search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விவோ போன் - கோப்புப்படம்
    X
    விவோ போன் - கோப்புப்படம்

    புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் விவோ

    விவோ நிறுவனம் புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    விவோ நிறுவனம் விரைவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் விவோ 1918 மற்றும் விவோ 1916 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களும் கீக்பென்ச் வலைத்தளத்தில் வெளியாகின.

    இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றான விவோ 1916 மாடல் விவோ 1916ஏ வேரியண்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே 3சி வலைத்தளத்தில் லீக் ஆனது. கீக்பென்ச் தளத்தின் படி இரு ஸ்மார்ட்போன்களும் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    விவோ 1916 - கீக்பென்ச் படிவம்

    இத்துடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்துடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுதவிர விவோ 1916 ஸ்மார்ட்போன் ட்ரின்க்லெட் சிப்செட் அதாவது ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் மற்றும் 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1,512 மற்றும் 5,278 புள்ளிகளை சிங்கிள் கோர் மற்றும் மல்டி-கோர் பாயின்ட்களை பெற்றிருக்கின்றன.

    இரண்டாவது மாடலான விவோ 1918 ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 1933 மற்றும் 6046 புள்ளிகளை சிங்கிள் மற்றும் மல்டி-கோர் பாயின்ட்களை பெற்றிருக்கிறது.

    விவோ 1918 - கீக்பென்ச் படிவம்

    புதிய மாடல்கள் தவிர விவோ தனது எஸ்1 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் AMOLED 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் பி65 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் மாலி-G72 MP3 GPU மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 9 வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் வைபை, ஜி.பி.எஸ்., ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. ஒ.டி.ஜி. வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    Next Story
    ×