என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி K20 வெளியீட்டு அறிவிப்பு
    X
    ரெட்மி K20 வெளியீட்டு அறிவிப்பு

    ரெட்மி K20 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    ரெட்மி K20 ப்ரோ மற்றும் ரெட்ரமி கே20 ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் ரெட்மி K20 ப்ரோ மற்றும் ரெட்மி K20 ஸ்மார்ட்போன்கள் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இதனை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதே நாளில் சியோமி தனது Mi பாப் 2019 நிகழ்வினை நடத்த இருக்கிறது. இந்நிகழ்வு இந்தியாவில் சியோமியின் ஐந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

    அறிமுக தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் இந்திய விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இவற்றின் விலை சீன சந்தையில் நிர்ணயிக்கப்பட்டதை போன்றே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது.



    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 124.8 டிகிரி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, சஃபையர் லென்ஸ் கவர் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஏழாம் தலைமுறை ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3P லென்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் கைரேகை இயங்கும் பகுதி 15 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3D வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

    சீனாவில் ரெட்மி K20 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை CNY 2,499 ( இந்திய மதிப்பில் ரூ. 24,900) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.26,220) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,230) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,245) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×