என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரியல்மி நிறுவனத்தின் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    ரியல்மி பிராண்டின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இது பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மியின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் என்ட்ரி-லெவல் அல்லது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    அதன்படி ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 3 லைட் என்ற பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுவரை புதிய ரியல்மி 3 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், இதன் விலை இந்தியாவில் ரியல்மி 3 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போவதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருந்தார்.



    அந்த வகையில் ரியல்மி 3 லைட் ஸ்மார்ட்போன் 64 எம்.பி. கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி ரியல்மி தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    பெசல் லெஸ் டிஸ்ப்ளே, பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மியின் முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி எக்ஸ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இதில் 6.53 இன்ச் OLED FHD பிளஸ் ரெசல்யூஷன் டிஸ்ப்ளஏ மற்றும் 2.5D வளைந்த டெம்பர்டு கிளாஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டூயல் பிரைமரி கேமரா: 48 எம்.பி. + 5 எம்.பி. சென்சார்களும், முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது. இது 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் யு.எஸ்.பி. டைப்-சி வசதி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் ரோக் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.



    அசுஸ் நிறுவனத்தின் ரோக் 2 கேமிங் ஸ்மார்ட்போன் ஜூலை 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் ரோக் போன் 2 மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்குவதை அசுஸ் உறுதி செய்திருந்தது. இது ஸ்மார்ட்போனின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும்.

    புதிய ரோக் போன் 2 ஸ்மார்ட்போன் நுபியா ரெட் மேஜிக் 3 மற்றும் பிளாக் ஷார்க் 2 போன்ற கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைகிறது. ரோக் போன் 2 ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் என அசுஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகும் ரோக் போன் 2 மற்ற சந்தைகளில் வெளியாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    அசுஸ் ரோக் போன் 2 - கோப்புப்படம்

    புதிய ஸ்மார்ட்போனில் பிரத்யேக கேமிங் அனுபவங்களை வழங்க அசுஸ் நிறுவனம் டென்சென்ட் உடன் இணைந்திருக்கிறது. ரோக் போன் 2 இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் இதன் துவக்க விலை CNY 4,399 (இந்திய மதிப்பில் ரூ. 44,400) முதல் துவங்கும் என கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்குவதை மட்டும் அசுஸ் உறுதி செய்திருக்கிறது. 
    ரெட்மி K20 ப்ரோ மற்றும் ரெட்ரமி கே20 ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் ரெட்மி K20 ப்ரோ மற்றும் ரெட்மி K20 ஸ்மார்ட்போன்கள் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இதனை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதே நாளில் சியோமி தனது Mi பாப் 2019 நிகழ்வினை நடத்த இருக்கிறது. இந்நிகழ்வு இந்தியாவில் சியோமியின் ஐந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

    அறிமுக தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் இந்திய விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இவற்றின் விலை சீன சந்தையில் நிர்ணயிக்கப்பட்டதை போன்றே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.



    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 124.8 டிகிரி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, சஃபையர் லென்ஸ் கவர் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஏழாம் தலைமுறை ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3P லென்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் கைரேகை இயங்கும் பகுதி 15 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3D வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

    சீனாவில் ரெட்மி K20 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை CNY 2,499 ( இந்திய மதிப்பில் ரூ. 24,900) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.26,220) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,230) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,245) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு பட்ஜெட் பிரிவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.

    ரெட்மி 7ஏ

    சியோமி ரெட்மி 7ஏ சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மேட் புளு, மேட் கோல்டு மற்றும் மேட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. மாடல் விலை ரூ. 5999 என்றும், 3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 6,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஜூலை வரை ரெட்மி 7ஏ விலை முறையே ரூ. 5,799 மற்றும் ரூ. 5,999 விலையில் கிடைக்கும். இதன் விற்பனை ஜூலை 11 ஆம் தேதி Mi ஹோம் ஸ்டோர், Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்ளில் கிடைக்கிறது. 
    விவோ நிறுவன்ம இந்தியாவில் தனது புதிய இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனினை 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமராவுடன் அறிமுகம் செய்துள்ளது.



