search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஷூலேஸ்
    X
    ஷூலேஸ்

    கூகுளின் புதிய சமூக வலைத்தளம் ஷூலேஸ்

    கூகுள் நிறுவனம் மீண்டும் புதிதாக சமூக வலைத்தள சேவையை துவங்கியிருக்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.



    கூகுள் நிறுவனம் மீண்டும் சமூக வலைத்தள சேவை ஒன்றை புதிதாக துவங்கியுள்ளது. முன்னதாக கூகுள் பிளஸ் போன்று கூகுளின் சமூக வலைத்தள சேவைகள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்சமயம் ஷூலேஸ் என்ற பெயரில் புதிய சேவையை கூகுள் துவங்கி இருக்கிறது.

    கூகுளின் சோதனை பிரிவான ஏரியா 120 உருவாக்கியிருக்கும் புதிய சமூக வலைத்தளம் முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. புதிய சேவையை கொண்டு பயனர்கள் ஒன்றிணைந்து ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். 

    இது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்று வலைத்தளத்தில் பயனர்களை ஈர்க்காமல், அவர்களை மற்றவர்களுடன் நேரடியாக சந்திக்க வழி செய்கிறது. சேவையை பயன்படுத்துவோரிடம் செயலி முதற்கட்டமாக அவர்களது விருப்பங்களை கேட்டு அறிந்து கொள்கிறது. பின் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் நடவடிக்கைகளை பரிந்துரைத்து அவர்களை அதில் கலந்து கொள்ள வழி செய்கிறது.

    ஷூலேஸ்

    இதுபோன்ற நடவடிக்கைகளை ஷூலேஸ் 'லூப்ஸ்' என அழைக்கிறது. செயலியின் பரிந்துரைகள் மட்டுமின்றி பயனர்களும் சொந்தமாக நடவடிக்கைகளை உருவாக்கி, அதில் மற்றவர்களை கலந்து கொள்ள அழைக்க முடியும். அன்றாட வாழ்வில் புதிய மனிதர்களை சந்திக்க விரும்புவோருக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.

    முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த சேவை அமெரிக்கா முழுக்க விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான கால அட்டவணை ஏதும் அறிவிக்கப்படவில்லை. 

    புவியியல் கட்டுப்பாடுகளுடன், ஷூலேஸ் செயலியை தற்சமயம் அழைப்பிதழின் பேரில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்கென செயலி தேர்வு செய்யப்பட்ட குழுக்களுடன் இணைந்துள்ளது. இதில் அழைப்பிதழை பெற கூகுள் படிவம் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

    ஷூலேஸ் செயலியை பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். எனினும், டெஸ்ட் ஃபிளைட் முறையில் தான் இதனை மேற்கொள்ள முடியும். 
    Next Story
    ×