமரா
    – 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
    – 2 எம்.பி. டெப்த் சென்சார்
    – 16 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா
    – ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 2.0 யு.ஐ.
    – கைரேகை சென்சார்
    – மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0, எஃப்.எம். ரேடியோ
    – 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    விவோ வை19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 13,999 விலையில் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மேக்னெடிக் பிளாக் மற்றும் ஸ்ப்ரிங் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
    பானாசோனிக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    பானசோனிக் நிறுவனத்தின் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    முன்புறம் செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி, பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    பானாசோனிக் எலுகா ரே 810 சிறப்பம்சங்கள்:

    பானாசோனிக் எலுகா ரே 810


    - 6.2 இன்ச் 1500x720 பிக்சல் ஹெச்.டி. + 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 650 மெகாஹெர்ட்ஸ் IMG PowerVR GE8320 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் டர்கொய்ஸ் புளூ மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்ஹெய்சர் நிறுவனம் இந்தியாவில் புதிதாக ப்ளூடூத் ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    ஆடியோ உபகரணங்களை வெளியிடுவதில் பிரபல நிறுவனமான சென்ஹெய்சர் இந்தியாவில் புதிதாக IE 80 S BT என்ற பெயரில் ப்ளூடூத் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய இயர்போன்கள் ப்ளூடூத் 5 வசதி கொண்டுள்ளது. இத்துடன் LHDC, aptX HD, AAC, and AKM DAC போன்ற ஸ்டிரீமிங் கோடெக்களை சப்போர்ட் செய்கிறது. இந்தியாவில் இந்த இயர்போனின் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்ஹெய்சர் IE 80 S BT இயர்போன் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மிக எளிமையாக பயன்படுத்தவதற்கென இயர்போனிலேயே டூல் வசதியும், ஸ்மார்ட் கண்ட்ரோல் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.

    சென்ஹெய்சர் IE 80 S BT இயர்போன்

    நெக்பேண்ட் வடிவமைப்பில் இயர்-ஹூக் டிசைன் கொண்டிருக்கும் IE 80 S BT இயர்போன் வெவ்வேறு அளவுகளில் சிலிகான், லேமெலர் மற்றும் மெமரி ஃபோம் இயர் டிப்களை கொண்டிருக்கிறது. புதிய சென்ஹெய்சர் இயர்போன்களை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. டைப்-சி, கேபிள் மற்றும் கேஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதில் உள்ள இன்-லைன் ரிமோட் கண்ட்ரோலில் பிரத்யேக பட்டன்கள் சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் அம்சங்களை பயன்படுத்த வழி செய்கிறது. இரு மைக்ரோபோன்கள் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகின்றன. ப்ளூடூத் நெக்பேண்ட் கழற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், இதனை கேபிள் கொண்டு வையர்டு ஹெட்செட் போன்றும் பயன்படுத்தலாம்.

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய அம்சம் ஒன்றை சோதனை செய்து வருகிறது.



    இன்ஸ்டாகிராம் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியயாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரில் புதிய அம்சத்தை சோதனை செய்ய துவங்கியுள்ளது.

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் 15 நொடிகளுக்கு வீடியோக்களை உருவாக்கி, அவற்றில் இசையை சேர்த்து ஸ்டோரிக்களில் பகிர முடியும். இதை கொண்டு எக்ஸ்ப்ளோர் பகுதியில் உள்ள டாப் ரீல்ஸ் அம்சத்தில் வைரலாக முடியும் என கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. இன்ஸ்டாகிராமின் ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளில் புதிய அம்சத்திற்கான சோதனை நடைபெறுகிறது. டிக்டாக் செயலி அதிக பிரபலமாகாத நாடுகளில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

    பிரேசில் நாட்டில் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், இந்த அம்சம் முதற்கட்டமாக அங்கு சோதனை செய்யப்படுகிறது. உலகளவில் வெளியிடும் முன் இந்த அம்சத்தை அதிகளவு மேம்படுத்தும் பணிகளில் இன்ஸ்டாகிராம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியின் ஷட்டர் மோட் டிரேவில் பூமராங் மற்றும் சூப்பர் சூம் அம்சங்களுக்கு அடுத்த இடத்தில் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வீடியோக்களை ஆடியோ இன்றி பதிவு செய்து அதில் வேறொரு ஆடியோவை சேர்க்க முடியும். 

    ரீல்ஸ் உருவாக்குவதற்கான ஆடியோவினை வாடிக்கையாளர்கள் ஹேஷ்டேக் சர்ச், எக்ஸ்புளோர் அல்லது டிரெண்டிங் பகுதிகளில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். ரீல்ஸ் அம்சத்திற்கென ஃபேஸ்புக் மியூசிக் லைப்ரரி சேவை வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் விரும்பும் பாடல்களை தேடியோ அல்லது அவற்றை பதிவு செய்தோ பல்வேறு வீடியோக்களை ரீல்களில் சேர்த்து கொள்ளலாம். வீடியோவிற்கான மியூசிக் சேர்க்கப்பட்டதும், அதனை எடிட் செய்ய பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. எடிட் செய்து முடித்ததும், வாடிக்கையாளர்கள் தங்களின் ரீலினை ஸ்டோரிஸ், நண்பர்கள் அல்லது விரும்புவோருக்கு குறுந்தகவல் வடிவில் அனுப்ப முடியும்.
    ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் 48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமரா வழங்கப்படுகிறது.



    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது. 

    இதுதவிர புதிய ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி சென்சார் மற்றும் நான்கு கேமராக்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் கைரேகை சென்சாரும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசரின்படி புதிய ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் டெலிபோட்டோ கேமராவும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ டீசர்

    இந்தியாவில் நவம்பர் 20 ஆம் தேதி ரியல்மி எக்ஸ்20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் RMX1925 எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
    ×