    விவோ நிறுவனத்தின் புதிய இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ்., 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமராசென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 4D கேமிங் அனுபவம் வழங்கப்படுகிறது.

    இது கேமின் போக்கிற்கு ஏற்ப ஸ்மார்ட்போனை வைப்ரேட் செய்யும். பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியண்ட் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    விவோ இசட் 1 ப்ரோ

    விவோ இசட் 1 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 எல்.சி.டி. ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 10 என்.எமம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி (UFS 2.1)
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 2.1)
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78, சோனி IMX499 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. 120° வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
    - 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் சோனிக் புளு, சோனிக் பிளாக் மற்றும் மிரர் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,990 என்றும் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விற்பனை தேதி மற்றும் அறிமுக சலுகை

    இந்தியாவில் விவோ இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் வி்ற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஜூலை 11 ஆம் தேதி துவங்குகிறது. புதிய ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 750 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் 2019 கேலக்ஸி அன்பேக்டு விழா ஆகஸ்டு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெறும் என அறிவித்துள்ளது. இவ்விழாவில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக தேதியை புதிய டீசர் மூலம் சாம்சங் தெரிவித்துள்ளது. 

    அதிகாரப்பூர்வ டீசரில் எஸ் பென், கேமராவினை வரையும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா, திரையின் நடுவே வழங்கப்படுவதை உணர்த்துகிறது. கேலக்ஸி பிரிவு சாதனங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது. இதனால் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பல்வேறு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்: 6.25 இன்ச் ஸ்கிரீன், 6.75 இன்ச் ஸ்கிரீன் கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் மற்றும் பெரிய திரை கொண்ட கேலக்ஸி நோட் 10 5ஜி வேரியண்ட் என மூன்று வெர்ஷன்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 10 டீசர்

    சமீபத்தில் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது. இதில் புதிய ஸ்மார்ட்போன் மெல்லிய பெசல்கள் மற்றும் பன்ச் ஹோல் ஸ்கிரீன் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 8 என்.எம். எக்சைனோஸ் 9820 அல்லது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், நோட் 10 மாடலில் மூன்று பிரைமரி கேமரா சென்சார், நோட் 10 பிளஸ் மாடலில் நான்கு கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் கேமராக்களில் வேரியபிள் அப்ரேச்சர் (F1.5/F1.8/F2.4) வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு, கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் மட்டும் மெமரி கார்டு ஸ்லாட் வழங்கப்படலாம். நோட் 10 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், நோட் 10 பிளஸ் மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இயர்போனான ஜெப் சிம்பொனி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்போன் மாடலாக ஜெப் சிம்பொனி இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இயர்போனில் வயர்லெஸ் நெக் பேண்ட், காதுக்கு-உள்ளே கச்சிதமாக பொருத்தும் இயர்போன்களுடன் வருகிறது. மேலும் இதில் மிகச்சிறந்த ஒலிப் பெருக்கத்துடன், சுற்றுப்புற இரைச்சலையும் குறைக்கும் வசதியை கொண்டிருக்கிறது.

    புதிய இயர்போனின் மற்றொரு அம்சம் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகும். ஜெப்-சிம்பொனியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 13 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. புதிய இயர்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கொண்டிருக்கிறது. இந்த வயர்லெஸ் இயர்போன்கள், மிகச்சிறந்த நெகிழ்த்திறன் கொண்ட கட்டமைப்புடன், போதுமான ஆதரவை அளிக்கின்ற ஒரு நெக் பேண்ட் உடன் வருகிறது.

