search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா ரேசர்
    X
    மோட்டோரோலா ரேசர்

    மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ரேசர் மடிக்க்ககூடிய ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனம் நவம்பர் 13 ஆம் தேதி நிகழ்வு ஒன்றுக்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் மோட்டோரோலா தனது ரேசர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோவின் பிரபல ரேசர் பிராண்டிங்கில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. அழைப்பிதழ்களில் மோட்டோரோலா “அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சின்னம் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது. 

    புதிய மோட்டோ ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருதாக மோட்டோரோலா ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து மோட்டோவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரேசர் ஃப்ளிப் போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

    மோட்டோ ரேசர் டீசர் ஸ்கிரீன்ஷாட்

    மோட்டோ நிகழ்வுக்கென மோட்டோ வெளியிட்டிருக்கும் ஜிஃப் படம் பழைய ரேசர் போனின் ஹின்ஜ் புதிய வடிவமைப்பை பெறுவதை குறிக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வைட், பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் இதில் 2730 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். மெமரியை பொருத்தவரை 4 ஜி.பி. அல்லது 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. அல்லது 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×