search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன்
    X
    ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன்

    ரூ. 4.8 லட்சம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    சியோமி நிறுவனம் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் ரூ. 4.8 லட்சம் மதிப்பு கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்ளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனையும் சியோமி அறிமுகம் செய்தது.

    புதிய சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. லிமிட்டெட் எடிஷன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 20 யூனிட்களே உருவாக்கப்படுகின்றன. இதன் ஒரு யூனிட் மதிப்பு ரூ. 4,80,000 ஆகும்.



    தங்கத்தால் உருவாகி இருக்கும் சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் K எனும் எழுத்து வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் விற்பனை தேதியும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.

    இதனுடன் அறிமுகமான ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வரயிருக்கின்றன.
    Next Story
    ×