என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, 16 எம்.பி. ஆக்ஷன் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ், 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், பின்புறம் கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி8 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080x2280 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. LPDDR4x ரேம்
- 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. குவாட் பிக்சல் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79,0. 8um பிக்சல், PDAF
- 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆக்ஷன் கேமரா, 2.0um குவாட் பிக்சல், f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ்
- 25 எம்.பி. குவாட் பிக்சல் செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ
- எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் டர்போ சார்ஜிங்
மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் காஸ்மிக் புளு மற்றும் க்ரிஸ்டல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனி்ன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இதனிடையே புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவ்வாறு புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் மேம்பட்ட ஆன்டெனா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா டிசைன் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு தேவையான ஆன்டெனா உபகரணங்களை கரியர் டெக்னாலஜீஸ் மற்றும் முராடா மேனுஃபேக்ச்சரிங் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் தனது ஐபோன் எஸ்.இ. 2 மாடலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஆன்டெனா வடிவமைப்பை பொருத்தவரை புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஏ13 சிப்செட் வழங்கப்படலாம். இதே சிப்செட் தற்சமயம் விற்பனையாகும் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் மாடலில் 3 ஜி.பி. ரேம், 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐ.டி. ஹோம் பட்டன் வழங்கப்படலாம்.
இத்துடன் புதிய ஐபோன் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரெட் என மூன்றுவித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் தவிர ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ப்ரோ, புதிய மேக்புக், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்செட் உள்ளிட்டவற்றையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுண்ட் ஒன் நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் இயர்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹாங் காங்கை சேர்ந்த சவுண்ட் ஒன் நிறுவனம் இந்தியாவில் புதிய ப்ளூடூத் இயர்போனினை அறிமுகம் செய்தது. புதிய இயர்போன்கள் கழற்றக்கூடிய இயர் பிளக்களும், இரண்டு கேபிள்களுடன் வழங்கப்படுகின்றன. இவற்றை கொண்டு ப்ளூடூத் மற்றும் வையர்டு என இரண்டு மோட்களில் பயன்படுத்த முடியும்.
புதிய இயர்போன்களை ப்ளூடூத் மோடில் ஆடியோ அளவினை 60 முதல் 70 சதவிகிதத்தில் பயன்படுத்தும் போது 10 மணி நேர பிளே டைம், முழு அளவு ஆடியோ பயன்படுத்தும் போது 8 மணி நேர பிளே டைம் வழங்குகிறது. இந்த இயர்போன்கள் ப்ளூடுத் 5.0 தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.

இயர்போன்களின் ஒருபுறம் பேட்டரியும் மற்றொரு புறத்தில் கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன. வையர்டு கேபிள் மோட் கொண்டு பேட்டரி தீர்ந்து போகும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயர்போன்கள் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கின்றன.
புதிய இயர்போன்கள் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என சவுண்ட் ஒன் தெரிவித்துள்ளது. இயர்போனுடன் வழங்கப்படும் கேஸ் பாக்கெட்களில் வைத்து எங்கும் எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சவுண்ட் ஒன் டிசி 111 இயர்போன் விலை ரூ. 2,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட காலத்திற்கு அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் இது ரூ. 1,690 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ரேசர் மடிக்க்ககூடிய ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் நவம்பர் 13 ஆம் தேதி நிகழ்வு ஒன்றுக்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் மோட்டோரோலா தனது ரேசர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோவின் பிரபல ரேசர் பிராண்டிங்கில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. அழைப்பிதழ்களில் மோட்டோரோலா “அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சின்னம் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது.
புதிய மோட்டோ ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருதாக மோட்டோரோலா ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து மோட்டோவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரேசர் ஃப்ளிப் போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

