என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வழங்கியிருக்கிறது.
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் பாப்-அப் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஹுவாய் வை9 பிரைம் 2019 என்ற பெயரில் அறிமுகமாகி அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக ஹூவாய் நிறுவனம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்த ஹவாய் பி ஸ்மார்ட் இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வை9 பிரைம் 2019 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹூவாய் வை9 2019 மாடலில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமராவும், முன்புறம் டூயல் செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது.
இதில் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் பாப்-அப் கேமரா வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஹூவாய் வை9 பிரைம் 2019 மாடலின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய முழு விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.
ஒப்போ நிறுவனத்தின் புதிய கே சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் கே3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கே1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
புதிய ஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம்பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.0, 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
முன்புறம் 16 எம்.பி. ரைசிங் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 3D கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

ஒப்போ கே3 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.0
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, 6P லென்ஸ், PDAF, CAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 16 எம்.பி. ரைசிங் செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் நெபுளா பர்ப்பிள், கிரீன் மற்றும் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,990 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ கே3 விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 23 ஆம் தேதி துவங்குகிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டியு டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6 வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3D கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ9 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12 என்.எம். பிராசஸர்
- 900MHz ARM மாலி-G72 MP3 GPU
- 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் கலர் ஒ.எஸ். 6.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- 4020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் மிகா கிரீன், ஜேட் வைட் மற்றும் ஃபுளோரைட் பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ஏ9 விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஜூலை 20 ஆம் தேதி துவங்குகிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் ரூ. 4.8 லட்சம் மதிப்பு கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்ளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனையும் சியோமி அறிமுகம் செய்தது.
புதிய சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. லிமிட்டெட் எடிஷன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 20 யூனிட்களே உருவாக்கப்படுகின்றன. இதன் ஒரு யூனிட் மதிப்பு ரூ. 4,80,000 ஆகும்.
Introducing the signature edition #RedmiK20Pro, made of gold. Not gold plated, it's made of real gold and embellished with diamonds.
— Redmi India (@RedmiIndia) July 17, 2019
We will be making 20 limited units of this phone worth ₹4,80,000 each.#BelieveTheHype#FlagshipKillerpic.twitter.com/STJsNcub0W
தங்கத்தால் உருவாகி இருக்கும் சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் K எனும் எழுத்து வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் விற்பனை தேதியும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.
இதனுடன் அறிமுகமான ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வரயிருக்கின்றன.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா, ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3P லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஔரா பிரைம் 3D வளைந்த பேக் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. பின்புறம் புளு மற்றும் ரெட் சார்ந்த ஃபிளேம் பேட்டன் கொண்டிருக்கிறது. இதன் பிளாக் வெர்ஷன் பிரத்யேக கெவ்லர் கிரேடியன்ட் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், லேசர் AF, EIS
- 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
- 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 27 வாட் சோனிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளேம் ரெட், கிளேசியர் புளு மற்றும் கார்பன் ஃபைபர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 30,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஜூலை 22 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிஷனும் கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. / 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- டூயல் சிம்
- கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- VOOC 3.0 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் புளு மற்றும் போலார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜி.பி. ரேம் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பன ஜூலை 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது. இத்துடன் ஜூலை 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
ரியல்மி எக்ஸ் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வெர்ஷன்கள் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 19,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹோம் கிஃப்ட் பாக்ஸ் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 20,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் ஜூலை 25 ஆம் தேதி போலாந்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
புதிய புகைப்படங்களின் படி Mi ஏ3 ஸ்மார்ட்போன் பார்க்க Mi சிசி9 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் 6.08 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ரா ரெட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சியோமி Mi ஏ3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.08 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. LPDDR4 ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், டெப்த் சென்சார்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ரா ரெட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் புளு, கிரே மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
புதிய புகைப்படங்களின் படி Mi ஏ3 ஸ்மார்ட்போன் பார்க்க Mi சிசி9 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதில் 6.08 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ரா ரெட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சியோமி Mi ஏ3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.08 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. LPDDR4 ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், டெப்த் சென்சார்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ரா ரெட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் புளு, கிரே மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் தனது Mi ஏ3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் Mi ஏ3 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கும் அறிவிப்புகளில் புதிய ஸ்மார்ட்போனின் இரு கேமராக்களிலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறது.
Our hit Mi A series is coming back with a serious bang! #PhotosWithoutLimitspic.twitter.com/ak2MycQN2m
— Xiaomi #PhotosWithoutLimits (@Xiaomi) July 12, 2019
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பற்றி வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் இரண்டு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை பாம்பு_ஸ்பிரவுட் மற்றும் காஸ்மோஸ்_ஸ்பிரவுட் என்ற குறியீட்டு பெயர்களில் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
Amazing back cam meets incredible front cam. That means great shots...ALL the time! #PhotosWithoutLimitspic.twitter.com/JjT9laEH5e
— Xiaomi #PhotosWithoutLimits (@Xiaomi) July 12, 2019
சமீபத்தில் வெளியான விவரங்களில் M1906F9SH எனும் மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் FCC வலைத்தளத்தில் சான்று பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் Mi ஏ3 அல்லது ஏ3 லைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இதில் Mi சிசி9 மற்றும் சிசி9இ போன்ற கேமரா அமைப்பு மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட இருப்பது உறுதியானது.
