என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அசுஸ் நிறுவனத்தின் 6இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ப்ளிப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    அசுஸ் நிறுவனத்தின் 6இசட் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.46 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச்-லெஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    புதிய அசுஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சென் யு.ஐ. 6, ஆண்ட்ராய்டு கியூ மற்றும் ஆர் அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போனில் மோட்டோரைஸ் செய்யப்பட்ட ப்ளிப் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், குவாட் பேயர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 13 எம்.பி. 125-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி கேமராக்களையே செல்ஃபி கேமராக்களாக பயன்படுத்த முடியும்.

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போனி்ல் பிரத்யேக ஸ்மார்ட் கீ வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறமும் 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டுயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்களும், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் க்விக் சார்ஜ் 4.0 வழங்கப்பட்டுள்ளது.



    அசுஸ் 6இசட் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நானோ எட்ஜ் IPS LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் சென் யு.ஐ. 6
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. ஃப்ளிப் கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, 1/2″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், லேசர் AF, EIS
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 125-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.4, 4K 60 fps வீடியோ வசதி
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0

    அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் டுவிலைட் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கி்றது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.31,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.34,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 26 ஆம் தேதி துவங்குகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் அசுஸ் 6இசட் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் புதிய அசுஸ் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ.3999 மதிப்புள்ள மொபைல் பாதுகாப்பு சேவையை ப்ளிப்கார்ட் ரூ.99 விலையில் வழங்குகிறது.
    நுபியா பிராண்டின் புதிய ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம்.



    நுபியா பிராண்டு இந்தியாவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

    இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் பிரத்யேக ஹார்டுவேர் ஸ்விட்ச்சை ஆன் செய்யும் போது ரெட் மேஜிக் கேம் ஸ்பேஸ் 2.0 எனும் பிரத்யேக டேஷ்போர்டு திறக்கும். இது கேமிங் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைத்து, கேம்களை மிக வேகமாக லான்ச் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமிங் சார்ந்து இருக்கும் பல்வேறு வசதிகளை மிக எளிமையாக இயக்கலாம்.



    புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் டச் சென்சிட்டிவ் ஷோல்டர் வழங்கப்பட்டிருப்பதால், கூடுதலாக கேம்பேட் அக்சஸரி இல்லாமல், கேம்களை விளையாட முடியும். பயனர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்த பட்டன்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் RGB லைட்டிங்கில் பல்வேறு எஃபெக்ட்களை சேர்த்து அதனையும் கஸ்டமைஸ் செய்யலாம்.

    புகைப்படங்களை எடுக்க ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 8K தரத்தில் வீடியோக்களை படமாக்கலாம். முன்புறம் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். எக்ஸ் மற்றும் 3டி சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 27 வாட் க்விக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    நுபியா ரெட் மேஜிக் 3 சிறப்பம்சங்கள்

    – 6.65 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
    – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    – அட்ரினோ 640 GPU
    – 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    – 12 ஜி.பி. LPDDR4x ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    – ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் ரெட்மேஜிக் ஒ.எஸ். 2.0
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.75, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    – 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    – கைரேகை சென்சார்
    – 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ்.:எக்ஸ்
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி
    – 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஃபிளேம் ரெட் வெர்ஷன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் கேமோஃபிளேஜ் வெர்ஷன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 46,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 27 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், முழு மொபைல் பாதுகாப்பு வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் கேம் கண்ட்ரோலர், இயர்போன்கள் மற்றும் சார்ஜிங் டாக் உள்ளிட்டவற்றின் விலை முறையே ரூ. 1,999, ரூ. 2,999 மற்றும் ரூ. 2,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது.



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் வெள்ளை நிறத்திலும் கிடைக்கிறது. முன்னதாக கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் லைட் புளு என மூன்று வித நிறங்களில் விற்பனை செய்யப்பட்டது.

    இந்தியாவில் கேலக்ஸி ஏ30 வெள்ளை நிற ஸ்மார்ட்போன் ரூ.15,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற நிறங்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி ஏ30 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர்
    - மாலி-G71 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    சியோமி நிறுவனத்தின் புதிய Mi 9டி ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டது.



    சியோமி நிறுவனம் Mi 9டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்த ரெட்மி K20 ஸ்மார்ட்போனின் ஐரோப்பிய வெர்ஷன் ஆகும்.

    புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Mi 9டி ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX582 பிரைமரி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 124.8° அல்ட்ரா-வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    புதிய சியோமி ஸ்மார்ட்போன் 3D வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் புளு மற்றும் ரெட் நிறத்தில் ஃபிளேம் பேட்டன் செய்யப்பட்டுள்ளது. இதன் பிளாக் வெர்ஷனில் பிரத்யேக கெவ்லர் கிரேடியன்ட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி Mi 9டி சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜி.பி. LPDDR4X  ரேம் 
    - 64 ஜிபி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. சோனி IMX582 பிரைமரி சென்சார், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ்
    - 8 எம்.பி. 1/4″ டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
    - 13 எம்.பி. 1/3″ 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், குவால்காம் WCD9375 Hi-Fi ஆடியோ சிப்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi 9டி ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், கிளேசியர் புளு மற்றும் ஃபிளேம் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 329 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.25,820) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 369 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.28,960) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.



    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஆல்-வியூ டிஸ்ப்ளே, கிரின் 980 பிராசஸர் மற்றும் டூயல் என்.பி.யு. மற்றும் ஜி.பி.யு. டர்போ 3.0 வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிராஃபீன் கூலிங் ஷீட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை 27 சதவிகிதம் வரை குறைக்கும்.

    ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், டிஸ்ப்ளேவில் இன்-ஸ்கிரீன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 48 எம்.பி. 1/2″ சோனி IMX586 சென்சார் பிரைமரி கேமரா, 4 இன் 1 லைட் ஃபியூஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் முதல்முறையாக f/1.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4-ஆக்சிஸ் OIS, EIS, PDAF, லேசர் ஆட்டோஃபோகஸ், 16 எம்.பி. 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஹானர் 20 ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    ஹானர் 20 ஸ்மார்ட்போனில் 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 22.5 வாட் ஹானர் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முப்பது நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிடும்.



    ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ ஆல்-வியூ டிஸ்ப்ளே, 412 PPI
    - ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
    - 720 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G76MP10 GPU
    - 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 ஸ்டோரேஜ் (ஹானர் 20)
    - 8 ஜி.பி. LPDDR4x ரேம், 256 ஜி.பி. UFS 2.1 ஸ்டோரேஜ் (ஹானர் 20 ப்ரோ)
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் மேஜிக் யு.ஐ. 2.1
    - டூயல் சிம்
    - ஹானர் 20 ப்ரோ: 48 எம்.பி. 1/2″ சோனி IMX586 சென்சார், f/1.4, 4-ஆக்சிஸ் OIS, EIS, PDAF, லேசர் ஆட்டோஃபோகஸ்
    - 16 எம்.பி. 117-அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
    - 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4,  4-ஆக்சிஸ் OIS
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - ஹானர் 20: 48 எம்.பி. 1/2″ சோனி IMX586 சென்சார், f/1.8, AIS
    - 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
    - 2 எம்.பி. கேமரா, f/2.4 மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்.பி. கேமரா, f/2.4 டெப்த் சென்சிங் சென்சார்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 3D போர்டிரெயிட் லைட்டிங்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, விர்ச்சுவல் 9.1 சரவுண்ட் சவுண்ட் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 எல்.இ., யு.எஸ்.பி. டைப்-சி
    - ஹானர் 20: 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஹானர் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - ஹானர் 20 ப்ரோ: 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஹானர் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹானர் 20 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 25 ஆம் தேதி முதல் துவங்குகிறது. ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விரைவில் துவங்கும்.
    டூயல் பிரைமரி கேமரா, டூயல் செல்ஃபி கேமரா மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலையில் இந்தியாவில் அறிமுகம்.



    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹாட் 7 ப்ரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.19 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் எக்ஸ் ஒ.எஸ். 5.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களும், 2 எம்.பி. இரண்டாவது கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. சார்ந்த அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.19 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18.75:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர் 
    - 650MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் எக்ஸ் ஒ.எஸ். 5.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12µm பிக்சல்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், f/2.0
    - 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஸ்டீரியோ வைடனிங்
    - எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் அக்வா புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது. ஜூன் 17 ஆம் தேதி விற்பனை துவங்கும் நிலையில், ஜூன் 21 ஆம் தேதி வரை அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட்போனினை ரூ.8,999 விலையில் வாங்கிட முடியும்.
    சியோமி நிறுவனம் தனது ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.



