search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் 7டி
    X
    ஒன்பிளஸ் 7டி

    ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 

    புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+  ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், கிராஃபைட் ஹீட் சின்க், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் 7டி

    ஒன்பிளஸ் 7டி சிறப்பம்சங்கள்:

    - 6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
    - 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 8 ஜி.பி. LPDDR4X ரேம்
    - 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், OIS, EIS
    - 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட்டெட் சில்வர் மற்றும் கிளேசியர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 37,999 என்றும் 256 ஜி.பி. விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.
    Next Story
    ×