என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 அறிமுக விவரம் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. சந்தையில் பலரை கவரந்த ஐபோன் கையடக்க அளவில் பல்வேறு சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருந்தது. முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ. வெளியாகி மூன்றாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    அந்த வகையில் ஐபோன் எஸ்.இ. 2 பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகியுள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ தெரிவித்தார்.

    புதிய ஐபோன் எஸ்.இ. மாடலில் ஃபேஸ் ஐ.டி., கேமராக்கள், அதிவேக அனுபவம், புதிய ஐ.ஒ.எஸ். அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இது பார்க்க ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, டச் ஐ.டிய சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் எஸ்.இ.

    இத்துடன் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆப்பிளின் ஏ13 பயோனிக் சிபர்செட் இதுவரை வெளியான பிராசஸர்களில் அதிவேகமானதாகும். இதே பிராசஸர் ஐபோன் 11 மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஐபோன் எஸ்.இ. மாடலில் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டிருக்கிறது.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் எஸ்.இ. விலை ஐபோன் 11 மாடலை விட குறைவாக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. 

    இதுதவிர ஆப்பிள் நிறுவனம் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் ஐபேட் ப்ரோ மற்றும் நாய்ஸ் கேன்சலிங் வசதி கொண்ட ஏர்பாட்ஸ் 3 ஹெட்போனையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
    மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் டுயோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இரட்டை ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.



    இரட்டை ஸ்கிரீன் கொண்ட புதிய மைக்ரோசாஃப்ட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டுயோ என அழைக்கப்படும் புதிய சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டுயோவில் இரண்டு 5.6 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை திறக்கும் போது 8.3 இன்ச் ஸ்கிரீன் டேப்லெட் போன்று பயன்படுத்தலாம். இதில் வழங்கப்பட்டுள்ள தாழ் 360 கோணத்தில் மடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதனத்தை பல்வேறு வகைகளில் பயன்படுத்த முடியும்.

    சர்ஃபேஸ் டுயோ

    சர்ஃபேஸ் டுயோவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் மைக்ரோசாஃப்ட் லான்ச்சர் வழங்கப்பட்டுள்ளன. புதிய சாதனத்திற்கென மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் டூயல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவில் ப்ராஜக்ட் எக்ஸ்-கிளவுட் எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டிரீமிங் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனினை வெளிப்புறம் திறக்கும் போது சர்ஃபேஸ் டுயோவில் ப்ராஜக்ட் எக்ஸ்-கிளவுட் சேவைக்கான டச் கமாண்ட்கள் வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சர்ஃபேஸ் டுயோ விற்பனை அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் துவங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
    ரியல்மி பிராண்டு ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரியல்மி பிராண்டின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. எனினும், இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அந்த வகையில் ரியல்மி புதிய ஸ்மார்ட்போன் விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

    ப்ளூடூத் சான்றிதழ் தளத்தில் ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக ட்விட்டரில் தகவல் வெளியாகியிருக்கிறது. RMX1931 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்களும் தெரியவந்துள்ளது. ஃபிளாக்‌ஷிப் தர ஸ்மார்ட்போன் என்பதால் இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.55 இன்ச் FHD பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.0, வைபை வசதி, 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரியல்மி 5 ப்ரோ

    மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் கலர்ஓ.எஸ். 6.1 வழங்கப்படலாம். இத்துடன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம். எனினும், இது ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்படுமா அல்லது டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படுமா என்பது குறித்து தற்சமயம் எவ்வித தகவலும் இல்லை. 

    புதிய ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதாக ரியல்மி ஏற்தகனவே அறிவித்துவிட்டது. தற்சமயம் ப்ளூடூத் தளத்தில் இடம்பெற்றிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதே கேமரா கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரத்யேக பேட்டன் மற்றும் ஹாலோகிராஃபிக் எஃபெக்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ70எஸ்

    சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி -யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 32 எம்.பி.செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் ரெட், ப்ரிசம் கிரஷ் வைட் மற்றும் ப்ரிசம் கிரஷ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 28,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 30,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 

    புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+  ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், கிராஃபைட் ஹீட் சின்க், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் 7டி

    ஒன்பிளஸ் 7டி சிறப்பம்சங்கள்:

    - 6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
    - 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 8 ஜி.பி. LPDDR4X ரேம்
    - 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், OIS, EIS
    - 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட்டெட் சில்வர் மற்றும் கிளேசியர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 37,999 என்றும் 256 ஜி.பி. விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, டாட் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது.

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் கைரேகை சென்சாருக்கு மாற்றாக ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பேக் மற்றும் அரோரா வேவ் க்ரிப் வடிவமைப்பு கொண்டிருக்கும் ரெட்மி 8ஏ P2i கோட்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி 8ஏ

    ரெட்மி 8ஏ சிறப்பம்சங்கள்:

    - 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    -  2 ஜி.பி. / 3 ஜி.பி. LPDDR3 ரேம்
    - 32 ஜி.பி. eMMC 5.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, 1.4μm பிக்சல், f/1.9, 6P லென்ஸ், டூயல் PD ஆட்டோஃபோகஸ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.12µm பிக்சல்
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் சன்செட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,499 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    விவோ நிறுவனம் தனது யு10 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.35 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள விவோ யு10 பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விவோ யு10

    விவோ யு10 சிறப்பம்சங்கள்:

    - 6.35 இன்ச் 1544x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ யு10 ஸ்மார்ட்போன் தன்டர் பிளாக் மற்றும் எலெக்ட்ரிக் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8,990 என்றும், 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,990 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவோ யு10 விற்பனை அமேசான் மற்றும் விவோ இந்தியா தளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.



    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒப்போவின் அதிகம் எதிர்க்கபார்க்கப்படும் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் 65 வாட் சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்படுகறது. இது ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும்.

    ஒப்போ ரெனோ ஏஸ்

    ஒப்போ ரெனோ ஏஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகான் 855 பிளஸ் பிராசஸர்
    - 675MHz அட்ரினோ 640 GPU
    - 12 ஜி.பி. LPDDR4X ரேம்
    - 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, f/1.7, 0.8um பிக்சல், PDAF, OIS, EIS
    - 8 எம்.பி. 116-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ்
    - 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ்
    - 2 எம்.பி. மோனோ லென்ஸ்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 65 வாட் சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ்
    சியோமி நிறுவனத்தின் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 5ஜி கான்செப்ட் போன், Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இதே நிகழ்வில் வளைந்த ஸ்கிரீன் கொண்ட Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும் இது சியோமி ஏற்கனவே காட்சிப்படுத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

    Mi டீசர்

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. சாம்சங் சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 12 எம்.பி. பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் MIUI 11 வழங்கப்படும் என கூறப்பட்டது.

    இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி MIUI 11, Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை வையர்டு சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங், வையர்டு ஒ.டி.ஜி. ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    இவற்றுடன் சியோமியின் புதிய Mi டி.வி. மாடல்களும் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகலாம்.
    சியோமியின் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    சியோமியின் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போனின் டீசர் ப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் முந்தைய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனை விட அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமரா மற்றும் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ரெட்மி 8ஏ டீசர்

    ரெட்மி 8ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் 6.21 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் TFT டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் சிப்செட், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா: 12 எம்.பி. பிரைமரி சென்சாரும், முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் வாட்டர் டிராப் பியூர்டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா செய்ஸ் ஆப்டிக்ஸ், குவாட் பிக்சல் தொழில்நுட்பம், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நோக்கியா 7.2

    நோக்கியா 7.2 சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ 19.5:9 HDR 10 பியூர் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. குவாட் பிக்சல் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, ZEISS ஆப்டிக்ஸ்
    - 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 5 எம்.பி. டெப்த் சென்சார்
    - 20 எம்.பி. குவாட் பிக்சல் செல்ஃபி கேமரா, f/2.0, ZEISS ஆப்டிக்ஸ்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி 2.0
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் சியான் கிரீன் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. / 64 ஜி.பி. மாடல் விலை ரூ. 18,599 என்றும் 6 ஜி.பி. / 64 ஜி.பி. மாடல் விலை ரூ. 19,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா வலைத்தளங்களில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் வி்ற்பனை செய்யப்படுகிறது.
    இந்தியாவில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் மூலம் உருவாகியிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-டோன் ஃபினிஷ், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்

    சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர்
    - மாலி-G72MP3 GPU
    - 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யு.ஐ. 1.5
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, சாம்சங் GW2 சென்சார்
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, சாம்சங் SK3P8SP சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டால்பி அட்மாஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஒபல் பிளாக், சஃபையர் புளு மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி சாம்சங் இந்தியா ஆன்லைன் தளம் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் நடைபெறுகிறது.
    ×