மோட்டோ நிகழ்வுக்கென மோட்டோ வெளியிட்டிருக்கும் ஜிஃப் படம் பழைய ரேசர் போனின் ஹின்ஜ் புதிய வடிவமைப்பை பெறுவதை குறிக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வைட், பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் இதில் 2730 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். மெமரியை பொருத்தவரை 4 ஜி.பி. அல்லது 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. அல்லது 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போன் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போன் பார்க்க மோட்டோ இ6 போன்றே காட்சியளிக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போனில் 16:9 டிஸ்ப்ளே, நாட்ச் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெச்.டி. ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் வெளியாகலாம் என்றும் இதில் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i கோட்டிங் செய்யப்பட்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 8 சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, PDAF, EIS
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல்
- 2 எம்.பி. டெப்த் சென்சார்,
- 2 எம்.பி. கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப் P2i நானோ கோட்டிங்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, மூன்லைட் வைட், காஸ்மிக் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தளங்களில் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் எஸ்5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. 114-டிகிரி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.
முன்புறம் 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 3டி க்ரிஸ்டல் ஃபெதர் கிளாஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் எஸ்5 சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர்வி.ஆர். GE8320 GPU
- 4 ஜி.பி. LPDDR4 ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் எக்ஸ் ஒ.எஸ். 5.5
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. 114° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- வி.ஜி.ஏ. லோ லைட் சென்சார்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இன்ஃபினிக்ஸ் எஸ்5 ஸ்மார்ட்போன் குயிட்ஸெல் சியான் மற்றும் வைலட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் அக்டோபர் 21 ஆம் தேதி துவங்குகிறது.
ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிராண்டு சீனாவில் கடந்த மாதம் ரெட் மேஜிக் 3எஸ் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்தது. இது ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
இந்நிலையில், ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து டீசர்களின் மூலம் தெரிவித்தது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் UFS 3.0 ஸ்டோரஜ் கொண்டிருக்கிறது. இதிலும் ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். எக்ஸ், மற்றும் 3டி சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டபி மற்றும் 27 வாட் க்விக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 3எஸ் சிறப்பம்சங்கள்:
- 6.65 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
- 675MHz அட்ரினோ 640 GPU
- 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி
- 12 ஜி.பி. LPDDR4x ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ரெட்மேஜிக் ஒ.எஸ். 2.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.75, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 7டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனிலும் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
பப்பாயா ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷனின் கீழ்புறம் பிளாக் நிறத்தில் நிறைவுறும் வகையில் இருக்கிறது. இத்துடன் மெக்லாரென் லோகோ அழகாக காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக தீம்களும், கஸ்டம் வால்பேப்பர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹனிகொம்ப் வடிவமைப்பும் கொண்டிருக்கிறது.
இவை தவிர ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் 7டி மாடலில் உள்ளதை போன்று 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், OIS, 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. சோனி IMX471 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்:
- 6.67 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
- 675MHz அட்ரினோ 640 GPU
- 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 7P லென்ஸ், f/1.6, 0.8μm பிக்சல், OIS, EIS
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS, 3x சூம்
- 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2, 2.5 செ.மீ. மேக்ரோ
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4080 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ரேப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் பப்பாயா ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 58,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 64 எம்.பி. குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பலமுறை லீக் ஆன ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கே5 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், கிரேடியன்ட் பேக் பேனல் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ கே5 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 119 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ, இரண்டு 2 எம்.பி. கேமரா, f/2.4 மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ கே5 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 64 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4,1.75μm பிக்சல்
- 2 எம்.பி. 4செ.மீ. மேக்ரோ, f/2.4,1.75μm பிக்சல்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
எசென்ஷியல் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ரூபின் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கியவரும் எசென்ஷியல் நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான ஆண்டி ரூபின் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஸ்மார்ட்போனின் பின்புறம் பெரிய கேமரா மற்றும் கைரேகை செனஅசார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
வித்தியாசமாக காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஜெம் (GEM) என அழைக்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூகுள் மேப்ஸ் செயலி காணப்படுகிறது. மேல்புறம் இயர்பீஸ் கிரில், போனினை சுற்றி பெசல்களும், இயர்பீஸ் கிரிலின் கீழ் நாட்ச் வழங்கப்பட்டிருக்கிறது.

செங்குத்தாக இருக்கும் ஸ்மார்ட்போன் யூசர் இன்டர்ஃபேசின் மேல்புறம் பேட்டரி இன்டிகேட்டர், இன்டர்ஃபேசுக்கு ஏற்ற வகையில் கூகுள் மேப்ஸ் செயலி மாற்றப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் முற்றிலும் புதிய யு.ஐ. காணப்படுகிறது. இதன் கீபோர்டு அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஸ்மார்ட்போன் வடிவமைப்பை பொருத்தவரை இதில் டி9 ரக கீபோர்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்ஃபி எடுக்க பன்ச் ஹோல் ரக கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சோனி மொபைல் நிறுவனம் எக்ஸ்பீரியா 8 ஸ்மார்ட்போனினை ஜப்பானில் அறிமுகம் செய்தது. இதில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:0 வைடு டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா 2X ஆப்டிக்கல் சூம் லென்ஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எக்ஸ்பீரியா 8 ஸ்மார்ட்போனில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கிளாஸ் பேக் மற்றும் 2760 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 8 சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 2560x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 21:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
- அட்ரினோ 508 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- டூயல் சிம்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, EIS
- 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா 2X ஆப்டிக்கல் சூம் லென்ஸ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 2760 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜி்ங்
சோனி எக்ஸ்பீரியா 8 ஸ்மார்ட்போன் கிரே, பிளாக், ஆரஞ்சு, புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 505 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,840) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






