என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக 10.2 இன்ச் அளவில் ஐபேட் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீப காலங்களில் தகவல்கள் வெளியாகின. புதிய ஐபேட் அந்நிறுவனத்தின் 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
புதிய 10.2 இன்ச் ஐபேட் மாடல் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன்களுடன் புதிய ஐபேட் மாடலும் அரிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் இந்நிகழ்வில் ஐபோன் 11 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை 10.2 இன்ச் ஐபேட் முந்தைய மாடலை விட பெரியதாகவும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் சார்ந்த விவரங்களை பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டிருந்தார். பின் இதுபற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகின.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான விவரங்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினி 5 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி மாடலை அறிமுகம் செய்தது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது.
லண்டனை சேர்ந்த ஆய்வாளரான ஜெஃப் லின் இத்தகவலை வழங்கியிருந்தார். இவர் சர்வதேச அளவில் தகவல் வழங்கும் ஐ.ஹெச்.எஸ். மார்கிட் நிறுவனத்தில் ஆய்வாளராக இருக்கிறார். புதிய சாதனத்தில் மேக்புக் அளவிலான ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புகைப்படம் நன்றி: LetsGoDigital
ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை ரியல்மி பிராண்டு இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி கேமரா இன்னோவேஷன் ஈவென்ட் நடைபெற இருப்பதாக ரியல்மி அறிவித்துள்ளது. இந்நிகழ்வில் ரியல்மி பிராண்டு 64 ம்.பி. குவாட் கேமரா சென்சார்கள் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் 64 எம்.பி. GW1 1/1.72″ சென்சார் மற்றும் 1.6µm பிக்சல் வழங்கப்படுகிறது.

இதன் 64 எம்.பி. பிக்சல் மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். சீரான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்கள் ஒன்றிணைக்கப்பட்டு புகைப்படங்கள் 64 எம்.பி. தரத்தில் வழங்கும்.
இத்துடன் புதிய கேமரா சென்சாரில் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். மற்றும் அதிகபட்சம் 100 டெசிபல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி முன்னதாக 64 எம்.பி. கேமரா போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுண்ட் ஒன் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மைக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஹாங் காங்கை சேர்ந்த சவுண்ட் ஒன் நிறுவனம் இந்தியாவில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் சவுண்ட் ஒன் எக்ஸ்6 என அழைக்கப்படுகிறது. புதிய ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் விலை ரூ. 7,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், விற்பனையை அதிகரிக்க இது ரூ. 2,750 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக புதிய இயர்பட்ஸ் வாங்குவோருக்கு ரூ. 4,240 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சவுண்ட் ஒன் எக்ஸ்6 இயர்பட்ஸ் பயனர் காதுகளில் இருந்து எளிதில் கழன்று விழாத வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மூலம் இயங்குவதால், புதிய இயர்பட்ஸ் சாதனத்தில் வையர்கள் இல்லை. இதனை சக்தியூட்ட 2000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

இதில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் பாடல்களை கேட்கும் போதும் அழைப்புகளை ஏற்க முடியும். பெரும்பாலான வயர்லெஸ் இயர்பட்ஸ்களில் பில்ட்-இன் மைக் வசதி வழங்கப்படுவதில்லை. இதனால் பயனர்கள் தங்களது மொபைலை கையில் பிடித்துக் கொண்டே பேச வேண்டும்.
அழைப்புகள் தவிர டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையையும் புதிய இயர்பட்ஸ் கொண்டு பயன்படுத்தலாம். நவீன வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்று சவுண்ட் ஒன் எக்ஸ்6 மாடலும் ஒன்றை ஒன்று தானாக இணைந்து கொள்ளும். சார்ஜிங் கேசில் இருந்து இயர்பட்ஸ்களை எடுத்தவுடனேயே இவை இணைந்து கொள்ளும்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை சவுண்ட் ஒன் எக்ஸ்6 மாடல் மூன்று மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இயர்பட்ஸ் சாதனத்தில் சார்ஜ் தீர்ந்து போகும் பட்சத்தில் சார்ஜிங் கேஸ் கொண்டு ஐந்து முறை வரை சார்ஜ் செய்து கொள்ளலாம். சார்ஜிங் கேஸ் சாதனத்தை சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும்.
