என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 சாதனத்தின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 4 மாடலை எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிள்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. இதில் ஃபால் டிடெக்‌ஷன் வசதி வழங்கப்பட்டிருந்தது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் 2019 ஐபோன் மாடல்களுடன் அறிமுகமாகும் என தெரிகிறது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடலில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான OLED டிஸ்ப்ளே மற்றும் டச் மாட்யூல் உள்ளிட்டவற்றை ஜப்பான் டிஸ்ப்ளே இன்க் நிறுவனம் விநியோகம் செய்யும் என்றும் தெரிகிறது. OLED டிஸ்ப்ளே ப்ரோபோஷன் அளவுகளில் இந்த ஆண்டு 15 முதல் 20 சதவிகிதத்திற்கும், 2021 ஆம் ஆண்டில் 70 இல் இருந்து 80 சதவிகிதம் வரை அதிகப்படுத்த ஜப்பான் டிஸ்ப்ளே திட்டமிட்டுள்ளது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 - கோப்புப்படம்

    சாங்சின் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருவாய் ஆப்பிள் வாட்ச் மூலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஜப்பான் டிஸ்ப்ளே இன்க் நிறுவனத்திடம் இருந்து OLED டிஸ்ப்ளேக்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்துடன் எல்.ஜி. மற்றும் போ.ஒ.இ. நிறுவனங்களும் OLED டிஸ்ப்ளேக்களை வழங்க இருக்கின்றன.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களை புதிய 2019 ஐபோன் மாடல்களுடன் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.
    ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது ரெட்மி 8 பெயர் கொண்டிருக்கலாம் என தெரிகிறது.



    சியோமியின் ரெட்மி பிரண்டு புதிதாக ரெட்மி 7 மற்றும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் M1908C3IC  என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. 

    இதனுடன் இடம்பெற்ற புகைப்படத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. வடிவமைப்பில் புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை பெறாத நிலையில் கேமரா மட்டும் வித்தியாசமாக பொருத்தப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் முன்புறம் ஸ்கிரீனின் கீழ்பகுதியில் ரெட்மி பிராண்டிங் காணப்படுகிறது. பின்புறம் கேமரா மற்றும் கைரேகை சென்சாரின் கீழ் சியோமி வடிவமைத்தது (Designed by Xiaomi) என கூறும் வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

    ரெட்மி 8 லீக்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.2 இன்ச் ஸ்கிரீன், 156.3×75.4×9.4mm அளவுகளில் உருவாகியுள்ளது. இது அளவில் சற்று சிறியதாகவும், ரெட்மி 7 மாடலை விட தடிமனாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. முந்தைய ரெட்மி 7 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    3சி சான்று பெற்றிருப்பதால், இதில் 10வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்படுவதால் இது ரெட்மி நோட் 8 மாடலாக இருக்காது. ரெட்மி நோட் 8 மாடலில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 எம்.பி. சென்சாருடன் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது.
    சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்களுடன உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. எனினும், அதன் ஹார்டுவேர் மற்றும் கேமரா பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

    தற்சமயம் வெளியாகியுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் மூன்று கேமராக்களும் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் மெகாபிக்சல் விவரஙஅகள் பற்றி எந்த தகவலும் இல்லை.

    ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் சியோமி பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தின்படி சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்ற சாதனமாக காட்சியளிக்கிறது. இதில் இரட்டை தாழ் கொண்ட டிஸ்ப்ளே இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக உருவாக்கப்படுகிறது.

    சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    இதனை பார்க்க சியோமி தலைவர் லின் பின் வெளியிட்ட வீடியோவில் இருந்த ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த வீடியோக்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா பற்றி எந்த தகவலும் இல்லை. காப்புரிமை புகைப்படங்களில் செல்ஃபி கேமரா வழங்குவதை உணர்த்தும் கட்-அவுட் எதுவும் தெரியவில்லை. இவை சியோமி வெளியிட்ட டீசர்களிலும் காட்சியளிக்கவில்லை.

