என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஐந்து சென்சார்கள் கொண்ட பாப் அப் கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவை பயனர் வைத்திருப்பதை பொருத்து பிரைமரி அல்லது செல்ஃபி கேமரா என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ஸ்மார்ட்போனின் வரைபடங்களின் படி இதில் மெல்லிய பெசல்கள், டிஸ்ப்ளே நாட்ச் இல்லாதது தெளிவாக தெரிகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, கடந்த வாரம் அச்சிடப்பட்டுள்ளது. காப்புரிமையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பாப்-அப் தெரிகிறது.

    சியோமி மடிக்கக்கூடிய  ஸ்மார்ட்போன் காப்புரிமை

    இவைதவிர சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போன் ஐந்து கேமராக்களுடனும் சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐந்து கேமரா சென்சார்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன. 

    சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் லென்ஸ் 5X டெலிபோட்டோ லென்ஸ் போன்று செயல்படுகிறது. இத்துடன் 12 எம்.பி. சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 6.47 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை மாடலாக ரியல்மி 6 உருவாகி வருவதை உறுதிப்படுத்தும் வகையில், அதன் நேரடி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    நவம்பர் 20 ஆம் தேதி ரியல்மி X2 ப்ரோ ஸ்மார்ட்போனையும், டிசம்பரில் ரியல்மி XT ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுருக்கிறது. இந்நிலையில், ரியல்மி 6 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ரியல்மி 6 போனின் ரீடெயில் பாக்ஸ் மற்றும் நேரடி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் நான்கு கேமரா செட்டப் வழங்கப்பட்ட நிலையில், ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் ரியல்மி 6 ரீடெயில் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது. எனினும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,000 வரை நிர்ணயிக்கப்படலாம்.

    ரியல்மி 6 லீக்

    இணையத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் இடம்பெற்று இருக்கிறது. இதை சுற்றி பெசல்கள் தடிமனாக காணப்படுவதால் இது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    இதுதவிர ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டின் ஏ.ஒ.எஸ்.பி. பதிப்பை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது கூகுளின் மொபைல் இயங்குதளம் ஆகும். புகைப்படங்களில் கலர் ஒ.எஸ். வெர்ஷன் மறைக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

    புகைப்படம் நன்றி: 91mobiles
    சாம்சங் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.



    சாம்சங் டபுள்யூ20 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 19 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனை சீனா மொபைல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சாம்சங் டபுள்யூ20 5ஜி இரட்டை ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் ஆகும்.

    இது கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த டபுள்யூ2019 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். எனினும், சாம்சங் டபுள்யூ20 5ஜி மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய டபுள்யூ சீரிஸ் போன்களில் இரட்டை டிஸ்ப்ளே மற்றும் ஃப்ளிப் வசதி கொண்டிருந்தது.

    சாம்சங் டபுள்யூ20 5ஜி

    ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கும். இது ஃப்ளிப் வடிவமைப்பில் மடிக்கக்கூடிய போன் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு கொண்ட மொபைல் போனினை சாம்சங் கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்தது.

    புதிய மாடல் புளூம் என்ற குறியீட்டு பெயரில் SM-F700F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவும், 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஃபாசில் நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹைப்ரிட் ஹெச்.ஆர். என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஃபுல் ரவுண்ட் ரீட்-அவுட் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், ரேபிட் சார்ஜிங் போன்று பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 42 எம்.எம். டையல், ஆல்வேஸ்-ஆன் ரீட் அவுட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகள், குறுந்தகவல், சமூக வலைத்தள தகவல் மற்றும் இதர நோட்டிஃபிகேஷன்களை வாட்ச் திரையில் பார்க்க முடியும். இத்துடன் வழக்கமான வாட்ச்களில் உள்ள விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    இதில் இதய துடிப்பு சென்சா் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள பட்டன்களை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். அதன்படி வாட்ச் பட்டன்களில் மியூசிக், தேதியை பார்ப்பது மற்றும் பல்வேறு இதர அம்சங்களை இயக்கும்படி செட் செய்யது கொள்ளலாம்.

    இத்துடன் வாட்ச் ஃபேஸ் டையல்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும், பல்வேறு உடற்பயிற்சி மோட்கள், ஆட்டோ டைம், இரண்டாவது டைம் சோன், மியூசிக் கண்ட்ரோல், அலாரம் டைமர், ஸ்டாப் வாட்ச் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச்

    மேலும் இதில் 16 எம்.பி. மெமரி, அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரத்திற்கும் அதிக நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கும் என ஃபாசில் தெரிவித்துள்ளது. இதில் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளதால் ஒருமணி நேரத்தில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிடும்.

