search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி 8ஏ டீசர்
    X
    ரெட்மி 8ஏ டீசர்

    விரைவில் இந்தியா வரும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்

    சியோமியின் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    சியோமியின் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போனின் டீசர் ப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் முந்தைய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனை விட அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமரா மற்றும் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ரெட்மி 8ஏ டீசர்

    ரெட்மி 8ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் 6.21 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் TFT டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் சிப்செட், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா: 12 எம்.பி. பிரைமரி சென்சாரும், முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×