என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை பார்ப்போம்.



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பெருமளவு விவரங்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி இருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றி எவ்வித தகவலும் இல்லை. 

    இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் பிக்சல்புக் 2 அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 4, பிக்சல் 4 XL, பிக்சல்புக் 2, புதிய கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள், நெஸ்ட் மினி மற்றும் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பிக்சல் 3, பிக்சல் 3 XL, பிக்சல் ஸ்லேட், புதிய க்ரோம்காஸ்ட், நெஸ்ட் ஹப் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது.

    கூகுள் நிகழ்வு டீசர்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் இல்லாத 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. செட்டிங்ஸ் செயலியில் இருந்து ஸ்மூத் டிஸ்ப்ளே ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இது 60 முதல் 90 ஹெர்ட்ஸ்களிடையே செட்டிங்கை தானாக மாற்றிக் கொள்ளும். 

    பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.23 இன்ச் 3040x1440 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 12.2 எம்.பி. சோனி IMX363 + 16 எம்.பி. IMX481 டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. சோனி IMX520 யூனிட் வழங்கப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இ6எஸ் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோ இ6எஸ்

    மோட்டோ இ6எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி.+ 19.5:9 மேக்ஸ் விஷன் IPS டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 650MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டர
    - 10 வாட் சார்ஜிங்

    மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் ரிச் கிரான்பெரி மற்றும் பாலிஷ்டு கிராஃபைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது.
    ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.



    ரியல்மி பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி XT ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க ரியல்மி XT ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கேமரா கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரியல்மி XT பெற்றிருக்கிறது.

    பிரைமரி கேமராவுடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. சீன் டிடெக்‌ஷன், க்ரோம் பூஸ்ட், சூப்பர் நைட்ஸ்கேப், எக்ஸ்பெர்ட் மோட் போன்றவை வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் வீடியோக்களுக்கு EIS வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி XT மாடல் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, சூப்பர் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் VOOC 3.0 சார்ஜரும் வழங்கப்படுகிறது. 

    ரியல்மி XT

    ரியல்மி XT சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.72″ சாம்சங் GW1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
    - 2 எம்.பி. கேமரா, f/2.4, 1.75μm பிக்சல்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - சூப்பர் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி XT ஸ்மார்ட்போன் பியல் வைட் மற்றும் பியல் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம். 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரியல்மி XT விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைத்தளங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி விற்பனை துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்றன.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

    கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7904 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 25 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ50எஸ்

    சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
    - மாலி-G72 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - சாம்சங் பே
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    கேலக்ஸி ஏ30எஸ்

    சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 பிராசஸர்
    - மாலி-G71 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 25 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - சாம்சங் பே
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன்கள் ப்ரிஸம் கிரஷ் பிளாக், ப்ரிஸம் கிரஷ் வைட் மற்றும் ப்ரிஸம் கிரஷ் வைலட் நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் கேலக்ஸி ஏ30எஸ் விலை ரூ. 16,999 என்றும் கேலக்ஸி ஏ50எஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 11 மாடலுடன் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.



    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 11 ஸ்மார்ட்போனுடன், ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களிலும் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன்களை விட அதிக பிரகாசமானதாகும். 

    இரு ஸ்மார்ட்போன்களிலும் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் அல்ட்ரா வைடு, வைடு மற்றும் டெலிபோட்டோ கேமராக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும். 

    ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐபோன் XS மாடலை விட நான்கு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. இத்துடன் இரு மாடல்களிலும் 18 வாட் யு.எஸ்.பி. டைப்-சி பவர் அடாப்டர் வழங்கப்படுகின்றன.