    ப்ளூடூத் 4.2 எல்.இ. அம்சம் மூலம் இணைந்து கொள்ளும் வசதி உள்ளது. இது ஐபோன் 5, ஐ.ஒ.எஸ். 10 மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளம் கொண்ட சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. இது 3ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    ஃபாசில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். காலிடர் ஸ்மோக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சார்டர் ரோஸ் கோல்டு-டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேரியண்ட் விலை 215 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 15,275) என்றும் சார்டர் பிளாக் லெதர், காலிடர் பிளாக் சிலிகான் மற்றும் காலிடர் டார்க் பிரவுன் லெதர் வேரியண்ட் விலை 195 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 13,850) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை நவம்பர் 18 ஆம் தேதி துவங்குகிறது.
    ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் 64 எம்.பி. குவாட் கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.



    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ டீசர்

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 90 ஹெர்ட்ஸ் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ், 64 எம்.பி. குவாட் கேமரா, 8 எம்.பி. 115 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் 50வாட் சூப்பர்VOOC ஃபிளாஷ் சார்ஜ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ சான்று வழங்கப்பட்டுள்ளது. 

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 90 ஹெர்டஸ் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
    - 675MHz அட்ரினோ 640 ஜி.பி.யு
    - 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
    - டூயல் சிம்
    - 64 எம்.பி. கேமரா, 1/1.72″ சாம்சங் GW1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 1/3.4″ சென்சார், 1μm பிக்சல், f/2.5
    - 8 எம்.பி. 115° 1/3.13″ அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.4μm பிக்சல், f/2.2
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல், 960fps ஸ்லோ மோஷன்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 50 வாட் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் லூனார் வைட் மற்றும் நெப்டியூன் புளு நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் விலை 2699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 27,170) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இரட்டை ஸ்கிரீன் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் டபுள்யூ20 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை சீனா டெலிகாம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சாம்சங் டபுள்யூ20 5ஜி இரட்டை ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் ஆகும். 

    இது கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த டபுள்யூ 2019 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். டபுள்யூ20 5ஜி மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய டபுள்யூ சீரிஸ் போன்களில் இரட்டை டிஸ்ப்ளே மற்றும் ஃப்ளிப் வசதி வழங்கப்பட்டு இருந்தது. 

    சாம்சங் புளூம் ரென்டர்

    ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கும். இது ஃப்ளிப் வடிவமைப்பில் உருவான மடிக்கக்கூடிய போன் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு கொண்ட மொபைல் போனினை சாம்சங் கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்தது. 

    புதிய மாடல் புளூம் என்ற குறியீட்டு பெயரில் SM-F700F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவும், 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மோட்டோரோலா நிறுவனமும் புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய சாதனங்கள் நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பார்க்க 2004 ஆம் ஆண்டு வெளியான மோட்டோ ரேசர் வி3 போன்று காட்சியளிக்கிறது. புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேக்கள் ஒரே இடத்தில் ஃப்ளிப் ஆகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறம் பட்டன் ஒன்று காணப்படுகிறது. இதிலேயே கைரேகை சென்சாரும் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா சென்சார் காணப்படுகிறது. 

    ரேசர் லோகோ படம்

    ஸ்மார்ட்போன் புகைப்படங்களைத் தொடர்ந்து ரேசர் லோகோ படமும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனின் மேல்புறம் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கீழ்புறத்தை திறக்கும் போது பெரிய திரை மற்றும் ஹின்ஜ் உள்ளிட்டவை தெரியும் என கூறப்பட்டது.

    புதிய புகைப்படங்களில் ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், வரும் நாட்களில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்த வெர்ஷன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ் 10 சீரிஸ் விலை குறைந்த மாடல்களை சாம்சங் உருவாக்கி வருகிறது.

    இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியான நிலையில், தற்சமயம் SM-G770F எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை சிங்கில் கோரில் 724 புள்ளிகளும், மல்டி கோரில் 2604 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

    சாம்சங் எஸ்.எம். ஜி770எஃப்

    வழக்கமான கேலக்ஸி எஸ்10 மாடலை விட எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட வேரியண்ட்களை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் பார்க்க கேலக்ஸி ஏ91 போன்று காட்சியளிக்கும் என கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதன் டிஸ்ப்ளே கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10இ போன்று பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா, 48 எம்.பி. பிரைமரி சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி மாதம் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை கடந்த மாதம் துவங்கியது.