    சியோமியின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. சியோமியின் Mi மிக்ஸ் 3 5ஜி அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் மிக குறைந்த காலக்கட்டத்தில் பிரபலமான ரெட்மி மற்றும் ரியல்மி பிராண்டுகள் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளன. ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி சமீபத்தில் அறிவித்த நிலையில், ரெட்மி தனது 5ஜி ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளது.

    சியோமியின் செய்தி தொடர்பாளர் டொனோவன் சங் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். ரெட்மி 5ஜி போன் பற்றி அதிகளவு விவரங்களை அவர் வழங்கவில்லை. அந்த வகையில் ரெட்மி 5ஜி போனின் பெயர் அறியப்படவில்லை. ரியல்மி இந்தியாயின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி 5ஜி போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிவித்தார்.



    இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனினை மிக விரைவில் அறிமுகம் செய்ய முயற்சிப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

    இதனிடையே சியோமி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனான Mi மிக்ஸ் 3 5ஜி மாடலை இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. சிறப்பம்சங்களை பொருத்தவரை சியோமி Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ஸ்னார்டிராகன் X50 மோடெம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 6.39 இன்ச் FHD பிளஸ் 2340x1080 பிக்சல் சாம்சங் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. ஏ.ஐ. டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சோனியின் IMX586 சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் கேமரா சார்ந்து இயங்கும் பல்வேறு ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஒப்போவின் ரியல்மி பிராண்டு இந்த ஆண்டிற்குள் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுனங்கள் தங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அறிவித்திருக்கிறது.



    சர்வதேச சந்தையில் ரியல்மியின் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார். ரியல்மி நிறுவனர் ஸ்கை லீ உடனான சந்திப்புக்கு பின் மாதவ் இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். 

    ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போனின் சோதனையை துவங்கி இருக்கிறது. இதனை உறுதி செய்யும் வகையில் ரியல்மி நிறுவனர் மற்றும் இந்திய தலைமை செயல் அதிகாரி என இருவரும் கையில் போனினை வைத்திருக்கும் புகைப்படம் இருக்கிறது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை மிக விரைவில் அறிமுகம் செய்ய முயற்சிப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.



    இதுதவிர ரியல்மி விரைவில் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ரியல்மி X ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வடிவமைப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ரியல்மியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய புதிய விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என தெரிகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.2 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    புதிய நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்டகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். மோட், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 2.2 சிறப்பம்சங்கள்

    - 5.71 இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டி.எஃப்.டி. எல்.சி.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை)
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 1.12um பிக்சல்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12um பிக்சல்
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் ஸ்டீல் மற்றும் டங்ஸ்டன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.6,999 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சயம் அறிவிக்கப்பட்டு இருப்பது சிறப்பு விலை என்றும் ஜூன் 30 ஆம் தேதிக்கு பின் இதன் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் துவங்குகிறது. இதன் விற்பனை நோக்கியா வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் வணிகர்களிடம் ஜூன் 11 ஆம் தேதி முதல் துவங்குகிறது. 
    எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதற்கான டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது.



    எல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை புதிய டீசர்கள் மூலம் உறுதி செய்துள்ளது. எல்.ஜி.யின் புதிய ஸ்மார்ட்போன்கள் டபுள்யூ என்ற சீரிசில் அறிமுகமாக இருக்கிறது. எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.



    அமேசான் வலைதளத்தில் எல்.ஜி.யின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் அமேசான் ஸ்பெஷல்ஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. டீசரில் “W FOR THE WIN, Coming Soon” எனும் வாசகம் மற்றும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரமும் இடம்பெற்றுள்ளது.

    அந்த வகையில் எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதன் டிஸ்ப்ளேவில் நாட்ச்களை பயனர் விருப்பப்படி கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் பல்வேறு கேமரா மோட்களும் வழங்கப்படுகிறது.



    மூன்று பிரைமரி கேமரா லென்ஸ்களில் வழக்கமான லென்ஸ், வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் போர்டிரெயிட் மோட் புகைப்படங்களை எடுக்கும் கேமரா இடம்பெறும் என தெரிகிறது. டீசர்களில் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன,.

    புதிய எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் பேக் மற்றும் பிளாக், புளு, கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் விலை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் இதய துடிப்பு சென்சார் கொண்ட புதிய ஃபிட்னஸ் டிராக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் எக்ஸ்பேண்ட் 3 ஃபிட்னஸ் டிராக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 0.96 இன்ச் கலர் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது வெவ்வேறு அம்சங்களை இயக்க உதவும் ஐான்களை டிஸ்ப்ளே செய்யும்.