    ஐபோன் 11 ப்ரோ

    ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் 2436x1125 பிக்சல் / 6.5 இன்ச் 2688x1242 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே
    - A13 பயோனிக் 64-பிட் பிராசஸர், 8-கோர் நியூரல் என்ஜின்
    - 64 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி
    - ஐ.ஒ.எஸ். 13
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. வைடு ஆங்கிள், f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 4K வீடியோ வசதி
    - 12 எம்.பி. 120°  அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
    - 12 எம்.பி. டெலிபோட்டோ, f/2.0
    - 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - ட்ரூ டெப்த் கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - லித்தியம் அயன் பேட்டரி
    - Qi வயர்லெஸ் சார்ஜிங்
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் கிரீன், ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 99,900 மற்றும் ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் மாடல் ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம் அறிமுகம் செய்யப்பட்டது.
    ஆப்பிள் நிறுவன அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் 2019 ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நிகழ்வில் ஆப்பிள் நிறுவன சேவைகளின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. டிம் குக் அறிமுக உரையுடன் துவங்கிய நிகழ்வில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் ஆர்கேட் சேவை செப்டம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. 

    ஆப்பிள் ஆர்கேட்

    ஆப்பிள் ஆர்கேட்:

    ஆப்பிள் ஆர்கேட் சேவை ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. இவற்றில் சில கேம் இன்று முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கேம்களை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இந்த சேவைக்கான மாத கட்டணம் 499 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் டி.வி. பிளஸ்:

    ஆப்பிள் டி.வி. பிளஸ்:

    ஆர்கேட் கேமிங் சேவையுடன் ஆப்பிள் டி.வி. பிளஸ் 100 நாடுகளில் கிடைக்கும். இதற்கான மாத கட்டணம் 4.99 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்படும் ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை இலவசமாக வழங்கப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.

    2019 ஐபேட்

    2019 ஐபேட்:

    ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபேட் மாடலை அறிமுகம் செய்தது. இதில் இருமடங்கு வேகமான பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய ஐபேட் துவக்க விலை 329 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இதன் கட்டணம் மேலும் குறைவாகும். 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5:

    புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 மாடலின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஐபோன் 11

    ஐபோன் 11:

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் மற்றொன்று அல்ட்ரா வைடு சென்சார் ஆகும். இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஐபோன்களில் முதல் முறையாக செல்ஃபி கேமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் அதிக சக்திவாய்ந்ததாகும். புதிய ஐபோன் 11 மாடலில் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களை விட அதிக திறன் கொண்ட கிராஃபிக்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஐபோன் முந்தைய ஐபோன் XR மாடலை விட ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் 11 விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஐபோன் 11 ப்ரோ

    ஐபோன் 11 ப்ரோ:

    ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் மாடலாக ஐபோன் 11 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று பிரைமரி கேமரா செனசார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மாடலில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. வைடு கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டீப் ஃபியூஷன் எனும் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மென்பொருள் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இது புகைப்படங்களை அழகாக்க ஒன்பது படங்களை ஒன்றிணைத்து சிறந்த புகைப்படத்தை அதிவேகமாக வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    ஐபோன் 11 ப்ரோ மாடல் விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    லெனோவோவின் மோட்டோரோலா பிராண்டு விரைவில் தனது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற 2019 ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இ6 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் சியோமி, ரியல்மி, ஹானர் மற்றும் இதர நிறுவனங்களின் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இ6 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை மோட்டோரோலா வெளியிட்டிருக்கிறது.

    மோட்டோ இ6 பிளஸ்

    மோட்டோ இ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 1560x720 பிக்சல் HD+ 19.5:9 மேக்ஸ் விஷன் IPS டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர் 
    - 650MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - எஃப்.எம். ரேடியோ
    - P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் நானோ கோட்டிங்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதுதவிர கேலக்ஸி ஏ50எஸ் மாடலுக்கென போட்டி ஒன்றையும் துவங்கியிருக்கிறது. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி ஏ20எஸ் மாடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஜியோமெட்ரிக் பேட்டன், ஹாலோகிராஃபிக் எஃபெக்ட் கொண்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமராக்கள், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9610 10 என்.எம். பிராசஸர்
    - மாலி-G72 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    கேலக்ஸி ஏ30எஸ்

    சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 1560x720 பிக்சல் HD+ இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
    - மாலி-G71 GPU
    - 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 25 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சமீபத்தில் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 291 டாலர்கள் (இந்தியாவில் ரூ. 20,870) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஜப்பானைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனம் காற்று சுத்திகரிக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    நகர்ப்பகுதிகளில் இப்போதெல்லாம் சுத்தமான காற்றை விலைகொடுத்துதான் வாங்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. இதனால் பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு ஏ.சி., வாஷிங்மெஷின் போன்ற நவீன சாதனங்களோடு காற்று சுத்திகரிப்பானும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு ஜப்பானைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனம் காற்று சுத்திகரிக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இது காற்றில் மாசுக்களை வெளியேற்றுவதோடு, அறையில் அதிகபட்ச ஈரப்பதம் நிலவாமல் தடுத்துவிடும். காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது மாசு அதிகரிக்கும். இதனால் காற்றில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட அளவு நிலவ இது உதவும்.