    இந்நிலையில் 2019 சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனம் புதுவித வடிவமைப்பு கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் சாதனம் மடிக்கப்பட்ட நிலையில், சதுரங்க வடிவமைப்பு பெறுகிறது. இதில் பன்ச்-ஹோல் ரக கேமரா வழங்கப்படும் என டீசர்களில் தெரியவந்துள்ளது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 டீசர்

    இதுபற்றி சாம்சங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்சமயம் வி்ற்பனையாகும் முதல் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு மற்றும் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்ட புதிய மடிக்கக்கூடிய மாடல்கள் அருகில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய மாடல் புளும் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

    SM-F700F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் விலை முதல் தலைமுறை மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் தனது இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா அல்லது கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 990 சிப்செட் அல்லது 5ஜி எக்சைனோஸ் மோடெம் 5123 வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனம் புதிய Mi வாட்ச் மற்றும் Mi டி.வி. 5 சீரிஸ் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.



    சியோமி நிறுவனம் தனது Mi வாட்ச் மாடல் நவம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. புதிய Mi வாட்ச் மட்டுமின்றி Mi சிசி9 ப்ரோ, Mi டி.வி. 5 சீரிஸ் மாடல்களும் இதே தினத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சியோமி நிறுவன தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் ஸ்மார்ட்வாட்ச் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் உருவாகி இருப்பது தெளிவாக தெரிகிறது. இத்துடன் புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ளதை போன்று வலதுபுறத்தில் கிரவுன் வழங்கப்பட்டிருக்கிறது. 

    புதிய Mi வாட்ச் மாடலில் AMOLED ல்கிரீன் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது சியோமியின் முதல் வியர் ஒ.எஸ். ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாட்ச் மாடலின் செல்லுலார் வெர்ஷன் இசிம் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    Mi சிசி9 ப்ரோ டீசர்

    சியோமியின் ஸ்மார்ட்வாட்ச் விலை அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ். மாடலை விட சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் Mi டி.வி. 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய Mi டி.வி. 5 சீரிஸ் மாடலில் 4K QLED பேனல் மற்றும் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும்.

    இவற்றுடன் Mi சிசி9 ப்ரோ மாடலுக்கான டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் கிளாஸ் பேக் மற்றும் சியோமி பிராண்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் போன்றவை காணப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ இயர்போன் பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 7 மாடலில் முதன்முறையாக ஹெட்போன் ஜாக் அம்சத்தை நீக்கி ஆப்பிள் ஏர்பாட்ஸ் எனும் வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது.

    சமீபத்தில் இதனை அப்டேட் செய்து வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கியது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் மாடலின் ப்ரோ வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ஐபோன் 11 ப்ரோவுடன் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் நான்கு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஏர்பாட்ஸ் ப்ரோ: வைட், கோல்டு, மிட்நைட் பிளாக் மற்றும் மிட்நைட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் தவிர இயர்போனில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது.

    ஏர்பாட்ஸ் ப்ரோ கான்செப்ட்

    ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்  வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இயர்போன்கள் சமீபத்தில் ஐ.ஒ.எஸ். 13.2 தளத்திற்கான சோர்ஸ் கோட்களில் காணப்பட்டது. இந்த இயர்போன் கிறுஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    ஏர்பாட்ஸ் போன்றே ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலை 200 முதல் 300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 14,167 முதல் ரூ. 21,250) வரை நிர்ணயிக்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: EverythingApplePro
    டி.சி.எல். நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் விவரங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.



    ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்கள் இன்றும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன. சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், டி.சி.எல். தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் இரண்டு இடங்களில் மடிக்கக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போன் முழுமையாக திறக்கப்பட்டால் பெரிய திரை காணப்படுகிறது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போனின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போன்களை மடிக்க செய்யும் கீழ்களுக்கு இரு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் முதல் கீழ் டிராகன் ஹின்ஜ் என்றும் மற்றொன்று பட்டர்ஃபிளை ஹின்ஜ் என அழைக்கப்படுகின்றன. இரு கீழ்களும் ஒன்றிணைந்து ஸ்மார்ட்போனை திறக்க செய்கிறது.

    டி.சி.எல். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பட்டர்ஃபிளை ஹின்ஜ் வெளிப்புறம் ஸ்கிரீனாக செயல்படுகிறது. வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட இதன் திரையை அதிக தரமுள்ளதாக மாற்றும் பணிகளில் டி.சி.எல். ஈடுபட்டுள்ளது. ப்ரோடோடைப் உருவாக்கும் பணிகளுக்கு முன்பே டி.சி.எல். நிறுவனம் தனது டிராகன் ஹின்ஜ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.

    டி.சி.எல். தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு இதுவரை பெயரிடவே இல்லை. மேலும் இதன் வெளியீடு மற்றும் விலை பற்றியும் டி.சி.எல். இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா செட்டப் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ×