என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் யுபோன் நிறுவனம் கடினமான சூழலில் தாக்குப்பிடிக்கும் புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
    மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் யுபோன் நிறுவனம் கடினமான சூழலில் தாக்குப்பிடிக்கும் புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ‘எஸ்.பி 6550.’ என்ற பெயரில் இது வந்துள்ளது. இது வாட்டர் புரூப் தன்மை கொண்டது. அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மேல் உறை ரப்பரால் ஆனது. இதை எளிதில் கழற்றி தண்ணீரில் சுத்தம் செய்யலாம். இதில் 1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.

    அனைத்து முன்னணி விற்பனையகங்களிலும் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.2,999. இது 6 மணி நேரம் தொடர்ந்து செயல்படக்கூடியது. இது முழுமையாக சார்ஜ் ஆக 2 மணி நேரம் போதுமானது. 480 கிராம் எடை கொண்ட இந்த ஸ்பீக்கர், சிறிய நிகழ்ச்சிகள், இனிய மாலைப் பொழுதில் நண்பர்களுடன் இனிய பாடலைக் கேட்டு ரசிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
    கோபியான் நிறுவனத்தின் அங்கமான மெர்க்குரி நிறுவனம் இரண்டு விதமான போர்ட்டபிள் மல்டி மீடியா ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.
    கோபியான் நிறுவனத்தின் அங்கமான மெர்க்குரி நிறுவனம் இரண்டு விதமான போர்ட்டபிள் மல்டி மீடியா ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே 6 வாட் திறன் கொண்டவை, எளிதில் எடுத்துச் செல்லும் வடிவில் உருவாக்கப்பட்டவை. இவை இரண்டும் ஸ்டீரியோ அளவுக்கு ஒலியை துல்லியமாக வெளிப்படுத்தக் கூடியவை. மிக அழகிய பிளாஸ்டிக் மேல் பகுதியைக் கொண்டவை. இதை பர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் மற்றும் டி.வி.யுடன் இணைத்தும் பயன்படுத்த முடியும். ஆடியோ போர்ட்டை இணைப்பதற்கு 3.5 மி.மீ. ஆடியோ ஜாக் உள்ளது.

    இது 60 டெசிபல் அளவுக்கு ஒலியை வெளிப்படுத்தக் கூடியது. இதனால் உள்ளரங்கு மற்றும் திறந்த வெளியில் பயன்படுத்த ஏற்றது. ஹார்மனி மற்றும் வேவ் என்ற பெயரில் வந்துள்ள இவற்றின் விலை முறையே சுமார் ரூ.400 மற்றும் ரூ.600 ஆகும். இவற்றுக்கு ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. 
    பெபிள் நிறுவனம் கிரிப் வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சார்ஜரை மொபைல் சார்ஜராகவும், மொபைல் ஹோல்டராகவும் பயன்படுத்தலாம்.
    மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் பெபிள் நிறுவனம் கிரிப் வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,499 ஆகும். இந்த சார்ஜர் இரட்டை சாதக அம்சங்களைக் கொண்டது. முதலாவது இதை மொபைல் சார்ஜராகப் பயன்படுத்தலாம். அடுத்து இது மொபைல் ஹோல்டராகவும் பயன்படுத்த முடியும். 5 வாட் முதல் 10 வாட் வரையிலான மின்சாரத்தை கடத்தும் திறன் கொண்டதாக இது வந்துள்ளது.

    இதில் முன்னேறிய தொழில் நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இது 10 வகையான சர்கியூட் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு திடீரென அதிக மின்சாரம் பாய்வது தடுத்து நிறுத்தப்படும்.

    அதேபோல அதிகம் சூடேறுவதையும் இது நிறுத்திவிடும். அனைத்துக்கும் மேலாக கார் ஓடிக் கொண்டிருந்தாலும் கீழே விழாத வகையில் இது கிரிப்பாக பிடித்திருக்கும். அனைத்து பிராண்ட் ஸ்மார்ட்போனுக்கும் பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    டொரேடோ நிறுவனம் ஒரே சமயத்தில் நான்கு மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
    இது மின்னணு யுகம். அதனால் வெறுமனே ஸ்மார்ட் கருவிகள் இருந்தால் மட்டும் போதாது, அவற்றை சார்ஜ் செய்து பேட்டரி முழுமையாக இருப்பதை உறுதி செய்வதும் அவசியம். அதற்கு சார்ஜிங் கருவிகள் அத்தியாவசியமாகிவிட்டன. ஒரு சார்ஜிங் கருவி பொதுவாக போதுமானதாக இருப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டே டொரேடோ நிறுவனம் ஒரே சமயத்தில் நான்கு மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

    அத்துடன் மட்டுமின்றி தொழில்நுட்ப வல்லுநர்கள் பரவலாக பல நாடுகளுக்கும் செல்ல வேண்டிய காலமிது. இதைக் கருத்தில் கொண்டே அனைத்து நாடுகளின் சார்ஜிங் சாக்கெட்டுகளுக்கேற்ற வகையில் இதன் பின் பாயின்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சார்ஜரை பயன்படுத்த முடியும். இதில் எல்.இ.டி. இன்டிகேட்டரும் இருப்பது சிறப்பம்சமாகும். 5 வோல்ட் திறன் தேவைப்படும் கருவிகளை இதில் சார்ஜ் செய்ய முடியும். இந்த சார்ஜருடன் 1.5 மீட்டர் வயரும் உள்ளது.

    இதில் சார்ஜ் ஏற்றும் சாதனங்கள் முழுமையாக சார்ஜ் ஏறியதை இதில் உள்ள இன்டிகேட்டர் விளக்கு உணர்த்தும். இதன் விலை சுமார் ரூ.999. இந்த ஒரு சார்ஜர் இருந்தாலே உங்களிடமுள்ள நான்கு மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.
    ரியோன் பாக்கெட் ஏ.சி. என்ற பெயரில் பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையிலான ஏ.சி.யை சோனி நிறுவனம் உருவாக்கி உள்ளது.
    செல்லுமிடமெல்லாம் உங்கள் உடலுக்கு சில்லென்ற குளிர்ச்சியான சூழல் நிலவும். அதற்காக பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையிலான ஏ.சி.யை உருவாக்கி உள்ளது சோனி நிறுவனம். ரியோன் பாக்கெட் ஏ.சி. என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. இதை புளூடூத் 5.0 மூலம் இணைத்து செயல்படுத்தலாம்.

    தெர்மோ எலெக்ட்ரிக் அடிப்படையில் இது குளிர்ச்சியை அளிக்கும். ரியோன் பாக்கெட் ஏ.சி. கருவியானது ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரியில் செயல்படுகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரம் செயல்படும். இந்த ஏ.சி. சாதனம் எடை குறைவானது (85 கிராம்), அதாவது வழக்கமாக பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் எடையை விட இது குறைவானதாகும்.

    இந்த கருவியானது ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படக் கூடியது. இதற்குரிய செயலி (ஆப்) மூலம் இந்த கருவியை செயல்படுத்தலாம். இது ரியோன் பாக்கெட் ஸ்டாண்டர்டு மற்றும் ரியோன் பாக்கெட் லைட் என்ற இரண்டு மாடல்களில் வந்துள்ளது. இதில் பாக்கெட் லைட் விலை குறைவானது.

    ரியோன் பாக்கெட் ஏ.சி.

    ஆனால் இதை மானுவலாகத்தான் செயல்படுத்த முடியும். மற்றொரு மாடலான பாக்கெட் ஸ்டாண்டர்டு ஸ்மார்ட்போன் மூலமும், மானுவலாகவும் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதிய மாடல்களில் ஆட்டோமேடிக் வசதியும் இடம்பெறும் என்று நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    வறுத்தெடுக்கும் வெயிலில் இந்த கருவி பலரிடம் சோதித்துப் பார்க்கப்பட்டது. அதில் இதை அணிந்திருந்தவர்கள் 13 டிகிரி வரையிலான குளிர்ச்சியை பெற்றனர். அதேபோல கடுங்குளிர் காலத்தில் உடலின் வெப்ப நிலையை 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கவும் செய்யும். ரியோன் பாக்கெட் விலை ரூ.8,091 முதல் ரூ.12,067 வரை விற்பனையாகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்30எஸ் என்ற பெயரில் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்றும் இதன் பிரைமரி சென்சார் 48 எம்.பி. லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எம்30 - கோப்புப்படம்

    கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அதிக திறன் கொண்ட பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி  எம் சீரிஸ் என்பதால் இதன் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.
     
    இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்க இருக்கும் நிலையில், இதுபற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
    லெனோவோ நிறுவனம் விரைவில் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    லெனோவோ நிறுவனத்தின் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி கில்லர் நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதாக லெனோவோ தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் லெனோவோ நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக லெனோவோ நிறுவனத்தின் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. லெனோவோ கே9 நோட் என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மா்ர்ட்போன் லெனோவோ கே10 நோட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முந்தைய லெனோவோ கே9 நோட் ஸ்மார்ட்போனில் 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டது.

    லெனோவோ கே9

    கடந்த ஆண்டு அக்டோபரில் லெனோவோ இரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. லெனோவோ ஏ5 மற்றும் லெனோவோ கே9 என இரு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ. 5,999 மற்றும் ரூ. 8,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை சியோமியின் ரெட்மி 6 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டன.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை லெனோவோ கே9 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, மீடியாடெக் MTK6762 ஆக்டா-கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டது. புகைப்படங்களை எடுக்க லெனோவோ கே9 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. + 5 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கபப்ட்டது. 
    லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.



