search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ கே5
    X
    ஒப்போ கே5

    64 எம்.பி. குவாட் கேமராவுடன் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம்

    ஒப்போ நிறுவனத்தின் புதிய கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 64 எம்.பி. குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.



    இணையத்தில் பலமுறை லீக் ஆன ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கே5 ஸ்மார்ட்போனில்  நான்கு பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், கிரேடியன்ட் பேக் பேனல் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ கே5 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 119 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ, இரண்டு 2 எம்.பி. கேமரா, f/2.4 மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ கே5

    ஒப்போ கே5 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 64 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4,1.75μm பிக்சல்
    - 2 எம்.பி. 4செ.மீ. மேக்ரோ, f/2.4,1.75μm பிக்சல்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    Next Story
    ×