search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் எஸ்.இ.
    X
    ஐபோன் எஸ்.இ.

    ஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 அறிமுக விவரம் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. சந்தையில் பலரை கவரந்த ஐபோன் கையடக்க அளவில் பல்வேறு சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருந்தது. முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ. வெளியாகி மூன்றாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    அந்த வகையில் ஐபோன் எஸ்.இ. 2 பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகியுள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ தெரிவித்தார்.

    புதிய ஐபோன் எஸ்.இ. மாடலில் ஃபேஸ் ஐ.டி., கேமராக்கள், அதிவேக அனுபவம், புதிய ஐ.ஒ.எஸ். அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இது பார்க்க ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, டச் ஐ.டிய சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் எஸ்.இ.

    இத்துடன் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆப்பிளின் ஏ13 பயோனிக் சிபர்செட் இதுவரை வெளியான பிராசஸர்களில் அதிவேகமானதாகும். இதே பிராசஸர் ஐபோன் 11 மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஐபோன் எஸ்.இ. மாடலில் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டிருக்கிறது.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் எஸ்.இ. விலை ஐபோன் 11 மாடலை விட குறைவாக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. 

    இதுதவிர ஆப்பிள் நிறுவனம் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் ஐபேட் ப்ரோ மற்றும் நாய்ஸ் கேன்சலிங் வசதி கொண்ட ஏர்பாட்ஸ் 3 ஹெட்போனையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×