search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி நோட் 10 டீசர்
    X
    கேலக்ஸி நோட் 10 டீசர்

    இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 ரென்டர்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 10 ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    இம்முறை ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது தெளிவாகி இருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனை பார்க்க ஹூவாய் பி30 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் உருவாகி வருவதும் உறுதியாகியிருக்கிறது.

    முன்புறம் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் மேல்புறம் மற்றும் கீழ்புறங்களில் மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பன்ச் ஹோல் செல்ஃபி கேமராவும் காணப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் எஸ் பென் இம்முறை வட்ட வடிவம் கொண்டிருக்கிறது.

    கேலக்ஸி நோட் 10 ரென்டர்

    ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரென்டர்களிலும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் காணப்படாத நிலையில், ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் பிக்ஸ்பி மற்றும் பவர் பட்டன்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நான்கு பெரிய கேமராக்கள், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
    Next Story
    ×