என் மலர்
தொழில்நுட்பம்

சியோமி டீசர் மீடியாடெக் பிராசஸர்
ரெட்மி நோட் 8 வேற லெவல் அம்சங்களை கொண்டிருக்கும் - சியோமி தகவல்
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அது வேற லெவல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என சியோமி நிறுவன பொது மேலாளர் தெரிவித்தார்.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் போட்டி நிறுவன மாடல்களை விட சக்திவாய்ந்ததாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் பற்றிய புதிய விவரம் ரெட்மி பிராண்டு தலைவர் லு வெய்பிங் வழங்கியிருக்கிறார்.
புதிய ஸ்மார்ட்போன் தகவலை லு வெய்பிங் தனது வெய்போவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக தெரிவித்தார். இதுதவிர M1906GT எனும் மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீன வலைத்தளத்தில் லீக் ஆனது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா அல்லது மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
வெய்போவில் கேட்கப்பட்ட கேள்விக்கு லு வெய்பிங் அளித்த பதிலில், ரெட்மி நோட் 8 உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அது சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் என்று தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி சிப்செட் வழங்கப்படலாம்.

ஏற்கனவே மீடியாடெக் பிராசஸர் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக சியோமி தெரிவித்தது. இது 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட முதல் ரெட்மி ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் டீசரையும் சியோமி வெளியிட்டிருந்தது.
இவைதவிர M1906GT எனும் மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் சீனாவில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வலைத்தளத்தில் லீக் ஆகியிருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இது ரெட்மி கேமிங் ஸமார்ட்போன் என்றும் இதில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Next Story






