search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    Mi டீசர்
    X
    Mi டீசர்

    விரைவில் அறிமுகமாகும் வளைந்த ஸ்கிரீன் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 5ஜி கான்செப்ட் போன், Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இதே நிகழ்வில் வளைந்த ஸ்கிரீன் கொண்ட Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும் இது சியோமி ஏற்கனவே காட்சிப்படுத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

    Mi டீசர்

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. சாம்சங் சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 12 எம்.பி. பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் MIUI 11 வழங்கப்படும் என கூறப்பட்டது.

    இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி MIUI 11, Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை வையர்டு சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங், வையர்டு ஒ.டி.ஜி. ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    இவற்றுடன் சியோமியின் புதிய Mi டி.வி. மாடல்களும் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகலாம்.
    Next Story
    ×