    இதில் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்மா கிளஸ்டர் ஐயான் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் உள்ளது. இது சலவை இயந்திரம் ஈரத் துணியை உலர்த்த பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போன்றது. இது அறையில் உள்ள ஈரப்பதத்தை போக்க உதவுகிறது. SHARP DWJ20FMW and DW-E16FAW என்ற பெயரில் இது அறிமுகமாகி உள்ளது. குழந்தைகள் எளிதில் கையாள முடியாத வகையில் இதில் சைல்ட்லாக் வசதி உள்ளது.

    அத்துடன் அதிக அளவு குப்பை சேர்ந்துவிட்டால் அதை உணர்த்தி நீக்க வலியுறுத்தும் விளக்கு எரியும். கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிப்போர் (ஈரப்பதம் அதிகமிருக்கும்), கடற்கரையோர விடுதிகளில் இதை பயன்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.40 ஆயிரமாகும். ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

    சர்வதேச அளவில் பிரபலமான லெனோவா நிறுவனம் ஸ்மார்ட் டிஸ்பிளேவுடன் கூடிய கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு கருவிகள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான லெனோவா நிறுவனம் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் உதவியுடன் செயல்படும் வகையிலான இந்த கடிகாரம் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.5,999. ஸ்மார்ட் டிஸ்பிளே கடிகாரம் விலை ரூ.14,999. லெனோவா இணையதளம், பிளிப்கார்ட் ஆன்லைன் மற்றும் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையகங்களில் இது கிடைக்கும்.

    இந்த ஸ்மார்ட் கடிகாரம் 4 அங்குல தொடுதிரையைக் கொண்டது. அத்துடன் இதில் பில்ட் இன் அம்சமாக கூகுள் அசிஸ்டென்ட் உள்ளது. இது மென்மையான துணி போர்வை மேலுறையாக இருப்பதால் இதை படுக்கையறையில் வைத்துக்கொள்ள ஏதுவாக உள்ளது. உபயோகிப்பாளர்கள் கூகுள் அசிஸ்டென்ட் மூலமாக இந்த கடிகாரம் வாயிலாக தங்களது தூக்க நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம்.

    இதில் கூகுள் அசிஸ்டென்ட் இணைப்பு வசதி உள்ளதால் உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் உபகரணங்களை குறிப்பாக விளக்கை அணைப்பதற்கு இந்த ஸ்மார்ட் கடிகாரம் மூலம் உத்தரவிடலாம். அத்துடன் காலண்டரில் உள்ள நிகழ்ச்சிகளை இதில் பார்க்கலாம். நேரம், அலாரம், அடுத்து உங்களுக்கு உள்ள முக்கியமான சந்திப்பு நிகழ்ச்சி, வானிலை விவரம் உள்ளிட்ட பல தகவல்களுடன் இனிய இசையையும் இது வெளிப்படுத்தும்.

    இதில் 6 வாட் ஸ்பீக்கர் இருப்பதால் இசை வெள்ளம் அறை முழுவதும் ரம்மியமாக வெளிப்படும். ரேடியோ, போட்காஸ்ட், ஆடியோபுக் மூலமான இசை ஆல்பங் களையும் கேட்க முடியும். இந்த ஸ்மார்ட் கடிகாரம் மூலம் டி.வி.யில் இணைக்கப்பட்டுள்ள குரோம் காஸ்டை குரல் வழி மூலம் கட்டுப்படுத்தலாம். நிகழ்ச்சிகள், இசை ஆல்பங்களை டி.வி.யில் பார்த்து ரசிக்கவும் இந்த ஸ்மார்ட் கடிகாரம் உதவும்.