    இதன் நெக் பேண்ட் உருவாக்கப்பட்டிருக்கும் மூலப்பொருள் இலகுவான எடை கொண்டது, மேற்புறத்தில் மென்மையாகவும், ஸ்பிளாஷ் புரூஃப் வசதியும் கொண்டிருக்கிறது. ஜெப் சிம்பொனிநெக் பேண்ட்டில் மீடியா, ஒலி அளவுக்கான கட்டுப்பாடுத்த பட்டன்களும், கூகுள் மற்றும் சிரி சேவைகளை இயக்க குரல்வழி உதவியையும் கொண்டிருக்கிறது.

    ஜெப் சிம்பொனி

    பயனர்களுக்கு எளிமை மிக்க அனுபவத்தை வழங்குவதற்காக இந்த இயர்போன், சிக்கல் இல்லாத ஒரு அனுபவத்தை வழங்க வழிவகுக்கும் காந்த சக்தியுள்ள இயர்பட்களுடன் வருகிறது. மேலும் இதில், நெக்பேண்ட் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டதைக் குறிக்கும் ஒரு முழுமையான பேட்டரி இண்டிகேட்டர் உடன் வருகிறது. ஜெப் சிம்பொனி இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது.

    இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஜெப்ரானிக்ஸ் இயக்குனர் பிரதீப் தோஷி கூறுகையில், "இவை அனைத்தும் பயனாளர்கள் எதிர்நோக்கக் கூடிய ஒரு அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதைப் பற்றியது தான், அது, ஒரு தொந்தரவு-இல்லாத அனுபவத்துக்காக காந்தத் தன்மையுள்ள காது பட்டைகளை வழங்குவது, குரல்-வழி உதவிக்காக பொத்தானைக் கொண்டிருப்பது போன்ற சிறிய விஷயங்களாக இருந்தாலும், அவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிமை அனுபவத்தை அளித்து. அவர்களின் ஓய்வு நேரத்தை சரியான முறையில் அனுபவிக்க வைக்கின்றன.”
    நுபியா பிராண்டின் டூயல் ஸ்கிரீன் 5ஜி ஸ்மார்ட்போன் ஷாங்காயில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

     

    சர்வதேச சந்தையில் நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சந்தையில் வெளியாகி எட்டு மாதங்கள் கழித்து நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட்டிற்கு கத்தில் 5ஜி லோகோ இடம்பெற்றிருக்கிறது. 

    நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், பார்க்க நுபியா எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை நுபியா இன்னும் அறிவிக்கவில்லை. 

    நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

    எனினும், இதில் நுபியா எக்ஸ் 4ஜி வேரியண்ட்டில் வழங்கப்பட்ட பெரும்பான்மை அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் புதிய 5ஜி வேரியண்ட் விற்பனை விவரங்களும் வெளியாகவில்லை.

    முன்னதாக வெளியான நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் பின்புறம் 5.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் AMOLED இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 24 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன் பக்காவட்டில் இருபுறங்களிலும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காமின் குவிக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    ஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், ஏ.ஆர். கண்ணாடி மற்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.



    ஷாங்காய் நகரில் நடைபெறும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ தனது அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தது. 

    விவோவின் புதிய ஏ.ஆர். (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) கண்ணாடிகள், 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், ஜொவி 2.0 உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. 



    விவோ ஏ.ஆர். கண்ணாடிகள்

    விவோ தனது ஏ.ஆர். கண்ணாடிகளை முதலில் அறிமுகம் செய்தது. இதில் டூயல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, யுனிட்டி பிளஸ் 3DoF டெஸ்க்டாப் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு முப்பறிமான முறையில் சீன்களை உருவாக்கி அவற்றை பல்வேறு இன்டராக்டிவ் செயலிகளில் டிஸ்ப்ளே செய்யலாம். டூயல் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் இருப்பதால், டேட்டா கேபிளை ஐகூ 5ஜி ஸ்மார்ட்போனுடன் இணைத்து விட்டால், கண்ணாடிகள் தரவுகளை டிஸ்ப்ளே செய்யும். இதில் மொபைல் போன் செயலிகளை தேர்வு செய்யும் அங்கமாக செயல்படுகிறது.

    முதற்கட்டமாக ஏ.ஆர். ரெயிட் கேம், ஏ.ஆர். மொபைல் ஆஃபிஸ் சிஸ்டம், ஏ.ஆர். 5ஜி தியேட்டர் போன்று தேர்வு செய்யப்பட்ட பிரிவுகளில் கிடைக்கும் செயலிகளை மட்டும் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. விவோ ஏ.ஆர். கண்ணாடிகள் தரவுகளை ப்ரோஜெக்ட் செய்யும் போது 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டு செயலிகளை தேர்வு செய்யலாம்.



    ஐகூ 5ஜி ஸ்மார்ட்போன்

    விவோ நெக்ஸ் எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து விவோ தனது வர்த்தக ரீதியிலான முதல் 5ஜி ஸ்மார்ட்போனான ஐகூ 5ஜி இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. 5ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் சார்ந்து விவோ பல்வேறு 5ஜி செயலிகளை அறிமுகம் செய்தது. இவற்றில் 5ஜி கிளவுட் கேம், 5ஜி ஸ்கிரீன் மிரரிங் மற்றும் 5ஜி ஈசி ஷேர் உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.



    விவோ சூப்பர் ஃபிளாஷ்சார்ஜ் 120வாட்

    விவோ தனது சூப்பர் ஃபிளாஷ்சார்ஜ் 120 வாட் அல்ட்ரா-ஹை பவர் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் யு.எஸ்.பி. டைப்-சி டேட்டா கேபிள் மற்றும் டிராவல் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 0 முதல் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்களையும், முழுமையாக சார்ஜ் செய்ய 13 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.  

    பாதுகாப்பை பொருத்தவரை சூப்பர்பிளாஷ் 120 வாட் சார்ஜரில் இரண்டடுக்கு பாதுகாப்பு ஐ.சி. வழங்கப்பட்டுள்ளது. இது இருமடங்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது. இத்துடன் இது பி.எம்.எஸ். பவர் மீட்டர் சிப் பயன்படுத்தி பவர் டிடெக்‌ஷன் மற்றும் ப்ரோடெக்‌ஷனை நிர்வகிக்கிறது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.



    ஜொவி 2.0 ஏ.ஐ.

    விவோவின் ஜொவி 2.0 சேவையில் ஐ.ஒ.டி. (IoT) மூலம் இயங்கும் ஜொவி ஐ.ஒ.டி. செயலி, விவோ ஸ்மார்ட்போன்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஜொவி 2.0 ஏ.ஐ. சேவையில் மொத்தம் 18 நிறுவனங்கள், 23 பிரிவுகளில் சுமார் 430 சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
    ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமான நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.



    நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் மற்றும் நாய்ஸ் டியூன்டியோ என அழைக்கப்படும் இரு இயர்போன்களிலும் செக்யூர் ஃபிட், இயர்பட்களில் காந்த வசதி, கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி போன்ற சேவைகளுக்கு பிரத்யேக பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் இன்-இயர் வயர்லெஸ் இயர்போன் ஸ்போர்ட்ஸ்வியர் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது. 45 x 8 x 2 செ.மீ. அளவில் உருவாகி இருக்கும் இந்த இயர்போன் எடை 95.3 கிராம் ஆகும். இதில் ப்ளூடூத் 4.2, 10 எம்.எம். டிரைவர்கள், 5 மெகாவாட்ஸ் ஃபிரீக்வன்சியும், அதிகபட்சம் 20 முதல் 20000 ஹெர்ட்ஸ் வரையிலான ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் கொண்டிருக்கிறது.

    இத்துடன் விங்டிப்ஸ் எனும் அம்சமும், இயர்பட்களில் காந்த வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பில்ட்-இன் மைக்ரோபோனுடன் ஃபுல் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. இதை கொண்டு இசையை பிளே, பாஸ், வால்யூம் மற்றும் பல்வேறு வசதிகளை இயக்க முடியும். 80 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் 4 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.