    புதிய ஃபிட்னஸ் டிராக்கர் கொண்டு இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும் என இன்ஃபினிக்ஸ் அறிவித்துள்ளது. புதிய ஃபிட்னஸ் டிராக்கர் IP67 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதன் ஸ்டிராப் டி.பி.யு. மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது கைகளில் சவுகரிய அனுபவத்தை வழங்கும்.

    இன்ஃபினிக்ஸ் எக்ஸ்பேண்ட் 3 சாதனத்தை ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஓ.எஸ். 9.0 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்த முடியும்.



    இன்ஃபினி்க்ஸ் எக்ஸ்பேண்ட் 3 சிறப்பம்சங்கள்:

    - 0.96 இன்ச் 160x80 பிக்சல் TFT-LCD ஸ்கிரீன்
    - ப்ளூடூத் 4.1
    - நடை, உறக்கம், கலோரி அளவு உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி
    - டிஸ்ப்ளேவில் நேரம், தேதி, அலாரம், வானிலை விவரங்கள்
    - ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன், ரிமைன்டர், மியூசிக் கண்ட்ரோல் வசதி
    - ஷட்டர் அம்சம் ஸ்மார்ட்போன் கேமராவை இயக்கும்
    - PPG இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்த சென்சார்
    - 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
    - உயற்பயிற்சி, உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)
    - 90 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் எக்ஸ்பேண்ட் 3 சாதனம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் சாதனங்களுக்கென பிரத்யேகமாக புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் சாதனங்களுக்கென பிரத்யேகமாக ஐபேட் ஒ.எஸ். இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஒ.எஸ். இயங்குதளத்தில் புதிய ஹோம் ஸ்கிரீன், மல்டி-டாஸ்கிங் ஜெஸ்ட்யூர்கள், மேம்பட்ட ஃபைல்ஸ் ஆப், சிறப்பான டெக்ஸ்ட் எடிட்டிங் அனுபவம் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது.

    சஃபாரியில் டெஸ்க்டாப் தர பிரவுசரிங் அனுபவம் ஐபேட் ஒ.எஸ். இயங்குதளத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கிறது. இவற்றுடன் டார்க் மோட், கஸ்டம் ஃபாண்ட்கள், ஃபுளோட்டிங் கீபோர்டு, ஸ்வைப் சார்ந்த டைப்பிங் உள்ளிட்டவையும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.



    ஐபேட் ஒ.எஸ். இன் ஹோம் ஸ்கிரீனில் விட்ஜெட்களை சேர்க்கும் வசதியுடன் அவற்றில் இருந்து விவரங்களை பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது. புதிய அம்சங்களுடன் டெக்ஸ்ட் எடிட்டிங் ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய இயங்குதளத்தை பயன்படுத்தும் போது ஐபேடில் செயலிகளிடையே மாற இனி ஸ்லைடு ஓவர் செய்தாலே போதுமானது. 
     
    ஆப்பிள் பென்சில் மூலம் திரையின் மேல்புறம் ஸ்வைப் செய்தால் இணைய பக்கங்கள், தரவுகள் மற்றும் மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். புதிய ஐபேட் ஒ.எஸ். ஆப்பிள் பென்சில் சாதனத்திற்கு பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது.



    ஐபேட் ஒ.எஸ். இயங்குதளத்தில் டார்க் மோட், கஸ்டம் ஃபாண்ட் சப்போர்ட், புதிய வடிவமைப்பில் போட்டோஸ் ஆப், மேம்பட்ட ஆப்பிள் மேப்ஸ், வேகமான ஃபேஸ் ஐ.டி. மற்றும் சிறிதளவு அப்டேட் பேக்கேஜ்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ஐபேட் ஒ.எஸ்.  இயங்குதளத்தின் பீட்டா பதிப்பு அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

    புதிய ஐபேட் ஒ.எஸ். ஐபேட் ஏர் 2 மற்றும் புதிய ஐபேட், ஐபேட் ப்ரோ மாடல்களில் இயங்கும். இத்துடன் ஐபேட் மினி 4 மற்றும் ஐபேட் 5 உள்ளிட்டவற்றுக்கும் புதிய ஐபேட் ஒ.எஸ். வழங்கப்பட இருக்கிறது.
    ×