search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சென்ஹெய்சர் IE 80 S BT இயர்போன்
    X
    சென்ஹெய்சர் IE 80 S BT இயர்போன்

    சென்ஹெய்சர் விலை உயர்ந்த ப்ளூடூத் ஹெட்போன் அறிமுகம்

    சென்ஹெய்சர் நிறுவனம் இந்தியாவில் புதிதாக ப்ளூடூத் ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    ஆடியோ உபகரணங்களை வெளியிடுவதில் பிரபல நிறுவனமான சென்ஹெய்சர் இந்தியாவில் புதிதாக IE 80 S BT என்ற பெயரில் ப்ளூடூத் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய இயர்போன்கள் ப்ளூடூத் 5 வசதி கொண்டுள்ளது. இத்துடன் LHDC, aptX HD, AAC, and AKM DAC போன்ற ஸ்டிரீமிங் கோடெக்களை சப்போர்ட் செய்கிறது. இந்தியாவில் இந்த இயர்போனின் விலை ரூ. 39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்ஹெய்சர் IE 80 S BT இயர்போன் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மிக எளிமையாக பயன்படுத்தவதற்கென இயர்போனிலேயே டூல் வசதியும், ஸ்மார்ட் கண்ட்ரோல் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.

    சென்ஹெய்சர் IE 80 S BT இயர்போன்

    நெக்பேண்ட் வடிவமைப்பில் இயர்-ஹூக் டிசைன் கொண்டிருக்கும் IE 80 S BT இயர்போன் வெவ்வேறு அளவுகளில் சிலிகான், லேமெலர் மற்றும் மெமரி ஃபோம் இயர் டிப்களை கொண்டிருக்கிறது. புதிய சென்ஹெய்சர் இயர்போன்களை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. டைப்-சி, கேபிள் மற்றும் கேஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதில் உள்ள இன்-லைன் ரிமோட் கண்ட்ரோலில் பிரத்யேக பட்டன்கள் சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் அம்சங்களை பயன்படுத்த வழி செய்கிறது. இரு மைக்ரோபோன்கள் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகின்றன. ப்ளூடூத் நெக்பேண்ட் கழற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், இதனை கேபிள் கொண்டு வையர்டு ஹெட்செட் போன்றும் பயன்படுத்தலாம்.

    Next Story
    ×