சியோமி தனது Mi சிசி9 மற்றும் சிசி9இ ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் Mi ஏ3 மற்றும் ஏ3 லைட் ஸ்மார்ட்போன்களும் இதேபோன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
கடந்த ஆண்டு சியோமி தனது Mi ஏ2 மற்றும் ஏ2 லைட் ஸ்மார்ட்போன்களை ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்த நிலையில், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
கூகுள் நிறுவனம் மீண்டும் புதிதாக சமூக வலைத்தள சேவையை துவங்கியிருக்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் மீண்டும் சமூக வலைத்தள சேவை ஒன்றை புதிதாக துவங்கியுள்ளது. முன்னதாக கூகுள் பிளஸ் போன்று கூகுளின் சமூக வலைத்தள சேவைகள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்சமயம் ஷூலேஸ் என்ற பெயரில் புதிய சேவையை கூகுள் துவங்கி இருக்கிறது.
கூகுளின் சோதனை பிரிவான ஏரியா 120 உருவாக்கியிருக்கும் புதிய சமூக வலைத்தளம் முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. புதிய சேவையை கொண்டு பயனர்கள் ஒன்றிணைந்து ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்று வலைத்தளத்தில் பயனர்களை ஈர்க்காமல், அவர்களை மற்றவர்களுடன் நேரடியாக சந்திக்க வழி செய்கிறது. சேவையை பயன்படுத்துவோரிடம் செயலி முதற்கட்டமாக அவர்களது விருப்பங்களை கேட்டு அறிந்து கொள்கிறது. பின் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் நடவடிக்கைகளை பரிந்துரைத்து அவர்களை அதில் கலந்து கொள்ள வழி செய்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை ஷூலேஸ் 'லூப்ஸ்' என அழைக்கிறது. செயலியின் பரிந்துரைகள் மட்டுமின்றி பயனர்களும் சொந்தமாக நடவடிக்கைகளை உருவாக்கி, அதில் மற்றவர்களை கலந்து கொள்ள அழைக்க முடியும். அன்றாட வாழ்வில் புதிய மனிதர்களை சந்திக்க விரும்புவோருக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.
முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த சேவை அமெரிக்கா முழுக்க விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான கால அட்டவணை ஏதும் அறிவிக்கப்படவில்லை.
புவியியல் கட்டுப்பாடுகளுடன், ஷூலேஸ் செயலியை தற்சமயம் அழைப்பிதழின் பேரில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்கென செயலி தேர்வு செய்யப்பட்ட குழுக்களுடன் இணைந்துள்ளது. இதில் அழைப்பிதழை பெற கூகுள் படிவம் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஷூலேஸ் செயலியை பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். எனினும், டெஸ்ட் ஃபிளைட் முறையில் தான் இதனை மேற்கொள்ள முடியும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 10 ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இம்முறை ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது தெளிவாகி இருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனை பார்க்க ஹூவாய் பி30 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் உருவாகி வருவதும் உறுதியாகியிருக்கிறது.
முன்புறம் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் மேல்புறம் மற்றும் கீழ்புறங்களில் மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பன்ச் ஹோல் செல்ஃபி கேமராவும் காணப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் எஸ் பென் இம்முறை வட்ட வடிவம் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரென்டர்களிலும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் காணப்படாத நிலையில், ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் பிக்ஸ்பி மற்றும் பவர் பட்டன்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நான்கு பெரிய கேமராக்கள், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.
டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஃபேண்டம் 9 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டாட் நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஹை ஒ.எஸ். 5 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த பியூட்டி அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, மைக்ரோ யு.எஸ்.பி. வழங்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஃபேண்டம் 9 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஹை ஒ.எஸ். 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.85
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
- 2.5 செ.மீ. மேக்ரோ
- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.8
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
டெக்னோ ஃபேண்டம் 9 ஸ்மார்ட்போன் லேப்லேண்ட் அரோரா நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 17 ஆம் தேதி துவங்குகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் முதல் அதிகாரப்பூர்வ டீசரில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பற்றிய விவரங்கள் வெளியானது. அதன்படி ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க கேமரா மாட்யூல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் ஸ்மார்ட்போன் சதுரங்க கேமரா மாட்யூல், மூன்று பிரைமரி கேமரா யூனிட் கொண்டிருப்பதும், முன்புறம் இரட்டை செல்ஃபி கேமரா மற்றும் தடிமனான நாட்ச் கொண்டிருக்கிறது. பின்புறம் மூன்று கேமரா சென்சார்களுடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. மூன்று பிரைமரி கேமராக்களில் ஒன்று 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்படும் நிலையில், புதிய மாடலில் கிளாஸி ஃபினிஷ் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாஸ் மூலம் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ரென்டர்களிலும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது.
இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார் நீக்கப்பட்டுள்ளதால், புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போன்களில் நாட்ச் வடிவமைப்பிற்கு மாற்றாக தடிமனான நாட்ச் வழங்கும் என தெரிகிறது.
நாட்ச் பகுதயில் இரட்டை செல்ஃபி கேமராக்கள், இயர்பீஸ் மற்றும் சென்சார்களை வழங்குகிறது. மேல்புறத்தை போன்று ஸ்மார்ட்போன் கீழ் பகுதியிலும் தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Onleaks