    நாய்ஸ் டியூன்டியோ 45 x 8 x 2 செ.மீ. அளவில் 86.2 கிராம் எடை கொண்டிருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 4.2 வசதி கொண்டிருக்கிறது. எனினும், டியூன்டியோவில் இரண்டு ஸ்பீக்கர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரத்தை சிறப்பாக வழங்குகிறது. டியூன்ஸ்போர்ட் இயர்போனிலும் ஃபுல் ரிமோட் கண்ட்ரோல், பில்ட்-இன் மைக்ரோபோன் வசதி வழங்கப்படுகிறது.

    நாய்ஸ் டியூன்டியோவிலும் கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி சேவையை இயக்க பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4 மணி நேர பிளேபேக் வழங்கும் 80 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் விலை ரூ. 999 என்றும் நாய்ஸ் டியூன்டியோ விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
    விவோ நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    விவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா (MWC 2019) ஷாங்காய் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. ஜூன் 26 ஆம் தேதி துவங்கும் இவ்விழா ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் விவோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் விவோ அபெக்ஸ் 2019 கான்செப்ட் போனும் காட்சிக்கு வைக்கப்படுகிறது. 

    முன்னதாக ஜனவரி மாதத்தில் விவோ தனது அபெக்ஸ் 2019 கான்செப்ட் போனினை அறிமுகம் செய்தது. இந்நிலையில், அடுத்த வாரம் நடைபெறும் விழாவில் விவோ அபெக்ஸ் 2019 கான்செப்ட் போனின் உற்பத்தி செய்யப்பட்ட மாடலை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.



    விவோவின் அபெக்ஸ் 2019 வெறும் கான்செப்ட் போன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறலாம். விவோ அபெக்ஸ் 2019 கான்செப்ட் போன் நாட்ச், பன்ச் ஹோல் போன்ற வடிவமைப்புகள் இல்லாமல் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க பின்புறம் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை அபெக்ஸ் 2019 மாடலில் 5ஜி சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்கென குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 5ஜி மோடெம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 256 ஜி.பி. மெமரி, 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.



    விவோ கான்செப்ட் போன் தவிர விவோ 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் என விவோ தெரிவித்துள்ளது.

    4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்கள் போதும். இதே பேட்டரி 0 முதல் 2.38 சதிவிகிதத்திற்கு சார்ஜ் செய்ய வெறும் 14 நொடிகளே ஆகும். ஒப்போவின் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரியை 35 நிமிடங்களில் சார்ஜ் செய்கிறது.
    நான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் கேட் ரென்டர்கள் கடந்த மாதம் இணையத்தில் வெளியாகின. பின் மோட்டோரோலா ஒன் ப்ரோ ஸ்மார்ட்போனின் விளம்பர படங்கள் லீக் ஆகின. 

    இதில் மோட்டோரோலாவின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் சதுரங்க வடிவமைப்பில் நான்கு பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.6μm குவாட் பிக்சல் எனும் வார்த்தை இடம்பெற்றிருக்கிறது.

    இதனால் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் OIS வழங்கப்படுகிறது. இவை தவிர ஸ்மார்ட்போனின் இதர கேமரா விவரங்கள் அறியப்படவில்லை. புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் பிளாக், பிரவுன் மற்றும் புளு என மூன்று வித நிறங்களில் காட்சியளிக்கிறது. 



    முன்னதாக வெளியான விவரங்களில் இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும், ஸ்மார்ட்போனின் மேல்புறம் சிம் ஸ்லாட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    இதுதவிர, மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 2520x1080 பிக்சல் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9609 சிப்செட், 4 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம், நைட் விஷன் மோட் வழங்கப்படுகிறது. செல்ஃபி எடுக்க முன்புறம் 12.6 எம்.பி. இன்-ஸ்கிரீன் ரக கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: cashkaro
    ×