
தெர்மோ எலெக்ட்ரிக் அடிப்படையில் இது குளிர்ச்சியை அளிக்கும். ரியோன் பாக்கெட் ஏ.சி. கருவியானது ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரியில் செயல்படுகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரம் செயல்படும். இந்த ஏ.சி. சாதனம் எடை குறைவானது (85 கிராம்), அதாவது வழக்கமாக பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் எடையை விட இது குறைவானதாகும்.

ஆனால் இதை மானுவலாகத்தான் செயல்படுத்த முடியும். மற்றொரு மாடலான பாக்கெட் ஸ்டாண்டர்டு ஸ்மார்ட்போன் மூலமும், மானுவலாகவும் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதிய மாடல்களில் ஆட்டோமேடிக் வசதியும் இடம்பெறும் என்று நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வறுத்தெடுக்கும் வெயிலில் இந்த கருவி பலரிடம் சோதித்துப் பார்க்கப்பட்டது. அதில் இதை அணிந்திருந்தவர்கள் 13 டிகிரி வரையிலான குளிர்ச்சியை பெற்றனர். அதேபோல கடுங்குளிர் காலத்தில் உடலின் வெப்ப நிலையை 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கவும் செய்யும். ரியோன் பாக்கெட் விலை ரூ.8,091 முதல் ரூ.12,067 வரை விற்பனையாகிறது.