    இது 10 அங்குல தொடு திரையைக் கொண்டது. இதன் மூலம் ஸ்மார்ட்டாக சில பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ரெசிப்பிக்களை தெரிந்து கொள்வது, கூகுள் தேடலில் பதில் கிடைப்பது, யூ-டியூப் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    இதில் உள்ள ஸ்மார்ட் ஸ்பீக்கர் மூலம் வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் கருவிகளையும் கட்டுப்படுத்தலாம். வீடியோ அழைப்புகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம். அதற்கு வசதியாக இதில் கேமரா உள்ளது. கூகுள் போட்டோ அக்கவுன்ட்டில் இருந்து புகைப்படங்களையும் எடுக்க முடியும்.
    லூமினிஸ்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள லாந்தர் விளக்கு முற்றிலும் வித்தியாசமானது. இதற்கு பேட்டரி தேவையில்லை. சூரிய ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்து கொள்ளும்.
    பொதுவாக விளக்குகளில் இரண்டு வகைதான். ஒன்று மின்சாரம் அல்லது பேட்டரியில் ஒளி வீசுபவை. மற்றொன்று திரவங்கள் மூலம் எரிபவை. ஆனால் லூமினிஸ்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த லாந்தர் விளக்கு முற்றிலும் வித்தியாசமானது.

    அனல்மின் நிலையங்களில் நிலக்கரி மூலம் வெப்பம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் நீராவி ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதைப் போல இதில் கீழ் பகுதியில் வெப்பம் ஏற்படுத்தப்பட்டு மேல் பகுதியில் மின் விளக்கு ஒளிரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மின் வெட்டு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முகாம்களுக்கு இது மிகவும் ஏற்றது. இதற்கு பேட்டரி தேவையில்லை. சூரிய ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்து கொள்ளும். எல்.இ.டி. பல்பு மிகவும் பிரகாசமான வெளிச்சத்தை அளிக்கும். விரைவிலேயே இந்தியாவில் இந்த மாடல் விளக்குகள் விற்பனைக்கு வர உள்ளன.

    எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் ஹெச்டிசி, டிசையர் 19+ ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரவுள்ளது.
    இருபது வருடங்களுக்கு மேலாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் ‘ஹெச்டிசி’. தைவானைச்  சேர்ந்த இந்நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை மையமாக வைத்து சில ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆனால்,  இங்கே பெரிதாக சந்தையைக் கைப்பற்ற முடியவில்லை.

    ‘நோக்கியா’வைப் போல நாளடைவில் ஹெச்டிசியும் பின்வாங்கிக் கொண்டது. இப்படி ஒரு  நிறுவனம் இருந்ததா? என்று வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுக்குத்தான் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு இருந்தது.  இந்நிலையில் ‘டிசையர் 19+’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ‘ஹெச்டிசி’.

    ‘டிசையர் 19+’ ஸ்மார்ட்போன்

    இந்த மாடல் தைவானில் ரிலீசாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் போனின் அறிமுகம் ஹெச்டிசி நிறுவனத்துக்கு இந்தியாவில்  பெரிய கம்பேக்காக இருக்கும் நம்பப்படுகிறது.

    6.2 இன்ச்சில் ஹெச்.டி டிஸ்பிளே, 720x1520 பிக்ஸலில் ரெசல்யூசன், 13 எம்பியில் பிரைமரி  சென்சாருடன் கூடிய மெயின் கேமரா, 8 எம்பியில் செகண்டரி சென்சாருடன் வைடு ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா, 5 எம்பியில் டெரிட்டரி,  டெப்த்-சென்சிங்  சென்சாருடன் ஒரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், அத்துடன் 16 எம்பியில் செல்ஃபி கேமரா, ஒரு நாள் முழுக்க சார்ஜ்  நிற்க 3,850 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரேம், ஃபிங்கர் பிரின்ட் லாக்-இன் வசதி, மீடியா டெக்  ஹெலியோ பி35 பிராசஸர் என அசத்துகிறது இந்த  போன். இந்தியாவில் இதன் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    ×