search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி Mi ஏ3 டீசர்
    X
    சியோமி Mi ஏ3 டீசர்

    சியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    சியோமி நிறுவனம் தனது Mi ஏ3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



    சியோமி நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் Mi ஏ3 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கும் அறிவிப்புகளில் புதிய ஸ்மார்ட்போனின் இரு கேமராக்களிலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பற்றி வெளியான தகவல்களில் சியோமி நிறுவனம் இரண்டு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை பாம்பு_ஸ்பிரவுட் மற்றும் காஸ்மோஸ்_ஸ்பிரவுட் என்ற குறியீட்டு பெயர்களில் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.



    சமீபத்தில் வெளியான விவரங்களில் M1906F9SH எனும் மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் FCC வலைத்தளத்தில் சான்று பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் Mi ஏ3 அல்லது ஏ3 லைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இதில் Mi சிசி9 மற்றும் சிசி9இ போன்ற கேமரா அமைப்பு மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட இருப்பது உறுதியானது.

    சியோமி தனது Mi சிசி9 மற்றும் சிசி9இ ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் Mi ஏ3 மற்றும் ஏ3 லைட் ஸ்மார்ட்போன்களும் இதேபோன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    கடந்த ஆண்டு சியோமி தனது Mi ஏ2 மற்றும் ஏ2 லைட் ஸ்மார்ட்போன்களை ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்த நிலையில், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
    Next Story
    ×