search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சோனி வாக்மேன் - கோப்புப்படம்
    X
    சோனி வாக்மேன் - கோப்புப்படம்

    வைஃபை, ப்ளூடூத் வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகும் சோனி வாக்மேன்

    சோனி நிறுவனத்தின் புதிய வாக்மேன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் வைஃபை, ப்ளூடூத் வசதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



    சோனி நிறுவனத்தின் வாக்மேன் சாதனங்கள் உலகம் முழுக்க பிரபலமானவையாக இருக்கின்றன. கடந்த மாதம் 40-வது ஆண்டு விழாவை கடந்த சோனி வாக்மேன் சாதனம் பல்வேறு வடிவங்களில், வெவ்வேறு அம்சங்களுடன் காலத்திற்கு ஏற்ப வெளியாகி பயனர்களை கவர்ந்திருக்கின்றன.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சோனி நிறுவனம் புதிய வாக்மேன் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    NW-A100 எனும் மாடல் நம்பர் கொண்ட புதிய சாதனம் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வலைத்தளத்தில் இருந்து லீக் ஆகியிருக்கிறது. புதிய டிஜிட்டல் மியூசிக் பிளேயர் பற்றி சிறிதளவு விவரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. அந்த வகையில், புதிய சோனி வாக்மேன் வைபை கனெக்டிவிட்டி (2.4/5.0GHz) கொண்டிருக்கும் என உறுதியாகியுள்ளது.

    சோனி வாக்மேன் - கோப்புப்படம்

    இத்துடன் ப்ளூடூத் 5.0 வசதி மூலம் வயர்லெஸ் மியூசிக் அனுபவத்தை பெற முடியும். என்.எஃப்.சி. கனெக்டிவிட்டி ஆப்ஷன் மூலம் வயர்லெஸ் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. புதிய வாக்மேன் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இதனால் இது எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    வைபை கனெக்டிவிட்டி இருப்பதால் புதிய வாக்மேன் கொண்டு கோபுஸ், டைடல், ஸ்பாடிஃபை போன்ற சேவைகளையும் பயன்படுத்த முடியும். சோனி வாக்மேன் சாதனம் பிளேபேக் DSD, WAV மற்றும் FLAC ஃபைல்களை இயக்கும் வசதியை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய வாக்மேன் சாதனத்தை சோனி நிறுவனம் பெர்லின் நகரில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்நிகழ்வு செப்டம்பர் 6 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×