சியோமி நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி90டி மற்றும் ஜி90 பிராசஸர்கள் அறிவிக்கப்பட்டதும், சியோமியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் புதிய ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்படும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. சியோமி துணை தலைவரும் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் புதிய ஸ்மார்ட்போன் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டனர்.

இந்திய கேமிங் துறையில் சுமார் 2.2 கோடி கேமர்கள் இருக்கின்றனர். சியோமி வெளியிட்ட தகவல்களில் பிளேயர்கள் தினமும் 42 நிமிடங்கள் கேமிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கேமிங் துறை 100 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறது.
மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் ஆக்டா-கோர் சி.பி.யு. கொண்டிருக்கிறது. இது ARM கார்டெக்ஸ்-A76 மற்றும் கார்டெக்ஸ்-A55 பவர் கோர்களை பயன்படுத்துகிறது. இத்துடன் 800 மெகாஹெர்ட்ஸ் மாலி G76 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. 10 ஜி.பி. LPDDR4 ரேம் வசதி கொண்ட முதல் மீடியாடெக் சிப்செட் ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன்களில் 5ஜி வசதி வழங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஐபோன் மாடல்கள் பற்றி ஏற்கனவே தகவல் வெளியாக துவங்கிவிட்டன. அந்த வகையில் 2020 ஐபோன்களில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, OLED பேனல் வழங்கப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2020 ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் 2020 ஆண்டில் வெளியாகும் அனைத்து ஐபோன்களிலும் 5ஜி வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இன்டெல் 5ஜி மொபைல் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றி இருப்பதே இத்தகவல் வெளியான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர 2020 ஐபோன்களில் 5ஜி வழங்குவதன் மூலம் ஆப்பிள் தனது ஏ.ஆர். சேவைகளில் இருந்து பலன்பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. 5ஜி நெட்வொர்க்களில், எம்.எம். வேவ் தொழில்நுட்பம் அதிவேக இணைய வசதியை வழங்கும். 2020 ஐபோன்களில் எம்.எம். வேவ் மற்றும் சப்-6ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக 2019 ஐபோன் மாடல்கள் என கூறும் பல்வேறு ரென்டர்கள் இணையத்தில் வெளியானது. புதிய ஐபோன்கள் செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கிறது. 2019 ஐபோன்களின் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்ற வகையில், புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் மொத்தம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஐபோன் XR மாடலின் 2019 வெர்ஷனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 2019 ஐபோன்களில் கேமரா அம்சம் அதிகளவு மாற்றங்களை பெற இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை மிக தெளிவாக படம்பிடிக்க அல்ட்ரா-வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஐபோன் XR மாடலின் மேம்பட்ட மாடலில் கூடுதல் சென்சார் சூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹூவாய் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது.
ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 2340x1080 பிக்சல் 19.5:9 பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, கிரின் 810 பிராசஸர், 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க நான்கு பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்க 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த EMUI 9.1 இயங்குதளம் கொண்டிருக்கும் ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., 4ஜி வோல்ட்இ, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 2340x1080 பிக்சல் 19.5:9 பன்ச் ஹோல் டிஸ்ப்ளே
- கிரின் 810 பிராசஸர்
- 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
- 8 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த EMUI 9.1
- வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., 4ஜி வோல்ட்இ
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 2,199 (இந்திய மதிப்பில் ரூ. 22,000) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் RMB 2,499 (இந்திய மதிப்பில் ரூ. 25,000) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் RMB 2,799 (இந்திய மதிப்பில் ரூ. 28,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்றும் இதன் முக்கிய சிறப்பம்சங்களும் இணையத்தில் வெளியாகிவிட்டன.
தற்சமயம் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் புகைப்படங்கள் புதிய நிறத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் எஸ் பென் சாதனத்துடன் ஔரா குளோ நிற வேரியண்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புதிய நோட் சீரிஸ் புளு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் QHD+ ரெசல்யூஷன் கொண்ட 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் QHD+ 6.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், இந்தியாவில் இந்த மாடலில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படலாம்.

இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களும் 8 ஜிபி. ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
புதிய எஸ் பென் ஏர் ஆக்ஷன் ஜெஸ்ட்யூர் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதை கொண்டு டிஸ்ப்ளேவை தொடாமலேயே சில அம்சங்களை இயக்க முடியும். கேலக்ஸி நோட் 10 சாதனங்களில் மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் கூடுதலாக ToF சென்சார் வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: IshanAgarwal24
டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பப்ஜி புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இனி எல்லோரும் பப்ஜி விளையாட முடியும்.
டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பப்ஜி மொபைல் லைட் கேமினை வெளியிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பப்ஜி மொபைல் லைட் கேம் பிலிப்பன்ஸ் நாட்டில் வெளியிடப்பட்டது. பின் பல்வேறு ஆசிய நாடுகளில் பப்ஜி மொபைல் லைட் வெளியான நிலையில், தற்சமயம் இது இந்தியாவிலும் வெளியாகி இருக்கிறது.
புதிய பப்ஜி மொபைல் லைட் வெர்ஷன் குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் இயங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வெர்ஷன் 400 எம்.பி. அளவில் கிடைக்கிறது. இது 2 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் சீராக இயங்குகிறது.
பப்ஜி மொபைல் லைட் கேமில் 60 பிளேயர்கள் மட்டும் விளையாடும்படி சிறிய மேப் கொண்டிருக்கிறது. இது கேமின் வேகத்தை சீறாக வைத்துக் கொள்ள உதவுகிறது. புதிய பிளேயர்களுக்கு பல்வேறு ரிவார்டுகள் புதிய கியர் மற்றும் வெஹிகில் வடிவில் வழங்கப்படுகின்றன.
பயனர்கள் பப்ஜி மொபைல் லைட் வெர்ஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் இணையத்தில் வெளியாகிவிட்டது. அந்த வகையில் கேலக்ஸி நோட் சீரிஸ் இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிகழ்வில் கேலக்ஸி நோட் 10, கேலக்ஸி நோட் 10 பிளஸ் மற்றும் நோட் 10 பிளஸ் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி வேரியண்ட் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
இதில் ஸ்மார்ட்போன் வெரிசான் பிராண்டிங் கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்கவில் கேலக்ஸி நோட் 10 பிளஸ் வெரிசான் 5ஜி நெட்வொர்க்கில் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. புதிய புகைப்படங்களின் படி கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது.

கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி வேரியண்ட் விலை 1300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 90,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம். முன்னதாக கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலின் பிரெஸ் ரென்டர்கள் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடலுடன் இணையத்தில் லீக் ஆனது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் 6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. UFS 3.0 மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன்களை அறிமுகம் செய்தது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் நோக்கியா 220 4ஜி மொபைல் போன் 2014 ஆம் ஆண்டு அறிமுகமான நோக்கியா 220 மாடலின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய நோக்கியா 105 நான்காவது முறையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 220 4ஜி மொபைலில் 2.4 இன்ச் QQVGA கலர் ஸ்கிரீன், பாலிகார்போனேட் பாடி, வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, ஃபேஸ்புக், ட்விட்டர், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ மற்றும் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 220 4ஜி சிறப்பம்சங்கள்:
- 2.4 இன்ச் QQVGA கலர் டிஸ்ப்ளே
- ஃபீச்சர் ஒ.எஸ்.
- 16 எம்.பி. ரேம்
- 24 எம்.பி. மெமரி
- வி.ஜி.ஏ. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ
- எம்.பி.3 பிளேயர்
- GSM/GPRS 900/1800 (EU); LTE1 Cat-1, 10Mbps DL / 5Mbps UL
- 4ஜி மற்றும் 2ஜி
- ப்ளூடூத் 4.2, மைக்ரோ யு.எஸ்.பி.