    மூன்று கேமரா கொண்ட காப்புரிமை விண்ணப்பத்தில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மாபர்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ள போதும், இது வர்த்தக ரீதியில் அமலாக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே சியோமி வெளியிட்ட விவரங்களில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட் வடிவில் வெற்றிப் பெற்றால் மட்டும் தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
    ரியல்மி பிராண்டு இந்தியாவின் முதல் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    இந்தியாவில் ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் என ரியல்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

    48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் பிரைமரி சென்சாருடன், அல்ட்ரா-வைடு சென்சார், சூப்பர் மேக்ரோ சென்சார், டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    ரியல்மி 5 ப்ரோ டீசர்

    புதிய ஸ்மார்ட்போன் அறிவிப்பை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ரியல்மி 5 ப்ரோ பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் ரியல்மி 5 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 48 எம்.பி. கேமராவுடன் நான்கு சென்சார்கள் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

    ரியல்மி 5 பற்றி ப்ளிப்கார்ட் தளத்தில் சிறிய பதிவு வெளியானது. எனினும், ரியல்மி 5 பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ப்ளிப்கார்ட் பதிவுகளின் படி ரியல்மி 5 ப்ரோ இரண்டாவது சென்சார் அல்ட்ரா வைடு சென்சார் கொண்டிருக்கும் என தெரிவித்தது. இத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் கிளாஸி பேக் பேனல், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
    ரியல்மி பிராண்டின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் ரியல்மி எக்ஸ் 256 ஜி.பி. மெமரி வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக புதிய வேரியண்ட் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. சீனாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இது கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் இது அறிமுகம் செய்யப்பட்டது.

    அந்த வகையில் ரியல்மி எக்ஸ் 256 ஜி.பி. வேரியண்ட் TENAA வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரியல்மி எக்ஸ்

    இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 4 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக ஹெச்.எம்.டி. குளோபல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    எனினும், எந்தெந்த மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது குறித்து ஹெச்.எம்.டி. குளோபல் எவ்வித தகவலையும் வழங்கவில்லை. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    நோக்கியா 7.2 கேஸ் லீக்

    இரு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களும் டேர்டெவில் மற்றும் ஸ்டார்-லார்டு எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகின்றன. நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களில் 6.2 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 120-டிகிரி அல்ட்ரா-வைடு லென்ஸ், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸரும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸரும் வழங்கப்படும் என தெரிகிறது. இதே நிகழ்வில் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 110 (2019), நோக்கியா 2720 (2019) மொபைல் போன்களையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    முன்னதாக 5ஜி வசதி கொண்ட நோக்கியா 9.1 பியூர்வியூ ஸ்மார்ட்போன், மேம்பட்ட லோ-லைட் மற்றும் வீடியோ அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திற்கு பின் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Slashleaks
    ரியல்மி பிராண்டின் 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரியல்மியின் கேமரா இன்னோவேஷன் நிகழ்வில் 64 எம்.பி. கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியல்மி சீரிசில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    அந்த வகையில் ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ் ப்ரோ போன்ற மாடல்கள் புதிய வகை கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாட் கேமரா அமைப்பில் சூப்பர் வைடு ஆங்கில், அல்ட்ரா மேக்ரோ, டெலிபோட்டோ லென்ஸ், எக்ஸ்பர்ட் மோட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம்.

    ரியல்மி டீசர்

    ஏற்கனவே விற்பனையாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்களில் நைட் ஸ்கேப் மற்றும் குரோம் பூஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 64 எம்.பி. போனில் 1/72″ 0.8-மைக்ரோமீட்டர் (μm) பிக்சல் 64எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படுகிறது.

    இதற்கென ரியல்மி பிராண்டு சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தது. இதுதவிர ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 64 எம்.பி. கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு எது சிறப்பாக இருக்கிறது என்பதையும் பதிவிட்டிருக்கிறது.

    ரியல்மி டீசர்

    இதன் 64 எம்.பி. பிக்சல் மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். சீரான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்கள் ஒன்றிணைக்கப்பட்டு புகைப்படங்கள் 64 எம்.பி. தரத்தில் வழங்கும்.

    இத்துடன் புதிய கேமரா சென்சாரில் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். மற்றும் அதிகபட்சம் 100 டெசிபல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி முன்னதாக 64 எம்.பி. கேமரா போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

    புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது.

    புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான நோட் ஸ்மார்ட்போன்களில் மிகவும் காம்பேக்ட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் இதுவரை வெளியானதில் பிரம்மாண்ட மாடலாக இருக்கிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் வழங்கப்படுகிறது. இதில் முன்பை விட பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டுள்ளது. இரு ஸ்மா்ட்போன்களின் மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 10

    கேலக்ஸி நோட் 10 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் FHD பிளஸ் 2280x1080 பிக்சல் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9825 7 என்.எம். பிராசஸர் 
    - அட்ரினோ 640 GPU / மாலி-G76 MP12 GPU
    - 8 ஜி.பி. ரேம்
    - 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
    - ஆண்ட்ராய்டு 9.0 பை 
    - சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS
    - 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 45° FoV, f/2.4
    - 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார் f/2.2
    - 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடுஆங்கில் லென்ஸ், f/2.2 
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம்
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
    - அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., என்.எஃப்.சி., யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

    கேலக்ஸி நோட் 10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3040x1440 பிக்சல் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9825 7 என்.எம். பிராசஸர் 
    - அட்ரினோ 640 GPU / மாலி-G76 MP12 GPU
    - 12 ஜி.பி. ரேம்
    - 256 / 512 ஜி.பி. மெமரி (UFS 3.0)
    - ஆண்ட்ராய்டு 9.0 பை 
    - சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS
    - 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 45° FoV, f/2.4
    - 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார் f/2.2
    - வி.ஜி.ஏ. டெப்த் விஷன் கேமரா
    - 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடுஆங்கில் லென்ஸ், f/2.2 
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம்
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
    - அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோட்இ / 5ஜி, வைபை, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., என்.எஃப்.சி., யு.எஸ்.பி. டைப்-சி
    - 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்

    இந்தியாவில் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 69,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஔரா பிளாக், ஔரா குளோ மற்றும் ஔரா வைட் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 79,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    சோனி நிறுவனத்தின் புதிய வாக்மேன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் வைஃபை, ப்ளூடூத் வசதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



    சோனி நிறுவனத்தின் வாக்மேன் சாதனங்கள் உலகம் முழுக்க பிரபலமானவையாக இருக்கின்றன. கடந்த மாதம் 40-வது ஆண்டு விழாவை கடந்த சோனி வாக்மேன் சாதனம் பல்வேறு வடிவங்களில், வெவ்வேறு அம்சங்களுடன் காலத்திற்கு ஏற்ப வெளியாகி பயனர்களை கவர்ந்திருக்கின்றன.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சோனி நிறுவனம் புதிய வாக்மேன் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    NW-A100 எனும் மாடல் நம்பர் கொண்ட புதிய சாதனம் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வலைத்தளத்தில் இருந்து லீக் ஆகியிருக்கிறது. புதிய டிஜிட்டல் மியூசிக் பிளேயர் பற்றி சிறிதளவு விவரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. அந்த வகையில், புதிய சோனி வாக்மேன் வைபை கனெக்டிவிட்டி (2.4/5.0GHz) கொண்டிருக்கும் என உறுதியாகியுள்ளது.

    சோனி வாக்மேன் - கோப்புப்படம்

    இத்துடன் ப்ளூடூத் 5.0 வசதி மூலம் வயர்லெஸ் மியூசிக் அனுபவத்தை பெற முடியும். என்.எஃப்.சி. கனெக்டிவிட்டி ஆப்ஷன் மூலம் வயர்லெஸ் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. புதிய வாக்மேன் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இதனால் இது எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    வைபை கனெக்டிவிட்டி இருப்பதால் புதிய வாக்மேன் கொண்டு கோபுஸ், டைடல், ஸ்பாடிஃபை போன்ற சேவைகளையும் பயன்படுத்த முடியும். சோனி வாக்மேன் சாதனம் பிளேபேக் DSD, WAV மற்றும் FLAC ஃபைல்களை இயக்கும் வசதியை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய வாக்மேன் சாதனத்தை சோனி நிறுவனம் பெர்லின் நகரில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்நிகழ்வு செப்டம்பர் 6 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அது வேற லெவல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என சியோமி நிறுவன பொது மேலாளர் தெரிவித்தார்.



    ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் போட்டி நிறுவன மாடல்களை விட சக்திவாய்ந்ததாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் பற்றிய புதிய விவரம் ரெட்மி பிராண்டு தலைவர் லு வெய்பிங் வழங்கியிருக்கிறார்.

    புதிய ஸ்மார்ட்போன் தகவலை லு வெய்பிங் தனது வெய்போவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக தெரிவித்தார். இதுதவிர M1906GT எனும் மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீன வலைத்தளத்தில் லீக் ஆனது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா அல்லது மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    வெய்போவில் கேட்கப்பட்ட கேள்விக்கு லு வெய்பிங் அளித்த பதிலில், ரெட்மி நோட் 8 உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அது சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் என்று தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் வழங்கப்படலாம்.

    ரெட்மி போன் - கோப்புப்படம்

    ஏற்கனவே மீடியாடெக் பிராசஸர் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக சியோமி தெரிவித்தது. இது 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட முதல் ரெட்மி ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் டீசரையும் சியோமி வெளியிட்டிருந்தது.

    இவைதவிர M1906GT எனும் மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் சீனாவில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வலைத்தளத்தில் லீக் ஆகியிருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இது ரெட்மி கேமிங் ஸமார்ட்போன் என்றும் இதில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் 64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ரெட்மி மற்றும் ரியல்மி பிராண்டுகள் ஏற்னகவே 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்நிலையில், இரு நிறுவனங்களை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    64 எம்.பி. கேமரா கொண்ட கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 64 எம்.பி. கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் ISOCELL பிரைட் GW1 - 64 எம்.பி. கேமரா சென்சாரை மே மாதத்தில் அறிமுகம் செய்தது. எனினும், எந்த ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

    கேமரா சென்சார்

    பிரபல வல்லுநரான ஐஸ் யூனிவர்ஸ் புதிய 64 எம்.பி. சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனை சாம்சங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார். முன்னதாக 64 எம்.பி. சாம்சங் ஸ்மார்ட்போன் சற்று தாமதமாக அறிமுகமாகும் என்றே கூறப்பட்டது.

    எனினும், ரியல்மி மற்றும் ரெட்மி போன்ற பிராண்டுகள் இந்த அம்சத்தை வழங்க இருப்பதால் சாம்சங் தனது திட்டத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதுவரை சாம்சங் உள்பட மூன்று நிறுவனங்கள் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கின்றன.

    இதில் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி ஏ70 எஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. கேமரா கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்பட்டது. இது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் அதே அம்சங்களுடன் கேமரா மட்டும் மாற்றப்பட்டிருக்கும் என கூறப்பட்டது.
    விவோ நிறுவனம் புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    விவோ நிறுவனம் விரைவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் விவோ 1918 மற்றும் விவோ 1916 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களும் கீக்பென்ச் வலைத்தளத்தில் வெளியாகின.

    இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றான விவோ 1916 மாடல் விவோ 1916ஏ வேரியண்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே 3சி வலைத்தளத்தில் லீக் ஆனது. கீக்பென்ச் தளத்தின் படி இரு ஸ்மார்ட்போன்களும் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    விவோ 1916 - கீக்பென்ச் படிவம்

    இத்துடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்துடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுதவிர விவோ 1916 ஸ்மார்ட்போன் ட்ரின்க்லெட் சிப்செட் அதாவது ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் மற்றும் 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1,512 மற்றும் 5,278 புள்ளிகளை சிங்கிள் கோர் மற்றும் மல்டி-கோர் பாயின்ட்களை பெற்றிருக்கின்றன.

    இரண்டாவது மாடலான விவோ 1918 ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 1933 மற்றும் 6046 புள்ளிகளை சிங்கிள் மற்றும் மல்டி-கோர் பாயின்ட்களை பெற்றிருக்கிறது.

    விவோ 1918 - கீக்பென்ச் படிவம்

    புதிய மாடல்கள் தவிர விவோ தனது எஸ்1 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் AMOLED 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் பி65 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் மாலி-G72 MP3 GPU மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 9 வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் வைபை, ஜி.பி.எஸ்., ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. ஒ.டி.ஜி. வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    ×