    லாவா நிறுவனம் இசட்93 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இசட்93 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இசட்92 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய லாவா இசட்93 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்மார்ட் ஏ.ஐ. கேமிங் மோட், ஆக்டா-கோர் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டியூ டிராப் நாட்ச் மற்றும் 1520x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 லெவல் ஏ.ஐ. போட்டோ ஸ்டூடியோ, ப்ரோ மோட் பானரோமா, ஏ.ஆர். ஸ்டிக்கர் மற்றும் ஹெச்.டி.ஆர். மோட் வழங்கப்பட்டுள்ளது.

    லாவா இசட்93

    லாவா இசட்93 சிறப்பம்சங்கள்

    - 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்
    - 650MHz IMG PowerVR GE8320 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    லாவா இசட்93 ஸ்மார்ட்போன் சார்கோல் புளு மற்றும் ராயல் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
    நோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கின் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார்.

    பல்வேறு ஸ்மார்டபோன் நிறுவனங்களும் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    5ஜி

    தற்சமயம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களை விட நோக்கியா 5ஜி மொபைல் விலை பாதியாக நிர்ணயிக்கப்படும் என ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார். அந்த வகையில் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விலை 500 முதல் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 35,600 முதல் ரூ. 42,700) வரை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

    நோக்கியா தவிர ஹூவாய் மற்றும் மீடியாடெக் நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் விலையும் குறைவாக இருக்கும் என தெரிகிறது. 

    புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கென ஹெச்.எம்.டி. குளோபல் சிப்செட் உருவாக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்விகாஸ் தெரிவித்தார். புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை. எனினும் வெளியீட்டிற்கு முன் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.



    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 11 மாடலில் 5வாட் சார்ஜருக்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019 ஐபோன் சீரிஸ் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

    ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களுடன் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், வழக்கம்போல் யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட் வழங்கியது. சார்ஜிங் சாதனங்கள் சார்ந்த விவரங்களை வழங்கும் வலைத்தளம் ஒன்றில் ஐபோன் 11 யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர்

    புதிய ஐபோன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்டில் இருந்து லைட்னிங் கேபிள் இணைப்பு வழங்கப்படலவாம். இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் ஆப்பிள் வழக்கமான சார்ஜர்களையே வழங்கி வருகிறது. இது யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட் ஆகும். இது யு.எஸ்.பி. டைப்-ஏ-வில் இருந்து லைட்னிங் கேபிள் இணைப்பு வழங்கப்படுகிறது.

    சமீபத்திய ஐபேட் ப்ரோ மாடல்கள் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. முன்னதாக மார்ச் மாதத்தில் வெளியான தகவல்களிலும் 2019 ஐபோன்களுடன் யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

    புதிய சார்ஜர் தவிர ஐபோன் 11 மாடலில் முந்தைய ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களில் இருந்ததை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். இத்துடன் ஆப்பிளின் ஏ13 சிப்செட், புதிய டேப்டிக் என்ஜின் வழங்கப்படலாம். 
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. 

    இதில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்ஃபி கேமரா நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களை வழங்குகிறது.

    3டி வளைந்த கிளாஸ் பேக் கொண்டிருக்கும் Mi ஏ3 மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. Mi ஏ3 ஸ்மார்ட்போனில் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி Mi ஏ3

    சியோமி Mi ஏ3 சிறப்பம்சங்கள்:

    - 6.08 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர் 
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி- ஹைப்ரிட் டூயல் சிம் 
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, இன்ஃப்ராரெட் சென்சார்
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் நாட் ஜஸ்ட் புளு, மோர் தான் வைட் மற்றும் கைன்ட் ஆஃப் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் விலை ரூ. 12,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 23 ஆம் தேதி துவங்குகிறது. 
    ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.



    ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 3 மற்றும் ரியல்மி 3 ப்ரோ மாடல்களின் மேம்பட்டவை ஆகும். 

    ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்களிலும் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளன.

    ரியல்மி 5

    ரியல்மி 5 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி-டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 ரியல்மி எடிஷன்
    - 12 எம்.பி. சோனி IMX386 சென்சார், f/1.8, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    ரியல்மி 5 ப்ரோ

    ரியல்மி 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 712 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 8 ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0
    - 48 எம்.பி. 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4035 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC  3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 5 ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளு மற்றும் க்ரிஸ்டல் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 9,999 விலையிலும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 10,999 விலையிலும், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்குகிறது.

    ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்பார்க்லிங் புளு மற்றும் க்ரிஸ்டல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ. 13,999, 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999, டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 விலையில் கிடைக்கிறது. ஆஃப்லைன் சந்தையில் இதன் விற்பனை செப்டம்பர் 4 ஆம் தேதி துவங்குகிறது.
    ×