- 1200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா 105 மொபைல் போன் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 1.77 இன்ச் QQVGA கலர் ஸ்கிரீன், எல்.இ.டி. டார்ச் லைட்கள், இன்பில்ட் எஃப்.எம். ரேடியோ, யு.எஸ்.பி. கேபிள் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 105 (2019) சிறப்பம்சங்கள்:
- 1.77 இன்ச் 160x120 பிக்சல் QQVGA கலர் டிஸ்ப்ளே
- நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள்
- 4 எம்.பி. ரேம்
- 4 எம்.பி. ரோம்
- GSM 900/1800 (EU); 850/1900 (US)
- எஃப்.எம். பேடியோ
- டார்ச் லைட்
- சிங்கிள் / டூயல் சிம்
- மைக்ரோ யு.எஸ்.பி. 2.0
- 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா 220 4ஜி மாடல் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 39 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 3000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 105 (2019) மாடல் புளு, பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 13 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 999) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அசுஸ் நிறுவனம் தனது புதிய ரோக் போன் 2 மாடலின் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 2 சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ரோக் போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். கடந்த ஆண்டை போன்றே இம்முறையும் அசுஸ் தனது ஸ்மார்ட்போனில் அதிநவீன சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது.
அந்த வகையில் அசுஸ் ரோக் போன் 2 மாடலில் 6.59 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 640 GPU, 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. UFS 3.0 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

அசுஸ் ரோக் போன் 2 சிறப்பம்சங்கள்:
- 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 120 ஹெர்ட்ஸ் OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் 7 என்.எம். பிராசஸர்
- 675MHz அடிரினோ 640 GPU
- 12 ஜி.பி. LPDDR4x ரேம்
- 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ROG UI
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79
- 13 எம்.பி. 125° அல்ட்ரா-வைடு கேமரா
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா
- முன்புறம் டூயல் 5-மேக்னெட் ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- டி.டி.எஸ். ஹெட்போன்:X7.1 விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி,
- 10வோல்ட் 3ஏ 30வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய அசுஸ் ரோக் போன் 2 கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக் ஷார்க் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
பிளாக் ஷார்க் நிறுவனம் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டது. தற்சமயம் பிளாக் ஷார்க் நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.
அந்த வகையில் பிளாக் ஷார்க் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என பிளாக் ஷார்க் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எனும் புதிய பிராசஸரை அறிமுகம் செய்தது. இது முந்தைய ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரின் மேம்பட்ட மாடலாகும். இந்த பிராசஸர் சிறப்பான 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என குவால்காம் தெரிவித்துள்ளது.
இத்துடன் முந்தைய பிராசஸரை விட ஏ.ஐ. கம்ப்யூட்டிங் மற்றும் சிறப்பான மொபைல் கேமிங் அனுபவத்தை இந்த பிராசஸர் வழங்கும். பிராசஸரின் உள்புறத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 2.84 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் வழங்கும் க்ரியோ 485 சி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் 2.96 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் வழங்கும் க்ரியோ 485 சி.பி.யு. கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய பிராசஸரில் அட்ரினோ 640 ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரை விட 15 சதவிகிதம் சிறப்பான செயல்திறன் வழங்கும்.
அந்த வகையில் பிளாக் ஷார்க் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என பிளாக் ஷார்க் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எனும் புதிய பிராசஸரை அறிமுகம் செய்தது. இது முந்தைய ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரின் மேம்பட்ட மாடலாகும். இந்த பிராசஸர் சிறப்பான 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என குவால்காம் தெரிவித்துள்ளது.
இத்துடன் முந்தைய பிராசஸரை விட ஏ.ஐ. கம்ப்யூட்டிங் மற்றும் சிறப்பான மொபைல் கேமிங் அனுபவத்தை இந்த பிராசஸர் வழங்கும். பிராசஸரின் உள்புறத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 2.84 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் வழங்கும் க்ரியோ 485 சி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் 2.96 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் வழங்கும் க்ரியோ 485 சி.பி.யு. கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய பிராசஸரில் அட்ரினோ 640 ஜி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரை விட 15 சதவிகிதம் சிறப்பான செயல்திறன் வழங்கும்.






